சூர்யா ௧ண்ணன்

கூகிள் க்ரோம் வலை உலாவிக்கான பயனுள்ள நீட்சி

Posted in கூகிள் க்ரோம் by suryakannan on ஜனவரி 29, 2010
.
நம்மில் பலர் கூகிள் பயன்பாடுகளான Gmail, Google Reader, Google Calendar, Google Docs போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். இதனை வழக்கத்தைவிட விரைவாக செயல்படுத்த கூகிள் க்ரோம் வலை உலாவியை பயன் படுத்துபவர்களுக்கு உபயோகமாக Google Apps Shortcuts extension என்ற நீட்சி பயனுள்ளதாக உள்ளது. (இந்த நீட்சி கூகிள் க்ரோம் உலாவிக்கானது, தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த நீட்சியை க்ரோமில் நிறுவுவது எளிதான காரியமாகும். இதனை நிறுவிய  பிறகு உங்கள் கூகிள் க்ரோம் உலாவியின் திரையில் “Shortcuts Toolbar Button” மற்றும் கீழே உள்ளது போன்ற செய்தியும் தோன்றும். 
இந்த Shortcuts Toolbar பொத்தானை அழுத்தினால் கீழே உள்ளதைப் போன்ற கீழ்  பட்டியல் தோன்றும். 
இதிலுள்ள Options ஐ க்ளிக் செய்து, தோன்றும் பக்கத்தில் தேவையான மாறுதல்களை செய்து சேமித்துக் கொள்ளலாம். 
இனி தேவையான கூகிள் வசதியை திறக்க கூகிள் க்ரோமில் உள்ள Google Apps Shortcut பொத்தானை அழுத்தி விரைவாக பணிபுரியலாம். 

.
Advertisements

Office 2007 கோப்புகளை Office 2003 -இல் திறக்க

Posted in மென்பொருள் உதவி by suryakannan on ஜனவரி 28, 2010
.
நம்மில் பலர் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2003 பதிப்பையே இன்னமும் பயன் படுத்தி வருகிறோம். இதனால்  சில சமயங்களில் நமது பார்வைக்காக வரும் வோர்ட் (DOCX) அல்லது எக்ஸ்செல் (XLSX) கோப்புகள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பதிப்பில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இது போன்ற சமயங்களில் Office 2007  கோப்புகளை Office 2003 -இல் திறக்க இயலாமல் நிறைய பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனை மனதில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் File Format Converter (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) என்ற கருவியை இலவசமாக அறிமுகப்படுத்தி நெடு நாட்களாகிவிட்டாலும். இது குறித்த சந்தேகம் எழுப்பிய வாசகரின் வேண்டுகோளுக்குப் பிறகுதான் இது குறித்த பதிவு எழுதும் எண்ணம் தோன்றியது.
இந்த கருவியை மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதனை நமது கணினியில் பதிந்து கொள்வது மிகவும் எளிதான காரியமாகும்.
இன்ஸ்டால் செய்து முடிந்த பிறகு வரும் வசனத் திரையில்  OK பொத்தானை அழுத்தவும்.
இந்த கருவியை ஒருமுறை நமது கணினியில் பதிந்து கொண்டால், பிறகு மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007  -இல் உருவாக்கப்பட்ட எந்த ஒரு கோப்பையும் வழக்கம் போல மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2003 -இல் திறக்கவும், மாற்றி அமைக்கவும் முடியும்.
  Microsoft Office Compatibility Pack for Word, Excel, and PowerPoint File Formats

.

PDF கோப்புகளை Word கோப்புகளாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்

Posted in மென்பொருள் உதவி by suryakannan on ஜனவரி 26, 2010
நாம் மின்னஞ்சல் மற்றும் வலைத்தளங்களில் இருந்து எடுக்கும் PDF கோப்புகளை மாற்றியமைக்கவோ அல்லது அதில் உள்ள ஏதாவது டெக்ஸ்ட் / படங்களை நீக்கவோ நமக்கு Adobe Exchange / Acrobat Professional போன்ற மென்பொருட்கள் தேவைப்படும்.
ஆனால் இலவசமாக கிடைக்கும் Free PDF to Word Doc Converter என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்வது மிகவும் எளிதானது. இதனை கணினியில் பதிந்து கொண்ட பிறகு, நாம் வேர்டு டாக்குமென்டாக மாற்ற விரும்பும் PDF கோப்பையும், கன்வெர்ட் செய்த பிறகு அதை எங்கு சேமிக்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்திட வேண்டும்.
 
பிறகு இதன் திரையிலுள்ள General Options என்ற பகுதியில் நமக்கு தேவையான மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்.
(இந்த மென் பொருள் டெக்ஸ்ட் மட்டுமின்றி PDF கோப்பிலுள்ள படங்கள், வடிவங்கள் ஆகியவற்றை சிறிதும் மாற்றமின்றி விரைவாக Editable Word document ஆக மாற்றித்தருகிறது. )
தேவையான மாற்றங்களை செய்த பிறகு Convert to Word Document என்ற பொத்தானை அழுத்தினால் போதுமானது.
உங்களுக்குத் தேவையான மாற்றங்கள் செய்யக் கூடிய வகையிலான வேர்டு கோப்பு தயார்.
தமிழ் கோப்புகளும் மாற்ற முடிகிறது என்பது இதனுடைய சிறப்பம்சம். 
Download Free PDF to Word Doc Converter
 
.

பவர் பாயின்ட் கோப்புகளை ஃப்ளாஷ் கோப்புகளாக எளிதாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்..

Posted in மென்பொருள் உதவி by suryakannan on ஜனவரி 23, 2010
நாம் உருவாக்கும் பவர்பாயின்ட் கோப்புகளை ஃப்ளாஷ்  கோப்புகளாக மாற்றி நமது வலைப் பக்கங்களில் உபயோகிக்க அல்லது நண்பர்கள் எவருக்காவது அனுப்ப ஏதாவது வழி இருக்கிறதா என பதிவுலக நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.
இதோ அவருக்கும் மற்றும் உங்களுக்காக,  பவர் பாயின்ட் கோப்புகளை ஃப்ளாஷ் கோப்புகளாக எளிதாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்.. iSpring Free (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இதனை தரவிறக்கம் செய்து  பதிந்து கொள்வது மிகவும் எளிதான விஷயமாகும்.
இந்த மென் பொருள் பவர் பாயிண்டில் ஒரு Add-on ஐப் போன்று செயலாற்றுகிறது. இதை நமது கணினியில் பதிந்து கொண்ட பிறகு, பவர்பாயின்டை திறந்தால் அதில், புதிய மெனு உருவாகியிருப்பதைப் பார்க்கலாம்.
  இனி நாம் உருவாக்கிய பவர்பாயின்ட் ஸ்லைடு ஷோ கோப்பை திறந்து கொண்டு மேலே மெனுபாரில் உள்ள Publish என்ற பொத்தானை அழுத்தினால் திறக்கும் விண்டோவில் புதிதாக உருவாக்கப் போகும் SWF ஃப்ளாஷ் கோப்பின் பெயர் மற்றும் நமக்கு தேவையான மாற்றங்களை செய்து பப்ளிஷ்  பொத்தானை அழுத்தினால் போதுமானது.
நமது பவர் பாயின்ட் கோப்பில் உள்ள ஸ்லைடுகளின் எண்ணிக்கை மற்றும் அதிலுள்ள படங்களின் அளவுகளைப் பொருத்து ஃப்ளாஷ் கோப்பு உருவாக்கப்படும் நேரம் மாறுபடும்.
அவ்வளவுதான்!.. உங்களுக்கான ஃப்ளாஷ் கோப்பு தயார்!..

PowerPoint to Flash Converter  iSpring Free 
.

 

உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க

Posted in ஜிமெயில் டிப்ஸ் by suryakannan on ஜனவரி 21, 2010

உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க முடியுமா?

முடியும்!

ஜிமெயிலிலிருந்து  உங்கள் ஹாட்மெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்களை படிக்கவும், அதேசமயம் ஜிமெயிலில் இருந்த படியே ஹாட் மெயில் கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்பவும் முடியும்! எப்படி என்பதைப் பார்க்கலாம்.
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேல்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள். இங்கு Accounts and Import என்ற பகுதிக்கு செல்லுங்கள்.
 
இந்த பக்கத்தில் கீழே உள்ள  Check mail using POP3:  என்பதற்கு நேராக உள்ள Add POP3 email account என்ற பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்து திறக்கும்  Add a mail account you own என்ற விண்டோவில் Email address என்ற டெக்ஸ்ட் பாக்ஸில் உங்களுடைய ஹாட்மெயில் விலாசத்தை கொடுத்து Next Step பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்தப் பக்கத்தில் உங்களுடைய windows Live கணக்கினுடைய பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து, கீழே உள்ள settings அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப் படுத்தி (குறிப்பாக நீங்கள் ஜிமெயிலில் படித்த ஹாட்மெயில் மின்னஞ்சலை, ஹாட் மெயிலில் விட்டு வைக்க வேண்டுமா? என்பதற்கு “Leave a copy of retrieved messages on the server”    என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.) பிறகு Add Account பொத்தானை அழுத்துங்கள். 

    POP Server: pop3.live.com
    Port: 995
    Always use a secure connection (SSL) when retrieving mail

அடுத்த திரையில் Yes, I want to be able to send mail as… என்பதை தேர்வு செய்து Next Step க்ளிக் செய்யுங்கள்.
இறுதியாக ஜிமெயிலிருந்து உங்கள் ஹாட் மெயில் கணக்கிற்கு ஒரு வெரிபிகேஷன் மெயில் வரும் அதனை டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்து Verify பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.. இனி உங்கள் ஹாட்மெயில் கணக்கிலுள்ள மின்னஞ்சல்களை ஜிமெயிலில் பார்க்கலாம். அதோடு மட்டுமல்லாமல். ஜிமெயில் Compose திரையில் From க்கு நேராக உள்ள ட்ராப் டவுன் லிஸ்டில் ஹாட்மெயில் கணக்கை தேர்வு செய்து, ஜிமெயிலில் இருந்தபடியே, ஹாட்மெயிலில் மின்னஞ்சல்  செய்யலாம்.

.

எந்தவித வீடியோ கோப்பையும் DVD ப்ளேயரில் பார்க்கும்படியாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்

Posted in மென்பொருள் உதவி by suryakannan on ஜனவரி 20, 2010
கணினியில் நாம் பார்க்கும், உபயோகிக்கும் வீடியோ கோப்புகள் பல வடிவிலானவை, உதாரணமாக AVI, WMV, MPEG, FLASH போன்றவைகள். இது போன்ற மேலும் பலத்தரப்பட்ட வீடியோ வடிவுகளை கணினியில் நாம் கண்டு களிக்கினறோம். இவற்றை நமது வீட்டிலுள்ள DVD ப்ளேயரில் காண முடியுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் DVD ப்ளேயர்கள் ஒரு சில வீடியோ வகைகளை மட்டுமே இயக்கக் கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது போன்ற கோப்புகளை DVD ப்ளேயரில் இயங்கும் படியாக மாற்றுவதற்கு ஒரு சுதந்திர இலவச மென்பொருள் DVD Flick (தரவிறக்கச்  சுட்டி  இறுதியில் தரப்பட்டுள்ளது)

இதனை கணினியில் பதிந்து கொள்வது எளிதானது. இதில் டைட்டில் கொடுப்பது மற்றும் வீடியோ கிளிப்புகளை இணைப்பது எளிதானதுதான்.

AVI, WMV, FLV போன்ற வீடியோ கோப்புகளை நீங்கள் Explorer இல் Browse செய்தோ அல்லது ப்ராஜக்ட் விண்டோவில் ட்ராக் அன்ட் ட்ராப் மூலமாகவோ இணைக்க முடியும்.
இதன் ப்ராஜக்ட் திரை பகுதியில் நீங்கள் இணைத்த வீடியோ கோப்புகளை வரிசை மாற்றுவது, டைட்டில் மாற்றுவது போன்றவற்றோடு, விருப்பத்திற்கேற்ப மெனு வடிவை அமைக்கலாம்.
இதனுடைய Burning  பகுதி மற்ற DVD Burning மென் பொருட்களில் தரப்பட்டுள்ள வசதிகளை உள்ளடக்கியுள்ளது. Burn பட்டனை க்ளிக் செய்தவுடன் வீடியோ கோப்புகள் என்கோடிங் ஆக துவங்கிவிடும். இதற்கு சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு போரடிக்காமல் இருக்க இந்த திரையில் உள்ள Entertain me பொத்தானை க்ளிக் செய்து Tetris விளையாட்டை விளையாடலாம்.
 
அவ்வளவுதான். இனி இந்த DVD ஐ உங்கள் வீட்டு DVD player இல் பயன் படுத்தலாம். இதற்காக பணம் கொடுத்து மென்பொருட்களை வாங்குவதை விட இந்த சுதந்திர இலவச மென் பொருளை பயன் படுத்தி பயன் பெறுங்கள்.
Download DVD Flick
DVD Flick மென் பொருளில் எந்த வகையான கோப்புகளை மாற்ற இயலும் என்பதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும். 

 
.

நமது மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறார்களா?

Posted in ஜிமெயில் டிப்ஸ் by suryakannan on ஜனவரி 16, 2010
ஜிமெயில் பயனாளர்கள் பலர் ஒரு கணினியில் மட்டுமல்லாது பல கணினிகளில் ஜிமெயிலில் பணி புரிகிறார்கள். உதாரணமாக Browsing Centre, அலுவலக கணினி, வீட்டிலுள்ள கணினி, நண்பர்கள் அல்லது உறவினர்களின் கணினி போன்றவற்றில் மின்னஞ்சல் பணிகளை முடித்த பிறகு ஞாபகமறதியால் Sign out செய்யாமல் வந்து விடுகிறார்கள்.  இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். மொத்தமாக நாம் பணி செய்த அனைத்து கணினிகளிலிருந்தும்  ஒரே நேரத்தில் sign out  செய்ய இயலுமா?
மேலும் நமது மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறார்களா? என்பதையும் நாம் அறிந்து கொள்ள ஜிமெயிலில் வசதி தரப்பட்டுள்ளது.

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். Inbox இன் கீழே உள்ள Last account activity என்பதற்கு நேராக உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் Activity Information விண்டோவில் உங்களது கடைசி ஐந்து லாகின் விவரங்கள் தரப்பட்டிருக்கும். இதிலிருந்து உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய இயலும்.
மேலும் இதிலுள்ள Sign out all other sessions என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக மாற்ற  கணினிகளிலிருந்து ஒரே சமயத்தில் Sign out செய்து விட முடியும்.
.

ஜிமெயிலில் அனைத்து மின்னஞ்சல்களையும் ஃபார்வேர்டு செய்ய

Posted in ஜிமெயில் டிப்ஸ் by suryakannan on ஜனவரி 15, 2010
ஜிமெயில் பயனாளர்கள் சிலருக்கு தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு ஆட்டோமெடிக்காக ஃபார்வேர்டு செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். இதனை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்து Settings பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.
இதில் Forwarding and POP/IMAP எனும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இந்த பக்கத்தில் முதலாவதாக உள்ள Forwarding பகுதியில் Forward a copy of incoming mail to என்பதற்கு நேராக உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்து, email address என்ற பகுதியில் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஃபார்வேர்டு செய்ய வேண்டுமோ அந்த முகவரியை டைப் செய்யவும்.
அவ்வளவுதான், இனி அப்படி ஃபார்வேர்டு  செய்த மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு செய்த பிறகு என்ன செய்வது எனபதையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது இதனுடைய சிறப்பம்சம்.
.

விஸ்டா / விண்டோஸ் 7 -ல் வன்தட்டில் பார்ட்டிஷன்களை சுருக்க, விரிக்க மற்றும் உருவாக்க

Posted in விண்டோஸ் ஏழு by suryakannan on ஜனவரி 13, 2010
நாம் புதிதாக மடிகணினி வாங்கும் பொழுது, வழக்கமாக அதில் விண்டோஸ் 7  அல்லது விஸ்டா இயங்குதளம் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும். இப்படி வாங்கிய மடிக் கணினிகளில் பல பேருக்கு ஏற்படுகின்ற சிக்கல் ஒன்று உண்டு. நம்மில் பலர் டெஸ்க் டாப் கணினிகளில் அதிகமாக பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள், அதில் நமக்கு தேவையான கோப்புகளை நமது வசதிக்கு ஏற்றவாறு D,E,F என எந்த   பார்ட்டிஷன்களிலும் வைத்துக் கொள்வது வழக்கம்.

ஆனால் பல மடிக்கணினிகளில் வன்தட்டின் கொள்ளளவு 320GB / 500GB என எவ்வளவு இருந்தாலும், இரண்டு பார்ட்டிஷன்கள் மட்டுமே இருக்கும், அதிலும் ஒன்று (C) இயங்குதளத்திற்கும் மற்றொன்று (D) ரெகவரிக்கும் மட்டுமே இருக்கும். அந்த ‘ரெகவரி பார்ட்டிஷனை தொடாதே’ என எச்சரிக்கை வேறு ஒருபுறம் பயமுறுத்தும். என்ன செய்வது நாமோ D for DATA, G for Games என பழக்கப்பட்டவர்கள். இதற்கு தீர்வாக பார்ட்டிஷன்   மேஜிக் போன்ற பல மென்பொருட்கள் இருந்தாலும், விண்டோஸ் 7  மற்றும் விஸ்டாவில் உள்ளிணைக்கப் பட்டுள்ள வசதியை பயன்படுத்தி,ஏற்கனவே உள்ள C பார்ட்டிஷனின் அளவை குறைத்து, புதிதாக ஒரு பார்ட்டிஷனை எப்படி நிறுவுவது எனப் பார்க்கலாம்.
விண்டோஸ் 7 / விஸ்டாவில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து Control Panel சென்று சர்ச் பாக்ஸில் Partition என டைப் செய்து வரும் லிங்கில் Disk Management திரையை திறந்து கொள்ளுங்கள்.

Disk Management திரையில் நீங்கள் சுருக்க விரும்பும் பார்ட்டிஷனை (உதாரணமாக C Drive) வலது கிளிக் செய்து “Shrink Volume” ஐ கிளிக் செய்யுங்கள்.

இனி திறக்கும் Shrink C: என்ற வசனப் பெட்டியில் அந்த பார்ட்டிஷனை எவ்வளவு சுருக்க வேண்டும் என்பதை MB -யில் கொடுக்க வேண்டும். உதாரணமாக 100 GB அளவுள்ள பார்ட்டிஷனை 80 GB அளவாக சுருக்க Enter the amount of space to shrink in MB என்பதற்கு  நேராக  20000 என கொடுக்க வேண்டும்.

  பிறகு Shrink என்ற பொத்தானை அழுத்தினால் போதுமானது.

இனி உங்கள் வன் தட்டில் Unallocated பார்ட்டிஷன்  ஐ வலது கிளிக் செய்து புதிய பார்ட்டிஷனை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதே போல பார்ட்டிஷனை விரிவு படுத்த உங்கள் வன்தட்டில் உபயோகப்படுத்தாத அதிகப்படியான இடம் இருந்தால் Shrink Volume க்கு முன்னதாக உள்ள Extend Volume எனும் வசதியை தேர்வு செய்து தேவையான பார்ட்டிஷனை விரிவு படுத்தலாம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

.

எளிய தமிழ் ஜாதக மென்பொருள் உங்களுக்காக

Posted in மென்பொருள் உதவி by suryakannan on ஜனவரி 10, 2010
தமிழில் ஜாதகம் தெளிவான விளக்கங்களுடன்.. (எனக்கு இதில் நம்பிக்கை இல்லையென்றாலும் நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க..)
கீழே தரப்பட்டுள்ள லிங்கை காப்பி செய்து உலவியின் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து என்டர் கொடுத்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
http://kewlshare.com/dl/a167bc373ec1/PREDICTT_Tamil_Astro_software__Astrology_in_Tamil.rar.html
.