சூர்யா ௧ண்ணன்

க்ளிக் பண்ணுங்க கொண்டாடுங்க..

Posted in பொது by suryakannan on திசெம்பர் 31, 2009

அன்பு நண்பர்களே! 

நாம் வரவிருக்கும் புத்தாண்டில் எல்லாவிதமான வளங்களையும் , நலன்களையும் பெறுவோம் என்று நம்பிக்கையில் 2010- ம் ஆண்டை இனிய மனதுடன்,  நம்பிக்கையோடு வரவேற்போம்!..,

அனைவருக்கும் எனது  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!.., 

அன்புடன்

சூர்யாகண்ணன் 

.
Advertisements

வேர்டு 2007 -இல் தானாகவே தோன்றும் மினி டூல்பாரை நீக்க

Posted in MS Office Tips by suryakannan on திசெம்பர் 30, 2009
நாம் Microsoft Word 2007 உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது டெக்ஸ்டை தேர்வு செய்ய ஹைலைட்  செய்தால் தானாகவே Mini Formatting Toolbar தோன்றிவிடும். 
இந்த வசதி சில சமயங்களில் உபயோகமாக இருந்தாலும், பல சமயங்களில் எரிச்சலூட்டுவதாக அமைந்து விடுகிறது. இந்த Mini Formatting Toolbar நிரந்தரமாக நீக்க முடியாதபடி உருவாக்கப் பட்டிருந்தாலும், நாம் டெக்ஸ்டை ஹைலைட் செய்யும் பொழுது இது தானாகவே தோன்றுவதை தடுக்க ஒரு எளிய வழி.
Word 2007 ஐ திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள Office Button ஐ கிளிக் செய்து Word Options க்ளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் வசனப் பெட்டியில் Popular பொத்தானை சொடுக்குங்கள். வலது புற பேனில் “Show Mini Toolbar on selection”  என்பதை Uncheck செய்து விடுங்கள்.
அவ்வளவுதான்.. இனி இந்த மெனு தானாகவே தோன்றாது. இந்த மெனு தேவையெனில், மாற்றத்திற்கு தேவையான டெக்ஸ்டை தேர்வு செய்து வலது க்ளிக் செய்தால் போதுமானது.
.

Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க

Posted in மென்பொருள் உதவி by suryakannan on திசெம்பர் 29, 2009
கணினி உபயோகிப்பவர்களில் பலர், தாங்கள் உருவாக்கும் கோப்புகள், காப்பி செய்து வைக்கும் கோப்புகள், தரவிறக்கம் செய்து வைக்கும் கோப்புகள் போன்றவற்றை, வன்தட்டில் ஒரு பகுதியில் மட்டுமல்லாமல், சில சமயங்களில் வெவ்வேறு ஃபோல்டர்களில்  அல்லது ட்ரைவ்களில்  சேமித்து வைக்கிறோம். இப்படி செய்வதினால் ஒரே கோப்பு கணினியின் வன்தட்டில் பல இடங்களில் டூப்ளிகேட் ஆகிவிடுகிறது. சில சமயங்களில் வன்தட்டில் இடபற்றாக்குறையும்  இதனால் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது.
இப்படி டூப்ளிகேட் ஆகியிருக்கும் கோப்புகளை கண்டறிந்து நீக்க Fast Duplicate File Finder எனும் மென் பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த மென்பொருளை பதிவது எளிதான காரியமாகும்.

இதனுடைய திரையில் வலதுபுறமுள்ள Scan Subfolders என்பதை தேர்வு செய்து Start Scan பொத்தானை சொடுக்கினால் டூப்ளிகேட் கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். இதன் வேகமும் பாராட்டும்படியுள்ளது.
இதில் பட்டியலிடப்படும்  டூப்ளிகேட்  கோப்புகளில் நமக்கு தேவையில்லாதவற்றை தேர்வு செய்து நீக்கிக் கொள்ளலாம்.
இது நமது பென் ட்ரைவ் போன்றவற்றிலும் சிறப்பாக செயல்பட்டுக் கூடியது. இதனுள் உள்ளிணைக்கப் பட்ட Preview வசதி இதனுடைய சிறப்பம்சம் ஆகும்.
Download Fast Duplicate File Finder


.

விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் பவர் பட்டன்

Posted in விண்டோஸ் ஏழு by suryakannan on திசெம்பர் 29, 2009
விண்டோஸ் 7 -இல் ஸ்டார்ட் மெனுவில் உள்ள பவர் பட்டன் வழக்கமாக Shutdown ஆப்ஷனிலும், விஸ்டாவில் Sleep ஆப்ஷனிலும் இருக்கும். இதனை விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் நமது தேவைக்கு ஏற்றவாறு எப்படி மாற்றியமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
விண்டோஸ் 7 :-
விண்டோஸ் ஏழில் இந்த பணி மிகவும் எளிதானது. Start Button -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். இனி திறக்கும் Taskbar and Start menu Properties விண்டோவில் Start Menu டேபிற்குச் சென்று Power button action என்பதற்கு நேராகவுள்ள drop-down லிஸ்டில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இனி Apply & OK கொடுத்தால் போதுமானது.
விண்டோஸ் விஸ்டா:-
விஸ்டாவில் கொஞ்சம் சுற்று, 
Control Panel  சென்று  Power Options -> Change Plan Settings -> Change Advanced Power Settings க்ளிக் செய்தால் திறக்கும் Power Options விண்டோவில் Advanced Settings டேபில் “Power buttons and lid” என்பதை க்ளிக் செய்யவும்.
இதில் Power button Action என்பது உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் வேர் பவர் பட்டனை குறிக்கிறது. இதில் நீங்கள் மாறுதல் செய்தால், ஸ்டார்ட் மெனுவிற்குச் சென்று ஷட் டவுன் செய்யவேண்டும் என்பதில்லை, CPU வில் உள்ள பவர் பட்டனை ஒரு முறை அழுத்தினால் போதுமானது. 
Start menu power button என்பது ஸ்டார்ட் மெனுவில் உள்ள பவர் பட்டனை குறிக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான Sleep, Hibernate or Shut Down போன்ற  வசதிகளை மாற்றி Apply & OK கொடுக்கவும்.
.

விண்டோஸ் மீடியா ப்ளேயரில் மினி ப்ளேயர்

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on திசெம்பர் 28, 2009
Windows Media Player -ல் நாம் MP3 பாடல்களை திறக்கையில், முழுத் திரையில் Windows Media Player திறப்பதை கவனித்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும், பாடல்களை கேட்பதற்கு முழுத் திரை தேவையில்லை என்பதால்,  பயனர்கள் பலரும்  Mini Player தோற்றத்தையே விரும்புகிறார்கள்.  

ஒவ்வொருமுறையும் மினி ப்ளேயர் மோடிற்கு மாற்றுவதை விட, ஒரு குறிப்பிட்ட கோப்பு வடிவிற்கு மட்டும் (உதாரணமாக MP3) அல்லது ஒரு குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகளுக்கு மட்டும் (உதாரணமாக CD/DVD) நிரந்தரமாக மினி ப்ளேயர் மோடை  Windows Media Player -ல் உருவாக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
Windows Media Player ஐ திறந்து கொண்டு Options பக்கத்திற்கு செல்லுங்கள். இங்கு Player டேபில் “Start the mini Player for file names that contain this text” என்ற டெக்ஸ்ட் பாக்ஸ் இருப்பதை கவனிக்கலாம்.

உங்களுக்கு அனைத்து எம்பி3 கோப்புகளும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் இந்த டெக்ஸ்ட் பாக்ஸில் .mp3 என டைப் செய்யவும்.

குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகள் மட்டும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் அந்த ட்ரைவ் லெட்டரை மட்டிலும் கொடுத்தால் போதுமானது.

இனி Apply செய்தால் போதும், இதற்கு பின்னர் திறக்கப் படும் கோப்புகள் உங்கள் விருப்பப் படி மினி ப்ளேயரில் திறக்கும்.

.

My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on திசெம்பர் 28, 2009
நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?
இதோ உங்களுக்கான தீர்வு..,
My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Boxuncheck செய்து விடுங்கள்.

இனி My computer முன்பை விட வேகமாக திறக்கும்.

.

Excel 2007 -இல் எளிதான Text Wrap வசதி

Posted in MS Office Tips by suryakannan on திசெம்பர் 28, 2009
Excel  2007 -இல் நாம் பணிபுரியும் பொழுது ஒரு குறிப்பிட்ட செல்லில் உள்ள டெக்ஸ்ட், அந்த செல்லின் அகலத்தை விட பெரிதாக இருந்தால், வழக்கமாக நாம் F2 கீயை அழுத்தி தேவையான இடத்தில் Alt+Enter செய்து அடுத்த  வரிக்கு எடுத்துச் செல்வோம். அதன் பிறகு Row height ஐயும் மாற்ற வேண்டியிருக்கும்.
இதற்கு  Excel  2007 -இல் எளிதான  Text Wrap வசதி தரப்பட்டுள்ளது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
இப்படி உள்ள டெக்ஸ்டை அந்த செல்லிலேயே Wrap செய்ய, அந்த செல்லில் கர்சரை நிறுத்தி, ரிப்பன் மெனுவில் Wrap Text பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவுதான்! இப்பொழுது அந்த செல்லின் அகலத்திற்கு ஏற்றவாறு Text Wrap செய்யப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
.

இப்படி இருந்த டெக்ஸ்ட் எப்புடி ஆயிடுச்சு

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on திசெம்பர் 25, 2009
நம்மில் பலர் இன்னமும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.  இதில் நாம் பணிபுரியும் பொழுது வேர்டு, எக்சல் போன்றவற்றில் வேலை செய்யும் பொழுது அல்லது இணைய உலவிகளில் பணி புரியும் பொழுது,  அவற்றில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக அதாவது விஸ்டா, விண்டோஸ் 7  போன்ற இயங்குதளங்களில் உள்ளது போன்று இல்லாமல் கீழே உள்ள படத்தில் உள்ளது போல இருப்பதை கவனித்திருக்கலாம்.
இப்படி உள்ள தோற்றத்தில் பணிபுரியும் பொழுது கண்கள் விரைவில் சோர்வடைந்து விடுகின்றன. இப்படி உள்ள தோற்றத்தை கீழே படத்தில் காண்பிக்கப் பட்டிருப்பது போல தெளிவாக மாற்ற என்ன செய்யலாம்.
மைக்ரோசாப்டின்  ClearType Tuner PowerToy என்ற கருவி இந்த வசதியை தருகிறது. இது ஒரு Control panel applet ஆகும். இதை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு உங்கள் விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் Clear Type Tuner என்ற அப்லெட் உருவாகியிருப்பதை கவனிக்கலாம். இதை ரன் செய்து தொடரும் விசார்டில் நமக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து முடித்தப்பின், இது போன்ற கண்களை உறுத்தாத தோற்றத்தை பெறலாம்.
Download ClearTypeTuner
.

விண்டோஸ் எக்ஸ்பியில் பலூன் அறிவிப்பை நீக்க

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on திசெம்பர் 24, 2009
கணினி உபயோகிப்பவர்களில் சிலர் தாங்கள் உருவாக்கும் கோப்புகள், வலைப்பக்கங்களிலிருந்து சேமித்து வைக்கும் கோப்புகள், படங்கள் ஆகியவற்றை அவர்களது டெஸ்க் டாப்பிலேயே  சேமித்து வைத்து விடுகிறார்கள். சில சமயங்களில் திரை முழுக்க ஐகான்கள் நிரம்பி வழியும்.
இது போன்ற கோப்புகளை சில தினங்கள் கழித்து பார்க்கும் பொழுது ‘இதை எதற்காக சேமித்து வைத்தோம்’ என்பதுகூட மறந்து போகும். இப்படி கேட்பாரற்று கிடக்கும் கோப்புகளை அவதானித்துக் கொண்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளம் சும்மா இருக்குமா?
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை உபயோகிப்பவர்கள் சில சமயங்களில் “There are unused icons on your desktop” என்கிற பலூன் அறிவிப்பை கவனித்திருக்கலாம்.
இந்த பலூன் அறிவிப்பை எப்படி நீக்கலாம்?
Desktop -இல் ஐகான்கள் ஏதுமற்ற பகுதியில் வலது கிளிக் செய்து, Properties க்ளிக் செய்து Display Properties திரைக்கு வாருங்கள். இதில் Desktop டேபிற்குச் சென்று Customise Desktop பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் Desktop Items டயலாக் பாக்ஸில் General டேபில் “Run Annoying Desktop Cleanup Wizard every 60 days” என்பதற்கு நேராக உள்ள Check BoxUncheck செய்துவிடுங்கள்.

அவ்வளவுதான்! இனி மேலே குறிப்பிட்டது போன்ற பலூன் அறிவிப்பு வராது.

.

கோப்புகளை தேர்வு செய்ய Check Box வசதி

Posted in விண்டோஸ் ஏழு by suryakannan on திசெம்பர் 24, 2009
விண்டோஸ் 7 -இல் காப்பி செய்யவோ அல்லது வேறு ஏதாவது நடவடிக்கைக்காகவோ எக்ஸ்ப்ளோரரில் நமக்கு தேவையான கோப்புகளை மட்டும் தேர்வு செய்ய, வழக்கமாக நாம் Shift மற்றும் Control விசைகளை உபயோகித்து தேர்வு செய்வோம். இந்த முறையை நாம் கையாளும்போழுது, சில சமயங்களில் ஏதாவது தவறாக தேர்வு செய்து அவதிபடுவதுண்டு. ஆனால் இதற்கு மாற்றாக கோப்புகளை அல்லது ஃபோல்டர்களை தேர்வு செய்ய Check Box வசதி இருந்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும்.
விண்டோஸ் 7 -இல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. இதனை எப்படி கையாளுவது என்று பார்க்கலாம். முதலில் Start Menu -வில் உள்ள Search Box -இல் Folder Options என தட்டச்சு செய்து என்டர் கொடுக்கவும்.
இனி திறக்கும் Folder Options டயலாக் பாக்ஸில் View டேபில் கிளிக் செய்து, Advanced Settings -இல் Use Check Boxes to Select Items என்பதை தேர்வு செய்து Apply கொடுத்து OK கொடுக்கவும்.
இனி நீங்கள் My Computer அல்லது டெஸ்க்டாப் சென்றால் கோப்புகளை தேர்வு செய்யும்பொழுது, அதனருகில் Check box தோன்றியிருப்பதை பார்க்கலாம்.
இதில் Select All வசதியும் தரப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பு. 
.