சூர்யா ௧ண்ணன்

Windows Media Player -ல் Screenshot எடுக்க..,

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மார்ச் 31, 2009

உங்கள் கணினி திரையில் தோன்றும் அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் (Screenshot) எடுப்பது மிகவும் எளிது..

Print Scrn Key ஐ அழுத்தி பின் Paint போன்ற இமேஜ் எடிட்டரில் பேஸ்ட் செய்தால் போதும்.

ஆனால், விண்டோஸ் மீடியா பிளேயரில் (Windows Media Player) ஏதாவது வீடியோவை பிளே செய்து ஒரு குறிப்பிட்ட ஸ்டில் மட்டும் எடுக்க மேற்சொன்ன வழியில் முயற்சித்துப் பார்த்தால் படம் வரவேண்டிய இடத்தில் கருப்பு ஸ்கிரீன் மட்டுமே வரும்.

இதை எப்படி செய்ய முடியும்?

எளிதான வழி.

Capture – ஐ support செய்யும் பிளேயரை (VLC Player போன்றவை) உபயோகப்படுத்தலாம். ‘Video > Capture to capture a video frame ‘ -ல் கிளிக் செய்தால் போதும்.

இல்லை அதுவெல்லாம் முடியாது.., விண்டோஸ் மீடியா பிளேயரில்தான் Screenshot எடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தால் இதோ ஒரு வழி..,

Windows Media Player – > Tools -> Options -> Performance -> Advanced சென்று அதில் ‘Use Overlays‘ என்பதை ‘Un check ‘ செய்து OK கொடுத்து விடுங்கள்.

இப்பொழுது ‘Print Scrn ‘ கீ முறையில் முயற்சித்துப் பாருங்கள்.

என்ன வெற்றி தானே?

Windows XP-ல் Shut Down நேரத்தை குறைக்க..,

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மார்ச் 30, 2009

நாம் ShutDown கொடுத்தபிறகு சர்விஸஸ்களையும், திறந்திருக்கும் புரொகிராம்களையும் மூடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், என்பதை விண்டொஸில் உள்ள சில ரிஜிஸ்டரி பதிவுகளே தீர்மானிக்கின்றன.

இந்த ரிஜிஸ்டரி பதிவுகளை மாற்றுவதன் மூலம் Windows XP யை விரைவாக ஷட் டவுன் செய்திட முடியும்.

Start->Run-> Regedit சென்று

‘HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\’ என்ற கீயில் கிளிக் செய்துவலதுபுறம் உள்ள லிஸ்டில் ‘WaitToKillAppTimeout’ என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value ஐ 1000 என மாற்றவும். (1000 என்பது ப்ரொஸஸ்களையும், சர்விஸ்களையும் மூடுவதற்கு Windows XP எடுத்துக்கொள்ளும் மில்லி செகண்டுகளை குறிக்கிறது)

பிறகு,

‘HKEY_CURRENT_USER\Control Panel\Desktop’ என்ற கீயில் கிளிக் செய்து வலதுபுறம்உள்ள லிஸ்டில் ‘AutoEndTasks.’ என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value
1 என மாற்றவும்.

அவ்வளவுதான்.

இனி நீங்கள் வித்தியாசத்தை காணமுடியும்.

ஷட் டவுனுக்கு ஒரு ஷார்ட்கட்:-

டெஸ்க்டாபில் ரைட் கிளிக் செய்து New-> Shortcut சென்று

கீழ்கண்ட Command-ஐ காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்து அதற்கு Fast Shutdown என பெயரிட்டு வைத்துக்கொள்ளலாம்.

%windir%\System32\shutdown.exe -s -f -t 00

குறிப்பு:-
மேற்கண்ட டிப்ஸை உபயோகித்து ஷட் டவுன் செய்வதற்கு முன், அனைத்து வேலைகளையும் சேமித்துக் கொள்ளவும்.

ஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Contents) எப்படி எடுப்பது?

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மார்ச் 25, 2009

ஒரு ஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Contents) எப்படி எடுப்பது?

வழி இருக்கிறது (DOS Prompt ல் எளிதாக செய்யலாம்) விண்டோஸில் இதனை எளிதாக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.

சிறு தவறுகள் வரலாம் முக்கியமாக எக்ஸ்போளரரில், அதற்கும் ஒரு ரெஜிஸ்டரி எடிட் வழியையும் தந்திருக்கிறேன். தவறுகள் இருந்தால் பொறுத்துக்கொண்டும், ஐடியா இருந்தால் தயவுசெய்தும் பின்னூட்டம் இடவும்.

சிறிய ஃபோல்டராக இருந்தால், போல்டரை திறந்து ஒவ்வொன்றாக பார்த்து எழுதிக் கொள்ளலாம். ஒருவேளை நூற்றுக்கணக்கில் கோப்புகளை வைத்திருந்தால் (எம்பி3 பாடல்கள்) என்ன செய்வது?

நோட்பேடை திறந்து கீழ்கண்ட வரிகளை அதில் டைப் செய்யவும்,

@echo off
dir %1 /o /b :g>c:\filelist.txt
start/w notepad c:\filelist.txt
exit

பின் அதனை C டிரைவில் ‘C:\Dir_List.bat என்ற பெயரிலோ அல்லது உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வேறு பெயரையோ வைத்துக்கொள்ளவும்.

இப்பொழுது இந்த பேட்ச் ‘Batch’ பைல் நமக்கு தேவையான வேலையை செய்யும். இதை நாம் மவுஸை ரைட் கிளிக் செய்தால் வரும் ‘Context Menu’ மெனுவில் கொண்டுவருவது எப்படி என்பதை பார்ப்போம்.

Windows Explorer/My computer திறந்து அதில் Tools > Folder Options > File Types. க்கு சென்று ‘File Folder’ என்ற file type – செலக்ட் செய்து, பிறகு Advanced button –ல் கிளிக் செய்து அதில் வலப்புறமாக உள்ள New பட்டன் கிளிக் செய்து அதில் , Action Field = ‘Folder Contentsஎனவும் ‘Application to be used to perform this action’ field –ல் C:\Dir_List.bat கொடுத்து OK மூன்று முறை கிளிக் செய்து க்ளோஸ் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் வேறு எதையும் செய்வதற்கு முன்பாக ஏதாவது ஒரு ஃபோல்டரை ஓபன் செய்து பார்க்கவும். சில சமயங்களில் ‘Open With’ என்று வந்தாலும் வரலாம்.

இதை சரி செய்ய Registry Editor – திறந்து அதில்
HKEY_CLASSES_ROOT\Directory\shell\. இன் default value Explorer என மாற்றிக்கொண்டு கணினியை Restart செய்யவும்.

இனி எந்த ஃபோல்டரில் உள்ள Contents வேண்டுமோ, அந்த ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து அதில் ‘Folder Contents’ கிளிக் செய்து பாருங்கள்.

Invisible Drive ஐ உருவாக்க …,

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மார்ச் 24, 2009

ஒரு குறிப்பிட்ட டிரைவை My Computer லிருந்து மறைய வைக்க ஒரு டிரிக்..,

Start சென்று Run -ல் ‘Regedit ‘ என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இதில் கீழ்கண்ட லொகேஷனுக்கு செல்லவும்.

HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

அதில் ‘Explorer’ ல் ரைட் பட்டன் கிளிக் செய்து New மற்றும் “DWORD Value” ஐ தேர்வு செய்து அதற்கு ‘NoDrives’ என பெயரிடவும்.

பிறகு NoDrive ஐ இரண்டு முறை கிளிக் செய்து, அதனுடைய Properties ல் ‘Base Unit ல் Decimal ஐ தேர்வு செய்யவும்.

பிறகு எந்த டிரைவை மறைக்க வேண்டுமோ அதனுடைய வேல்யூவை கொடுக்கவும்.

A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G: 64
H: 128
I: 256
J: 512
K: 1024
L: 2048
M: 4096
N: 8192
O: 16384
P: 32768
Q: 65536
R: 131072

S: 262144
T: 524288
U: 1048576
V: 2097152
W: 4194304
X: 8388608
Y: 16777216
Z: 33554432
All: 67108863

நீங்கள் உங்களுடைய ‘E’ டிரைவை மறைக்க விரும்பினால் வேல்யூ – 16 என்று கொடுக்கலாம். இதில் சிறப்பான ஒரு செய்தி என்னவென்றால், ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ் களை மறைக்க வேண்டுமெனில் அதனுடைய மதிப்பை மட்டும் கூட்டினால் போதுமானது. உதாரணமாக ‘E’ ஐயும் ‘G’ டிரைவையும் மறைக்க மதிப்பு -80, அதாவது 64+16.

இப்பொழுது உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும். அவ்ளோதான்!

உங்கள் டிரைவ் மறைந்து விடும்.

மறுபடியும் தோன்ற வைக்க Registry -ல் அந்த குறிப்பிட்ட Key Value ஐ 0 ஆக மாற்றினாலோ அல்லது அந்த Key ஐ Delete செய்தாலோ போதுமானது.

குறிப்பு:

உங்கள் ‘C’ (System Drive) டிரைவை மறைக்க முடியாது

அறிவிப்பு பகுதியில் உங்கள் பெயரை வரவைக்க வேண்டுமா?

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மார்ச் 23, 2009

விண்டோசில் டாஸ்க் பாரில் உள்ள அறிவிப்பு பகுதியில் (Notification Area) எப்பொழுதும் நீங்கள் விரும்பும் பெயரை வரவைக்க..,

Control Panel -> Regional and Language Options -> Customize -> Time சென்று AM Symbol, PM Symbol என்ற கட்டங்களில் தேவையான டெக்ஸ்டை டைப் செய்து Time Format= hh:mm:ss tt என மாற்றி Apply & OK கொடுத்தால் போதும்

அப்பா! எறும்புக்கு எத்தனை கால்கள்?

Posted in பொது by suryakannan on மார்ச் 21, 2009

அப்பா! எறும்புக்கு எத்தனை கால்கள்?
என்று என் மகள் கேட்டபொழுது, ஒருகணம் திணறி 6 என சொல்லிவிட்டேன். பிறகு இணையத்தில் அலசிய பொழுது..,

1. எறும்புக்கு 6 கால்கள் உள்ளன. ஒவ்வொரு காலிலும் 3 இணைப்புகள் உள்ளன. எறும்பின் கால்கள் மிகவும் வலிமையானவையாக இருப்பதால் அதனால் மிக வேகமாக ஓடமுடியும். ஒரு மனிதனின் உடல் தகுதிக்கு ஏற்றவாறு எந்த வேகத்தில் ஓட முடியுமோ, அதேபோல் எறும்பினாலும் முடியும். எறும்பினால் அதன் உடல் எடையைப் போல 20 மடங்கு எடையை தூக்கமுடியும்.

2. எறும்பின் மூளையில் 2,50,000 மூளைச் செல்கள் உள்ளன. மனிதனின் மூளையில் 10,000 மில்லியன் எனவே, 40,000 எறும்பு கூட்டங்களின் மொத்த முளை ஒரு மனிதனின் மூளைக்கு சமம்.

3. எறும்புகளின் ஆயுட்காலம் 45 முதல் 60 நாட்கள்.அதன் உணர்வு கொம்புகள், தொடுதலுக்கு மட்டுமல்ல, நுகர்வதற்கும்தான்.

4. இரு தாடைகள் உள்ளன. அவை ஒரு கத்திரிக்கோல் போல பக்கவாட்டில் மூடும்படி இருக்கும். பெரிய எறும்பினால் உணவை மெல்ல முடியாது. எனவே அவைகள் உணவில் திரவத்தை உறிஞ்சிக்கொண்டு திடப்பொருளை துப்பிவிடும்.

5. இரண்டு கண்கள் உள்ளன. ஒவ்வொரு கண்ணிலும் ஏகப்பட்ட கண்கள் உள்ளன. இவற்றை கூட்டுக்கண்கள் என்கிறோம்.

6. அவற்றிற்கு வயிற்றுப்பகுதி இரு பிரிவாக உள்ளது, ஒன்று தனக்கன உணவிற்கும், மற்றொன்று சக எறும்புகளுடன் பகிர்வதற்கும்.

7. எறும்புகளில் 10,000 க்கும் மேற்ப்பட்ட இனங்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 1 அல்லது அதற்கு மேற்பட்ட ராணி எறூம்புகள் உண்டு.

8. ராணி எறும்பின் வேலை முட்டை இடுவது. அவற்றை வேலைக்கார எறும்புகள் கவனித்துக் கொள்ளும். வேலைகார எறும்புகளுக்கு இனப்பெருக்கத் திறன் கிடையாது. அவற்றின் வேலை உணவு சேகரிப்பது, சிறுசுகளை கவனித்துக் கொள்வது மற்றும் தங்கள் வீட்டை எதிரிகளிடமிருந்து காப்பது.

9. சிலவகை சிவப்பு எறும்புகளுக்கு கூர்மையான கொடுக்கு உண்டு.பிற கறுப்பு மற்றும் மர எறும்புகளுக்கு கொடுக்கு கிடையாது. ஆனால், Formic acid ஐ பீச்சி அடிக்கும். சிலவகை பறவைகளில் உள்ள ஒட்டுண்ணிகளை இந்த Formic. acid அழிக்கவல்லது.

10. எறும்புகளில் இராணுவ எறும்புகளும், விவசாய எறும்புகளும் கூட உண்டு.

About Alexa:-

First off, Pagerank is a value for web pages, not entire websites. This means each one of your web pages will have it’s own unique Pagerank value. Alexa is a site wide value.

First, auto surf programs and services are a waste of time, they don’t provide any targeted traffic and are usually just bots roaming through their members list mimicing traffic. I would stay away from any auto surfing programs. Using these is also a violation of most publisher ad network programs (AdSense, ValueClick, YPN, etc).

Futher, don’t use Alexa for any ranking data, they don’t even have %0.5 of internet users using the Alexa toolbar, so the data is very inaccurate and not useful to anyone. Actually the whole “ranking” thing is a cover for the fact Alexa is SPYWARE. This toolbar tracks everything you do in your web browser and reports it to a main server, which is then resold to marketing analysis groups. Alexa does not care about rankings, they want your data to resell!
Source(s):
http://www.civicseo.com – a search engine optimization knowledge database.

"Open with" என்று வருகிறதா?

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மார்ச் 20, 2009

My Computer –ல் ஏதாவது டிரைவை திறக்க முயற்சிக்கும் பொழுது ” Open with” என்று வருகிறதா?

நோட்பேடிற்கு (Note Pad) சென்று அதில் ஒன்றும் டைப் செய்யாமல் “autorun.inf” எனப் பெயரிட்டு சேமித்துக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் கணிணியில் எந்த டிரைவை திறக்கும்பொழுது “Open with” செய்தி வருகிறதோ அந்த டிரைவில் இந்த கோப்பை காப்பி செய்துவிட்டால் போதுமானது.

இனி அந்த பிழை வராது.

இந்த முறையிலும் சரியாகவில்லையெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

உங்கள் கோப்புகளை நொடியில் தேட..

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மார்ச் 20, 2009

கணினியில் ஒரு குறிப்பிட்ட ‘ text ‘ உள்ளடக்கியுள்ள கோப்பை தேடவேண்டுமென்றால், நாம் வழக்கமாக ‘Search’ க்கு போய் ‘ File type’ ஐயும் ‘Containing text’ ஐயும் கொடுத்து தேட சொல்வோம்.

ஆனால் மேற் குறிப்பிட்ட முறையில் கோப்புகளை தேட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

மற்றொரு வழியும் உள்ளது.

‘Control panel ‘ க்கு சென்று ‘ Administrative Tools’ ஓபன் செய்து கொள்ளவும். இதில் ‘Computer Management – > Services and Applications -> Indexing Service -> System -> Query the Catalog’ சென்று
Enter your free text query below:

என்ற இடத்தில் தேடப்போகும் கோப்பில் உள்ள ஏதாவது ‘ text’ ஐ டைப் செய்து ‘Search’ கொடுக்கவும்.

என்ன விரல் சொடுக்கும் நேரத்தில் உங்கள் தேடுதல் முடிந்துவிட்டதா?

சில சமயங்க்களில் ‘Service is not running ‘ என்று பிழை செய்தி வந்தால், ‘Control panel -> Administrative Tools -> Services ‘ -ல் ‘Indexing Service ‘ சென்று அதில் ‘Start ‘ அல்லது ‘Startup type -ல் Automatic ‘ என்று கொடுக்கவும்.