சூர்யா ௧ண்ணன்

ஃபார்மேட் செய்ய போறீங்களா? கொஞ்சம் நில்லுங்க..

Posted in மென்பொருள் உதவி by suryakannan on ஏப்ரல் 30, 2010
கணினி பயனாளர்கள் தங்களது கணினியின் வன்தட்டை ஃபார்மேட் செய்து மறுபடியும் புதிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, சிஸ்டம் ஃபைல்களில் கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள். 
ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது ‘டிவைஸ் ட்ரைவர் சிடி கையில் இல்லையே?’  என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உங்கள் கிராபிக்ஸ் கார்டு, சவுண்ட் கார்டு, வெப் கேமரா, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்யேகமான டிவைஸ் ட்ரைவர்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால் அந்த டிவைஸ் ட்ரைவர் சீடிக்கள் உங்கள் வசம் இல்லாத பொழுது,  உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ  அல்லது ஒரே கான்பிகரேஷனை கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள்  கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள டிவைஸ் ட்ரைவர்களை  படி எடுத்து  கொடுக்க என மிகவும் பயனுள்ள ட்ரைவர் பேக்கப் மற்றும் ரீஸ்டோர் மென்பொருள் Double Driver (தரவிறக்கச் சுட்டி இறுதியில்..) 
இதிலுள்ள Scan பொத்தானை சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும்  பட்டியலிடப்படும். 
இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup பொத்தானை அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும். 
நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து ட்ரைவர்களும் அதற்கான குறிப்பிட்ட ஃபோல்டர்களில் பேக்கப் ஆகியிருப்பது தனிச் சிறப்பு. 
இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த பேக்கப் ஃபோல்டருக்குச் சென்று இங்குள்ள Double Driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.
Download Double Driver 
.
Advertisements

Windows Defender ஐ நீக்க

Posted in Remove Windows Defender by suryakannan on ஏப்ரல் 29, 2010
விண்டோஸ் விஸ்டா மற்றும் ஏழு இயங்குதளங்களில் Windows Defender உங்கள் டாஸ்க் பாரில் வந்திருப்பதை பார்த்திருக்கலாம். மைக்ரோசாப்ட் இன் இந்த வசதி உங்கள் கணினியை மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களிலிருந்து  காக்கும் பணியை செய்கிறது. 
 
ஒரு வேளை உங்கள் கணினியில் Kaspersky, Malware bytes போன்ற நல்ல anti  மால்வேர் மென் பொருளை நீங்கள் நிறுவியிருந்தால், இந்த Windows Defender கட்டாயமாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
இது விண்டோஸ் உடன் உள்ளிணைந்த ஒரு கருவி என்பதால் இதனை தனியாக Uninstall செய்ய இயலாது. இதனை செயலிழக்க வைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள சர்ச் பாக்ஸில் Services.msc என டைப் செய்து Services விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இங்குள்ள பட்டியலில்  Windows Defender ஐ தேர்வு செய்து இரட்டை க்ளிக் செய்யுங்கள். 

  இனி திறக்கும் Windows Defender Properties வசனப் பெட்டியில்,

Startup Type என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Disabled என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.

. 

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

இன்று ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நான் எழுதிய இடுகை..

கேமராவை திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி பார்க்க

இந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக எனது இந்த இடுகை உங்களில் ஒருவனால் (தப்பா நினைக்காதிங்க.. இது அவர் பெயர்.. ) திருடப்பட்டு அவரது பிளாக்கில்…

http://ungaliloruvansanthanam.blogspot.com/2010/04/blog-

post_3524.html

சென்று பார்த்தால் இந்த ஒரு இடுகை மட்டுமின்றி எனது பல இடுகைகள்

(கியரை போடுங்க…ஜிமெயிலை ஆஃப்லைனில் ஓட்டுங்க…

பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே சமயத்தில் கையாளுவதற்கா… )

களவாடப்பட்டுள்ளது

தெரிய வந்தது.. மேலும் பல பதிவர்களின் இடுகைகளை அங்கு காண முடிந்தது…

இது மட்டு மின்றி தமிலிஷ் தளத்தில் எனது இடுகை…

அவரது இடுகை..

எனது இடுகைகள்.. தமிழ் கம்ப்யூட்டர் பத்திரிகையில் வெளிவருவதன் மூலமாக இணைய செலவை ஈடுகட்ட முடிந்தது.. ஆனால் இது போன்ற திருட்டுகள் நடைபெறும் பொழுது .. கட்டுரை உண்மையில் யாரால் எழுதப்பட்டது.. என்ற கேள்விக்கு விளக்க மளிக்க வேண்டிய நிலை.. தேவையா.. 

 

இந்த சம்பவம் குறித்து தமிலிஷ் தளத்திற்கு புகார் செய்தவுடன் உடனடியாக அவரது இடுகை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.. 

  தமிலிஷ்க்கு மிக்க நன்றி !.. 

அன்புடன்

சூர்யா கண்ணன்

கேமராவை திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி பார்க்க

Posted in Rotate Video in VLC by suryakannan on ஏப்ரல் 28, 2010
சில சமயங்களில் டிஜிடல் கேமரா அல்லது செல்போன் மூலமாக நாம் புகைப்படம் எடுக்கும் பொழுது நீளவாக்கில் உள்ள உருவங்களை நெருக்கமாக எடுப்பதற்காக, கேமராவை பக்கவாட்டில் திருப்பி எடுத்து விடுகிறோம். இது போன்ற படங்களை நம்மால் எளிதாக 90 டிகிரிக்கு திருப்பிக் கொள்ள முடிகிறது. 
 ஆனால், இதேபோல சில சமயங்களில் வீடியோவையும், கேமராவை திருப்பி எடுத்து விடுகிறோம். இவற்றை play செய்யும் பொழுது அவை பக்கவாட்டிலேயே காண்பிக்கப் படும். இது போன்ற வீடியோவை நேராக பார்க்க VLC ப்ளேயரில் என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம். 
 VLC Media Player ஐ திறந்து கொண்டு குறிப்பிட்ட வீடியோ கோப்பை திறந்து கொள்ளுங்கள். பிறகு Tools மெனுவில் Effects and Filters க்ளிக் செய்யுங்கள் (Ctrl+E) இப்பொழுது திறக்கும் Adjustments and Effects வசனப் பெட்டியில் Video Effects டேபிற்கு சென்று Transform எனும் check box ஐ டிக் செய்து கொண்டு, 

எந்த கோணத்தில் வீடியோவை திருப்ப வேண்டுமோ அந்த கோணத்தை (90 டிகிரி) தேர்வு செய்து கொள்ளுங்கள். 
இப்பொழுது வீடியோவை நேராக பார்க்கலாம். 
VLC Media ப்ளேயரை டவுன்லோடு செய்ய
. 

கியரை போடுங்க…ஜிமெயிலை ஆஃப்லைனில் ஓட்டுங்க…

Posted in gears, using Gmail Offline by suryakannan on ஏப்ரல் 23, 2010
நாம் மின்னஞ்சல் சேவைக்கு பெரும்பாலும் உபயோகிப்பது ஜிமெயில் வசதியைத்தான் என்பதை மறுக்க இயலாது. ஆனால் ஒரு சில சமயங்களில் இணைய இணைப்பு தடைபட்ட தருணங்களில், நமக்கு ஏற்கனவே வந்திருந்த மின்னஞ்சலை திறந்து ஒரு முக்கியமான விபரத்தை காணவேண்டுமெனில் என்ன செய்ய முடியும்?
 
மைக்ரோசாப்ட் Outlook, Thunder Bird போன்ற வசதிகள் நமக்கு மின்னஞ்சல்  வசதியை Offline -இல் பணிபுரிய பெரிதும் உதவுகின்றன. ஆனால் ஜிமெயிலில் இந்த வசதியை கொண்டுவர என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். (எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த வசதியை உருவாக்கப் போகும் கணினி/லேப்டாப்  உங்களால் மட்டுமே கையாளப்படுகிறதா.. என்பதை தெளிவாக உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்)
முதலில் இந்த வசதியை நிறுவ நமது கணினியில் கூகிள் கியர்ஸ் பதியப்பட்டிருக்க வேண்டும். கீழே தரப்பட்டுள்ள சுட்டியிலிருந்து கூகிள் கியர்சை தரவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.
கூகிள் கியர்ஸ்

உங்கள் உலாவி ரீ ஸ்டார்ட் ஆகி வந்தவுடன், உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.  ஜிமெயில் திரையில் வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்திடுங்கள். 
இனி வரும் திரையில் Offline டேபை திறக்கவும். 
பிறகு Offline Mail க்கு நேராக உள்ள  Enable Offline Mail for this Computer ஐ தேர்வு செய்து கொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை சொடுக்குங்கள். 
அடுத்து வரும் வசனப் பெட்டி  கீழே தரப்பட்டுள்ளது போல இருக்கும். 
இதில்  I trust this site. Allow it to use Gears என்பதை தேர்வு செய்து Allow பொத்தானை சொடுக்கவும். 
அடுத்த வசனப் பெட்டியில் நீங்கள் விரும்பும் Shortcut வசதியை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்கவும். 
இப்பொழுது உங்கள் ஜிமெயில் திரையில் மேல் வலது புறத்தில் Installation நடந்து கொண்டிருப்பதை காணலாம். உங்கள் மெயில் பாக்ஸின் அளவைப் பொருத்து நேரம் மாறுபடும். 
இனி  இணைய வசதி இல்லாத பொழுதும், உருவாக்கப்பட்டுள்ள shortcut ஐ க்ளிக் செய்வதன் மூலம், உங்கள் மெயில் பாக்சை திறக்க முடியும், மெயில் பாக்ஸில் தேடமுடியும், மேலும் புதிதாக மின்னஞ்சலை கம்போஸ் செய்து send கொடுத்தால் அது otubox இல் சென்று, பிறகு நீங்கள் எப்பொழுது இணையத்தில் தொடர்பு ஏற்படுத்துகிறீர்களோ,   அப்பொழுது  அவை தானாக அனுப்பப் பட்டுவிடும். 
மேலும்  விவரங்களுக்கு கூகுளின் https://mail.google.com/mail/exp/197/html/en/help.html தளத்திற்கு  சென்று பாருங்கள். 

.
.

போட்டோவில் உள்ள உருவத்தை அனிமேட்டட் கேரக்டராக மாற்ற

Posted in Talking Photo by suryakannan on ஏப்ரல் 22, 2010
உங்கள் குழந்தைகளின் அல்லது நீங்கள் விரும்புபவரின் புகைப்படத்தை உபயோகித்து அவரை அனிமேட்டட் கேரக்டராக மாற்றி பேச வைக்க ஒரு அருமையான, பொழுதுபோக்கான இணையதளம் PQ Talking Photo. 

இந்த தளத்தில் சென்றவுடன் இதன் முகப்பு பக்கத்தில் Home, Create My Actor மற்றும், Publish My Talking Show ஆகிய பொத்தான்களும், Control Panel பகுதியில் Play, Stop, Edit, Add Tooth ஆகிய பொத்தான்களும் உள்ளன. உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை தயார் நிலையில் வைத்துக் கொண்டு, Create My Actor பொத்தானை சொடுக்குங்கள். 
அடுத்த திரையில் Upload Photo பொத்தானை சொடுக்கி நீங்கள் விரும்பும் புகைப்படத்தை upload செய்து கொள்ளுங்கள். (முகம் சற்று தெளிவாக இருந்தால் நல்லது)

அந்த புகைப்படம் திரையில் தோன்றும், பிறகு இடது புற பேனில் காண்பிக்கப் பட்ட படத்தில் கண்கள் மற்றும் வாய் பகுதியில் உள்ள புள்ளிகளைப் போன்று நீங்கள் upload செய்த புகைப்படத்தில் அந்த அந்த எண்ணுள்ள புள்ளிகளை கண்களின் ஓரம் மற்றும் வாய் பகுதியில் க்ளிக் செய்து நகர்த்தி அமைத்துக் கொள்ளுங்கள். 
 (இது நான் சும்மா டெமோவிற்காக  செய்து பார்த்தது.. நல்லயில்லையின்னா திட்டுங்க..)
இனி Choose Script டேபிற்கு சென்று தேவையான வாசகங்களை தேர்வு செய்து Let’s Talk பொத்தானை அழுத்துங்கள். இப்பொழுது நீங்கள் இணைத்த புகைப்படத்தில் உள்ள உருவம் அனிமேஷனுடன் பேசும். 
முக அசைவுகளை இன்னும் தெளிவாக அமைக்க இடது புறமுள்ள edit பொத்தானை சொடுக்கி புள்ளிகளை தேவையான இடத்திற்கு சரியாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். 
பற்கள் தெரிய வேண்டுமெனில் Add Tooth பொத்தானை சொடுக்கினால் போதுமானது. Publish My Talking Show க்ளிக் செய்து பகிர்ந்து கொள்ளலாம். 
create your own Talking Photo here.
.

blogmyspacedvd to ipod video convertertalkingphoto, dvd to psp convertertalkingphoto, dvd to zunetalking photo album

.

Adobe Updater அறிவிப்பை நீக்க

Posted in disable Adobe updater by suryakannan on ஏப்ரல் 20, 2010
நம் கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் Adobe Reader மற்றும் Adobe Flash Player ஆகியன அடிப்படையானவை. இவை நிறுவப்பட்டுள்ள கணினிகளில் அவ்வப்பொழுது Adobe Updater இன் அறிவிப்பு வருவதையும், நாம் இணையத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் பொழுது மறைமுகமாக இயங்கி கொண்டிருப்பதையும் எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம். 
Adobe Updater உங்கள் System Tray யில் இருந்தால்,  அந்த ஐகானை க்ளிக் செய்து திறக்கும் வசன பெட்டியில் Preferences பொத்தானை அழுத்தி, பிறகு வரும் திரையில்   Automatically check for Adobe updates என்பதற்கு நேராக உள்ள  checkbox ஐ Uncheck செய்து OK கொடுங்கள். 
 
ஒருவேளை உங்கள் system tray யில் Adobe Updater ஐகான் இல்லையெனில், Adobe Reader ஐ திறந்து கொண்டு Edit  மெனுவில்  Preferences…க்ளிக் செய்து வரும் திரையில் General Category யில் Application Startup என்ற பகுதிக்கு கீழாக உள்ள Check for updates என்ற செக் பாக்சை uncheck செய்து விடுங்கள். 
.
 

மைக்ரோசாப்ட் வேர்டு – டிப்ஸ்

Posted in MS Office Tips by suryakannan on ஏப்ரல் 19, 2010
1. மைக்ரோசாப்ட் வேர்டில் பல Column களைக் கொண்ட, ஒன்று மேற்பட்ட பக்கங்களுக்கு நீண்ட Table ஒன்றில் பணி புரிந்து கொண்டிருக்கையில் அந்த டேபிளில் ஒரு குறிப்பிட்ட Column ஐ செலக்ட் செய்ய வழக்கமாக நாம் டேபிளின் துவக்கத்திற்கு சென்று க்ளிக் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு பதிலாக நீங்கள் அந்த டேபிளில் எந்த பகுதியில் இருந்தாலும், நீங்கள் செலக்ட் செய்ய வேண்டிய column த்தில் எங்காவது Shift key ஐ அழுத்திக் கொண்டு மெளசின் வலது பட்டனை ஒரு முறை க்ளிக் செய்தால், அந்த குறிப்பிட்ட Column முழுவதுமாக செலக்ட் ஆகிவிடும்.     
 
2 . மைக்ரோசாப்ட் வேர்டு 2007 இல் உள்ள ரிப்பன் மெனு திரையில் கணிசமான பகுதியை ஆக்கிரமித்துக் கொள்வதால், இதனை Auto hide செய்தாலென்ன? ரிப்பன் மெனுவில் ஏதாவது ஒரு மெனு டைட்டிலில் வலது க்ளிக் செய்து Minimize the Ribbon ஐ க்ளிக் செய்யுங்கள். இனி தேவைப் படும் பொழுது அந்த டைட்டிலை க்ளிக் செய்தால் மெனு திறக்கும். மற்ற பகுதியில் க்ளிக் செய்தால் ரிப்பன் மெனு மறைந்து உங்களுக்கு பணிபுரிய அதிகப் படியான திரை அளவும் கிடைக்கும். 

 3.  Word இல் Print Preview என்பது அனைவருக்கும் தெரியும். இந்த Preview திரையில் டாகுமென்ட்டை   எடிட் செய்ய முடியுமா? 
உங்களது டாக்குமெண்டில் Print Preview விற்கு செல்லுங்கள் இங்குள்ள ரிப்பன் மெனுவில் Magnifier எனும் செக் பாக்சை uncheck செய்து விடுங்கள். இனி preview விலும் எடிட் செய்ய முடியும்.
 .

Facebook இல் உங்கள் இடுகைகளை தானாக அப்டேட் செய்து Traffic ஐ அதிகரிக்க

Posted in How to increase blog traffic by suryakannan on ஏப்ரல் 17, 2010
Facebook கணக்கு வைத்திருக்கும் பல பதிவர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் பிளாக்கை அப்டேட் செய்யும் பொழுதும், Facebook இல் நுழைந்து தங்களது புதிய இடுகையின் லிங்கை  கொடுத்து அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்கள். 
ஆனால் உங்கள் பிளாக்கில் புதிய இடுகைகளை இடும்பொழுது Facebook இல் ஆட்டோமாடிக்காக  அப்டேட் ஆக வேண்டுமெனில் ஒரு எளிய வழி உங்களுக்காக.
Facebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறத்தில் உள்ள Account லிங்கில் உள்ள Application Settings ஐ க்ளிக் செய்து கொள்ளுங்கள். 
பிறகு திறக்கும் திரையில் Notes லிங்கை க்ளிக் செய்து மறு திரையில் மேலே வலது புறமுள்ள Notes Settings பாக்ஸில் Import blog லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இனி Import a Blog டேபில் Web URL க்கு நேராக உள்ள பெட்டியில் உங்கள் வலைப்பக்கத்தின் feed url ஐ கொடுத்து (உதாரணமாக http://suryakannan.blogspot.com/feeds/posts/default) Confirmation check box இல் டிக் செய்து Start Importing பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 
அடுத்த திரையில் Confirm Import பொத்தானை சொடுக்குங்கள்.
அவ்வளவுதான்! இனி உங்கள் ப்ளாக் அப்டேட் செய்யப்படும் பொழுது தானாகவே உங்கள் Facbook சுவற்றில் வெளியிடப்படும். இதன் மூலம் உங்கள் பிளாக்கின் டிராபிக்கும் அதிகரிக்கும். 
.

MS -Excel Row மற்றும் Column ஐ மாற்றி அமைக்க

Posted in MS Office Tips by suryakannan on ஏப்ரல் 16, 2010
 நாம் மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் பயன்பாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கையில், Row  களில் கொடுக்க வேண்டிய டேட்டாக்களை  Column த்தில், அல்லது நேர் மாறாக டைப் செய்து விட்டதாக கொள்வோம். 
இப்படி Row வில் உள்ள டேட்டாக்களை Column முறைப்படி அல்லது Column த்தில் உள்ள டேட்டாவை Row முறைப்படி எளிய முறையில் மாற்றி அமைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். (சப்பை மேட்டரா இருந்தாலும் ஓட்டை போடுங்க..)
மேலே உள்ள படத்தில் Row வில் உள்ளதை போன்ற டேட்டாவை  தேர்வு செய்து வலது க்ளிக் செய்து காப்பி செய்து கொண்டு வொர்க் ஷீட்டில் எங்கு வேண்டுமோ அங்கு கர்சரை வைத்து வலது க்ளிக் செய்து Paste Special ஐ க்ளிக் செய்யுங்கள். இனி வரும் வசனப் பெட்டியில் 
 Transpose எனும் செக் பாக்சை தேர்வு செய்து OK கொடுங்கள்.  
இதே போன்று Column த்திலிருந்து Row விற்கு மாற்றவும் செய்யலாம். 
.