சூர்யா ௧ண்ணன்

நெருப்பு நரி உலவியில் எளிதாக உலவ சில வழிமுறைகள்..,

Posted in நெருப்புநரி, Firefox Tips and Tricks by suryakannan on ஓகஸ்ட் 31, 2009

உலவும் திரையின் அளவை மேலும் பெரிதாக்க..,
View – Toolbars – Customize சென்று “Use Small Icons”. என்பதை தேர்வு செய்யுங்கள்.

கீபோர்டு ஷார்ட்கட்:-

Space: Scroll down செய்ய.
Shift + Spacebar: Scroll up செய்ய.
Ctrl + D: வலைப்பக்கத்தை புக்மார்க்ஸ் செய்ய.
Ctrl + T: புதிய டேபை திறக்க.
Ctrl + K: Search Box ஐ ஃபோகஸ் செய்ய.
Ctrl + L: Address bar க்கு செல்ல.
Ctrl + +: எழுத்துக்களின் அளவை பெரிதாக்க.
Ctrl + -: எழுத்துக்களின் அளவை சிறிதாக்க.
Ctrl-W: Current tab ஐ மூட.
F5: Refresh அல்லது Reload செய்ய.
Alt + Home: உங்களுடைய homepage இற்கு செல்ல.

Ctrl + Tab: அடுத்த டேபிற்கு செல்ல.
Ctrl + Shift + Tab: முந்தைய டேபிற்கு செல்ல.
Ctrl +1-9: குறிப்பிட்ட டேப் எண்ணிற்கு செல்ல.,

ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கத்திற்கு செல்ல (உதாரணமாக GOOGLE) அட்ரஸ் பாரில், http://www.google.com என டைப் செய்வார்கள். எளிதான வழி.,
அட்ரஸ் பாரில் google என டைப் செய்து Ctrl+Enter கீயை அழுத்தினால் அதுவாகவே “www” மற்றும் “.com” ஐ சேர்த்துக்கொள்ளும்.
தேவையான வலைப்பக்கம் “.net” ஆக இருந்தால் Shift+Enter. “.org” ஆக இருந்தால் Ctrl+shift+Enter.

மௌஸ் ஷார்ட்கட்:-

தேவையான லிங்கில் ஸ்க்ரோல் பட்டனை (Center Button) அழுத்தினால் புதிய டேபில் வலைப்பக்கம் திறக்கும்.

Shift + Wheel down: முந்தைய பக்கத்திற்கு செல்ல.
Shift + Wheel up: அடுத்த பக்கத்திற்கு செல்ல.
Ctrl + Wheel up: எழுத்துக்களை சிறிதாக்க.
Ctrl + Wheel down: எழுத்துக்களை பெரிதாக்க.
டேபில் வைத்து ஸ்க்ரோல் பட்டனை அழுத்தினால் அந்த டேப் மூடிவிடும்.

Advertisements

உபுண்டு Transformation Pack உங்களுக்காக..,

Posted in உபுண்டு ட்ரிக்ஸ் by suryakannan on ஓகஸ்ட் 31, 2009

விண்டோஸ் Vista விற்கான Ubuntu Transformation Pack இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

தரவிறக்கம்.

சக பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு.

வணக்கம்.

தமிழ் 10 தளத்தில் இந்தவார ‘கிரீடம்’ எனக்கு தந்து கௌரவித்திருக்கிறார்கள்.

இந்த கிரீடத்திற்கு என்ன தெரிவு செய்த தமிழ் 10 தளத்திற்கு எனது மனமார்ந்த நன்றி!.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்களோடு பகிர்வதோடல்லாமல், என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணமான சக பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்,
சூர்யா கண்ணன்

குறிப்பு:-

விரிவான இடுகை இடுவதற்கு நேரம் போதாமையால், இடவில்லை. நண்பர் திரு. கிருஷ்ணமூர்த்தி, கேட்டிருந்தது போல்தொழில்நுட்பம் எனக்கு போரடிக்கவில்லை‘ (தொழிலே அதுதானே!, ) விரிவான இடுகையோடு விரைவில் வருகிறேன்.

அருமையான கணினி Morphing

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ், வீடியோ by suryakannan on ஓகஸ்ட் 29, 2009

அருமையான கணினி Morphing

இதை அவசியம் படிங்க.

ஒன்று எங்கள் சாதியே..

Cut & Paste?..,

Posted in Magic by suryakannan on ஓகஸ்ட் 29, 2009

Cut & Paste..,

Align Left

.

உலகத்தின் முதல் லேப்டாப்

Posted in லேப்டாப் by suryakannan on ஓகஸ்ட் 28, 2009

உலகத்தின் முதல் லேப்டாப் ஏப்ரல் 1981 ல் உருவாக்கப்பட்டது.
இதன் பெயர் Osbourne 1.


5″ மானிட்டர்.
64K RAM
Dual 5 1/4″ – 91 K Floppy Drive
24.5 pounds weight.
விலை $1795.00

உண்மைதானா?

உபுண்டு – Synaptic Package Manager ஒரு அலசல்.

Posted in உபுண்டு ட்ரிக்ஸ் by suryakannan on ஓகஸ்ட் 26, 2009
apt-get எனப்படும் Command line கருவியின் எளிமையாக்கப்பட்ட Graphical வடிவமே Synaptic Package Manager ஆகும். (விண்டோசில் Add/Remove Programs போன்றது).

இந்த விண்டோ மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

Package Browser இடது புறமும், Package List வலது மேல் புறத்திலும், Package Details வலது கீழ் புறமும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாம் புதிய மென்பொருள் பேக்கேஜ்களை Install செய்வது மற்றும் ஏற்கனவே பதிந்த பேக்கேஜ்களை remove, configure மற்றும் upgrade அல்லது மொத்த உபுண்டு இயங்குதளத்தையே upgrade செய்து கொள்ளலாம்.

மேலும் புதிதாக நிறுவப்போகும் பேக்கேஜிற்கும் ஏற்கனவே நிறுவியுள்ள பேக்கேஜிற்கும் உள்ள தொடர்புகளை மற்றும் முரண்பாடுகளை அறிவது போன்றவற்றை இந்த Synaptic Package Manager உள்ளடக்கியுள்ளது.

உபுண்டுவில் System > Administration > Synaptic Package Manager. என்பதை கிளிக் செய்தால் Synaptic Package Manager ஐ திறக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட பேக்கேஜின் மேலதிக விவரங்களை அறிய அந்த குறிப்பிட்ட package ல் வலது கிளிக் செய்து Properties சென்றால் தெரிந்து கொள்ளலாம்.

புதிய பேக்கேஜை நிறுவ,

  • Reload என்ற பொத்தானை அழுத்தவும் அல்லது Ctrl+R அழுத்தவும்.
  • தேவையான பேக்கேஜை வலது கிளிக் செய்து context menu வில் உள்ள Mark for Installation என்பதை கிளிக் செய்யவும். (நீங்கள் தேர்ந்தெடுத்த பேக்கேஜிற்கு, துணை பேக்கேஜ் ஏதும் தேவைப்பட்டால் அல்லது ஏதாவது Conflict இருந்தால் கீழ் கண்ட டயலாக் பாக்ஸ் வரும்).
  • இதில் Mark என்பதை கிளிக் செய்யவும்.
  • இதே போன்று தேவையான பேக்கேஜ்களை தேர்ந்தெடுத்த பிறகு Apply கிளிக் செய்யவும்.
  • Apply the following changes என்ற டயலாக் பாக்ஸிலும் Apply என்பதை கிளிக் செய்யவும்.

பேக்கேஜ்களை நீக்க,

  • உங்கள் கணினியிலிருந்து நீக்க விரும்பும் பேக்கேஜை வலது கிளிக் செய்து Context menu வில் Mark for removal என்பதை கிளிக் செய்யவும்.
  • இதே போன்று நீக்க விரும்பும் பெக்கேஜ்களைஎல்லாம் மார்க் செய்த பிறகு Apply கொடுக்கவும்.
  • அனைத்தையும் உறுதி செய்த பிறகு, வரும் உறுதிபடுத்தும் டயலாக் பாக்ஸில் Apply என்பதை கிளிக் செய்யவும்.

பேக்கேஜ்களை அப்கிரேடு செய்ய,

  • மேற்கண்ட முறையிலேயே Mark for upgrade என கொடுக்கலாம்.

இது ஒரு சிறு பகுதி மட்டுமே, நேரம் கிடைக்கும் பொழுது இன்னும் அலசலாம்.

ஒரே கிளிக்கில் கணினியை க்ளீன் செய்வது எப்படி?

Posted in நகைச்சுவை by suryakannan on ஓகஸ்ட் 26, 2009
உங்கள் கணினியை சுத்தம் செய்து ரொம்ப நாளாகிறதா?
கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள்.
க்ளீன்

.

நெருப்பு நரி உலவியில் Smooth Wheel நீட்சி.,

Posted in நெருப்புநரி, Firefox Tips and Tricks by suryakannan on ஓகஸ்ட் 25, 2009
நம்மில் பலர் அதிக நேரம் இணையம் உபயோகிப்பவர்களாக இருப்பதால், மௌஸில் ஸ்க்ரோல் சக்கரத்தை உருட்டி உருட்டியே நடுவிரல் ஒருவழியாகி விடுகிறது. விரல்களில் குடைச்சல் மற்றும் வலி அடிக்கடி வந்து போவது வாடிக்கை.

எனக்கு தொழிலே கணினி என்றாகிவிட்ட பிறகு வலியும், குடைச்சலும் பழக்கமாகிவிட்டது. எப்பொழுதாவது, மருந்து கடைகளில் கிடைக்கும் Finger Grip எனும் சாதனத்தை உபயோகிப்பேன்.

சரி!

இதற்கு மென்பொருள் தீர்வு ஏதாவது உண்டா?

உண்டு! நீங்கள் நெருப்பு நரி உலவியை உபயோகிப்பவராக இருந்தால்..,

கீழ்கண்ட சுட்டியிலிருந்து Smooth Wheel எனும் நீட்சியை பதிந்து கொள்ளுங்கள்.

http://clicks.aweber.com/y/ct/?l=MKKCx&m=1a3Dyc1_QzfhRm&
b=fakc1sMrmGXMunNjc2P_eQ

பிறகு,

Tools -> Add-ons -> Extensions சென்று SmoothWheel(AMO) என்பதில் Options – ல் கிளிக் செய்யவும்.

இதில் Basic Tab இற்கு சென்று Scroll Speed, Step Size Hotkey போன்றவற்றை நம் வசதிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.

Scroll Speed என்பதின் Drop Down மெனுவில் கீழ்கண்ட Option கள் தரப்பட்டிருக்கும்.

Scroll Step Size – Drop Down மெனுவில் ஒரு ஸ்டெப்இற்கு எவ்வளவு பக்கங்கள், என்பது மட்டுமன்றி எவ்வளவு ஸ்க்ரீன் பிக்சல் கள் என்பதை கூட மாற்ற முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

Advanced Tab இற்கு சென்றால் Adaptive Duration, Adaptive Step, Bigger Step, Smaller Step, FPS Limit மற்றும் Enable Soft-edge ஆகியவற்றை மாற்றியமைப்பதன் மூலம், எளிதாக, சிரமமில்லாமல் ‘நடுவிரல் மட்டும் நான்கடி வளர்ந்து விடுமோ’ என்ற பயமில்லாமல் ஸ்க்ரோல் செய்யலாம்.

ஒருவேளை இந்த டிராப் டவுன் லிஸ்டில் உள்ள ஏதாவது ஒன்றை மாற்றினால் என்ன ஆகும் என்ற குழப்பம் இருந்தால் உங்களுக்கு சந்தேகம் உள்ள Option -ல் மௌசின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதற்கான விளக்கம் உங்கள் திரையில் தெரியும். (சூப்பர்!)


உபுண்டு லினக்ஸ் ஐ எளிதாக Install செய்வது எப்படி?

Posted in உபுண்டு ட்ரிக்ஸ் by suryakannan on ஓகஸ்ட் 24, 2009

நெருப்பு நரி உலவியில் Close செய்த TAB மற்றும் Window -ஐ மறுபடியும் திறக்க

Posted in நெருப்புநரி, Firefox Tips and Tricks by suryakannan on ஓகஸ்ட் 20, 2009
நாம் Fire Fox – உபயோகித்துக் கொண்டிருக்கும்பொழுது, ஏதாவது ஒரு TAB ஐ அல்லது Window ஐ தவறுதலாக Close செய்து விட்டு, பிறகு அந்த TAB / Window – திரும்ப கிடைத்தால் நன்றாக இருக்குமே என யோசித்தவர்களுக்கு.

Fire Fox 3.5

History Menu விற்கு சென்று Recently Closed Tabs / Recently Closed Windows -ல் கிளிக் செய்தால் போதும் Restore செய்து விடலாம்.

Shortcut Keys:-

Recently Closed Tabs – Ctrl + Shift + T
Recently Closed Windows – Ctrl + Shift + N