சூர்யா ௧ண்ணன்

விண்டோஸ் கால்குலேட்டரை Excel டூல்பாரில் இணைக்க

நாம் எச்செல் 2007 பயன்படுத்தி வரும்பொழுது, அதில் அவசர கணக்கு போட அடிக்கடி விண்டோஸ் கால்குலேட்டரை உபயோகிப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு முறையும் கால்குலேட்டரை ஸ்டார்ட் மெனுவிலோ, அல்லது டெஸ்க்டாப் ஷார்ட் கட்டிலோ திறந்து பணிபுரிவது நேர விரயமாகும். 
இந்த விண்டோஸ் கால்குலேட்டரை எக்சல் Quick Access Toolbar -இல் இணைக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம். 
எக்ஸ்செல் 2007 ஐ திறந்து கொண்டு மேலே உள்ள Customize Quick Access Toolbar ஐ க்ளிக் செய்யுங்கள். 
  
இப்பொழுது அந்த மெனுவில் உள்ள More Commands ஐ க்ளிக் செய்யுங்கள். திறக்கும் Excel options window வில் choose commands from என்பதற்கு கீழாக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Commands not in the Ribbon என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது வரும் பட்டியலில் Calculator ஐ க்ளிக் செய்து அருகிலுள்ள ADD பொத்தானை க்ளிக் செய்து, கீழே உள்ள OK பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
இனி அடிக்கடி உபயோகிக்க விண்டோஸ் கால்குலேட்டர் உங்கள் எக்ஸ்செல் Quick Access Toolbar -இல் க்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 
.
Advertisements

ஃபேஸ்புக் சாட்டில் ஒரு சில நண்பர்களிடமிருந்து மட்டும் ஒளிந்துகொள்ள

Posted in Bing Tips, Facebook, Firefox Tips and Tricks, Google Chrome tricks by suryakannan on ஓகஸ்ட் 24, 2010
ஃபேஸ்புக்கில் எப்பொழுதெல்லாம் நீங்கள் லாகின் செய்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுக்காகவே காத்திருந்தது போல, Hi, How are you என நீங்கள் விரும்பாத நண்பர் சாட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறாரா? 
இது போன்ற ஒரு சில தொல்லைதரும் நண்பர்களுக்கு மட்டும் நீங்கள் offline -இல் இருப்பது போன்று தோன்றவைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் உங்கள் Facebook கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். பிறகு இடதுபுற பேனில் உள்ள Friends லிங்கை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது வலதுபுறம் வந்துள்ள Create List பொத்தானை அழுத்துங்கள்.

இப்பொழுது திறக்கும் Create List வசனப் பெட்டியில் ஏதாவது பெயரை கொடுங்கள். (Offline Friends)
Offline Friends என்ற பெயரில் ஒரு புதிய லிஸ்ட் உருவாகியிருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தொல்லைதரும் நண்பர்களை இணைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது Facebook chat ஐ திறந்து கொள்ளுங்கள். 
இங்கு Offline Friends லிஸ்டிற்கு நேராக உள்ள சிறிய பச்சை  பொத்தானை க்ளிக் செய்து Offline மோடிற்கு மாறிக்கொள்ளலாம். 
இனி இவர்களின் தொல்லை உங்களுக்கு இருக்காது.

.

கூகிள் க்ரோம்:- படங்களை கையாள ஒரு பயனுள்ள நீட்சி

Posted in கூகிள் க்ரோம் by suryakannan on ஓகஸ்ட் 21, 2010
நாம் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, Flickr போன்ற தளங்களில் காணும் புகைப்படங்களை முழுத்திரையில் மற்றும், ஸ்லைட் ஷோ வடிவில் காண கூகிள் க்ரோம் உலாவிக்கான ஒரு எளிய  நீட்சி SlideShow. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). 

இந்த தளத்தில் உள்ள Install பட்டனை க்ளிக் செய்து உங்கள் க்ரோம் உலாவியில் எளிதாக பதிந்து கொள்ளலாம். 

அட்ரஸ் பாரின் வலது புறம் இந்த நீட்சி பதிந்து விட்டதற்கான குறிப்பு தோன்றும். இந்த நீட்சியின் பட்டன் அல்லது லிங்க் எதுவும் உங்கள் உலாவியில் தோன்றாது.
ஆனால் இந்த SlideShow நீட்சி எந்தெந்த தளங்களில் வேலை செய்யுமோ, அந்தந்த தளங்கள் திறக்கப்படும் பொழுது, தானாகவே இது வேலை செய்ய ஆரம்பிக்கும். உங்களுக்கு தேவையான பதத்தை க்ளிக் செய்த பிறகு, அந்த குறிப்பிடட்ட படம் மட்டும் பெரிதாக திரையில் தோன்றும், பிற படங்கள் கீழே சிறிதாக SlideShow போல தோற்றமளிக்கும். 
இந்த நீட்சி Flickr போன்ற புகைப்பட தளங்களை விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நீட்சி என்பதில் ஐயமில்லை.

.

இணைய வீடியோக்களை முழுத்திரையில் கண்டுகளிக்க

Posted in இணையம் டிப்ஸ், வீடியோ, Magic, Rotate Video in VLC by suryakannan on ஓகஸ்ட் 21, 2010
நம்மில் பலர் இணையத்தில் யூ ட்யுப் போன்ற தளங்களில் உள்ள வீடியோக்களை வழக்கமாக Google Chrome, Firefox, IE போன்ற இணைய உலாவியில்தான் பார்த்து வருகிறோம். இதில் நமக்கு சிறிய அளவில்தான் படங்களை காண முடிகிறது.

இதோ சுதந்திர இலவச மென்பொருளான VLC மீடியா ப்ளேயரில் இது போன்ற வீடியோக்களை முழுத் திரையில் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் தேவையான வலைப்பக்கத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் வீடியோவிற்கான URL ஐ காப்பி செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக http://www.youtube.com/watch?v=mhRIs_XhM3U&feature=fvsr . இப்பொழுது VLC Media Player ஐ திறந்து கொண்டு, Media Menu வில் சென்று 

Open Network Stream வசதியை க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் Open Media வசன்ப்பெட்டியில் Network டேபில், Please enter a network URL என்பதற்கு கீழாக உள்ள பெட்டியில் நீங்கள் காப்பி செய்த URL ஐ பேஸ்ட் செய்து கீழே உள்ள Play பொத்தானை சொடுக்குங்கள்.

ஓரிரு வினாடிகளுக்கு மேலே உள்ளது போன்ற திரை தோன்றி மறைந்த பிறகு, உங்கள் அபிமான வீடியோ VLC Player -ல் ஓடத்துவங்கும், இப்பொழுது வீடியோ திரையில் வழக்கம்போல இரட்டை க்ளிக் செய்து முழுத்திரையில் காண முடியும்.

 

.

எம்.எஸ் ஆபீஸ்: படங்களை கையாள பயனுள்ள டிப்ஸ்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பயன்பாட்டை உபயோகித்து வருபவர்கள், தங்களது Word, Excel அல்லது Powerpoint கோப்புகளில் புகைப்படங்களை இணைக்கும் பொழுது, அந்த புகைப்படங்களை தேவையான அளவு crop செய்து கொள்வது, சிறப்பு எபக்ட்கள் ஆகியவற்றை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 
வழக்கம் போல Insert இற்கு சென்று தேவையான படத்தை உங்கள் டாக்குமெண்டில் இணைத்துக் கொள்ளுங்கள். 
இப்படி இணைக்கப்பட்ட ஒரு சாதாரண Bird ஐ Love Bird (!)ஆக்குவது எப்படி?   

ரிப்பன் மெனுவிலிருந்து Crop வசதியை எடுத்துக்கொண்டு படத்தை தேவையான அளவு crop செய்து கொள்ளுங்கள்.

இனி அதே Picture Tools மெனுவிலிருந்து Picture shape வசதியை க்ளிக் செய்து தேவையான வடிவத்தை (Heart) தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த படம் அதே வடிவில் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கலாம். 
மேலும் இந்த மெனுவில் உள்ள Picture Border, Picture effects போன்ற வசதிகளை பயன்படுத்தி படத்தை மேலும் மெருகூற்றலாம்.  
இனி நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்டில் Shadow, Bevel  போன்ற வசதிகளை பயன்படுத்தி  படங்களை அழகாக வடிவாக்க முடியும். 
   
.

பவர் பாயிண்ட் – ட்ரிக்

நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனையும் அதற்கான தீர்வும் உங்களுக்கும் பயன்படலாம் என்ற எண்ணத்தில்.. (இது பலரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும்.. அறியாத சிலருக்காக..)
அவருடைய பிரச்சனை என்னவென்று முதலில் பார்ப்போம். அவர் தனது கணினியில் பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன்   ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார். சுமார் 250 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக இன்செர்ட் செய்து உருவாக்கி கொண்டிருக்கும் பொழுது, முதல் 11 படங்களை இணைத்த பிறகு சேமித்ததோடு சரி, பிறகு சேமிக்க மறந்து போனார், இறுதியில் சேமிக்க முயன்ற போது, சிஸ்டம் ஹேங் ஆகி, கணினியை Reset செய்ய வேண்டி வந்தது. மறுபடியும் அந்த கோப்பை திறந்த போது  அந்த முதல் 11 படங்கள் மட்டுமே இருந்தது. அவர் கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்கும் மேலாக செய்த பணி அனைத்தும் பறிபோன கவலை ஒரு புறமும், இதை உடனடியாக முடித்து தனது மேலதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடியும் சேர்ந்து கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தார். 
முதலில் இந்த பிரச்னைக்கு ஞாபக மறதி தவிர வேறு என்ன காரணம் என்பதை பார்க்கலாம். 
அவர் தனது பவர்பாயிண்ட் கோப்பில் இணைத்த கோப்புகள் அனைத்தும் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டவை. 
அந்த புகைப்பட கோப்புகளின் அளவை சோதித்தபோது, சராசரியாக 3 MB ஆக இருந்தது. ஒரு படத்திற்கு 3 MB எனில் 250 படங்களுக்கு 750 MB. ஆக சராசரியாக அந்த பவர்பாயின்ட் கோப்பின் அளவு 750 Mb க்கும் அதிகமானது. இதன் காரணமாகவே இதை சேமிக்கும் பொழுது, ஹேங் ஆகி சேமிக்க முடியாமல் போனது. 
இதற்கு தீர்வாக முதலில் நாம் செய்ய வேண்டியது, அந்த புகைப்படங்களின் அளவுகளை குறைப்பது, இதற்காக உபயோகிக்கப் போகும் கருவி மைக்ரோசாப்ட்டின் Power Toys Image Resizer.  இந்த கருவியை கணினியில் நிறுவிய பிறகு, தேவையான அனைத்து புகைப்படங்களையும் தேர்வு செய்து, வலது க்ளிக் செய்து Resize Pictures ஐ க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில் Medium என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.

 

இனி புதிதாக உருவாக்கப்படும், அந்த புகைப்படக் கோப்புகளின் அளவை பார்த்தால்,
 
    3 MB இருந்த கோப்பின் அளவு வெறும் 69 KB யில் அடங்கி விட்டது. இப்பொழுது கோப்புகளின் அளவை குறைத்தாகிவிட்டது, இனி உடனடியாக பவர்பாயிண்ட்டில் அனைத்து புகைப்படங்களையும் விரைவாக இணைக்க வேண்டும். ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டிருப்பது வேலைக்கு ஆகாது.

மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட்டை (2007) திறந்து கொண்டு, Insert மெனுவில் உள்ள Photo Album க்ளிக் செய்து New Photo Album செல்லுங்கள்.

 

இங்கு இடது புறமுள்ள Insert picture from என்பதற்கு கீழாக உள்ள File/Disk பொத்தானை க்ளிக் செய்து, அளவு மாற்றப்பட்ட அனைத்து புகைப்பட கோப்புகளையும் தேர்வு (Ctrl+A) செய்து கொள்ளுங்கள்.

பிறகு, Picture Layout க்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில்  தேவையான வசதியை தேர்வு செய்து கொண்டு Create பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 

அவ்வளவுதான் சில நொடிகளில் கிட்டத்தட்ட 250 க்கும் மேலான புகைப்படங்களைக் கொண்ட பவர் பாயிண்ட் பிரெசென்டேஷன் தயார், அதுவும் வெறும் 15 MB அளவிற்குள்.

‘இதென்ன பெரிய விஷயமா?’   என்று சலித்துக் கொள்பவர்களும் ஓட்டு போடலாம்.

. 

மைக்ரோசாப்ட் வோர்ட் – மிகவும் அவசியமான, ஆச்சர்யமான ட்ரிக்

மைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டை நம்மில் பலர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். அவரவர் தேவைக்கு ஏற்றபடி, வேர்டு டாக்குமெண்டில் புகைப்படங்கள் மற்றும் பிறப் படங்களை  டெக்ஸ்ட்களுக்கு இடையில் அங்காங்கே இணைத்திருப்போம். அவற்றில் பெரும்பாலான படங்கள் அதனுடைய உண்மையான அளவிலிருந்து பெரிதாக்கியோ அல்லது சிறிதாக்கியோ இணைக்கப்பட்டிருக்கும். 
இது போன்ற வேர்டு கோப்புகளில் உள்ள படங்களை மட்டும் அதனுடைய உண்மையான அளவில் தனித்து திரும்ப பெற, அவற்றில் உள்ள டெக்ஸ்ட்களை  மட்டும் தனித்துப் பெற, இதில் எம்பெட் செய்யப்பட்ட கோப்புகளை தனித்துப் பெற, மிக முக்கியமாக மேலே சொன்ன அனைத்தையும் அந்த குறிப்பிட்ட வேர்டு கோப்பை திறக்காமல் செய்ய முடியுமா? (வேர்டு 2007)  எனில் முடியும். விளக்கத்தை மேலும் படியுங்கள்.    
மைக்ரோசாப்ட் வோர்டு 2007 கோப்பின் extension – .Docx என்பதை நாமறிவோம். ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம், இது xml கோப்புகளை உள்ளடக்கிய ஒரு Compressed file என்பதுதான். சரி! அப்படி என்னதான் ஒரு வேர்டு கோப்பிற்குள் இருக்கும் என்பதை கொஞ்சம் நுணுக்கமாக பார்க்கலாம். 
முதலில் இந்த வேர்டு கோப்பை பாருங்கள். இதில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை கொண்டுள்ளது. 
இந்த வேர்டு கோப்பை வலது க்ளிக் செய்து 7-Zip எனும் Compress utility -இல் Open Archive என்பதை க்ளிக் செய்கிறேன். 
இப்பொழுது இந்த கோப்பின் உள்ளே வேறு என்னென்ன கோப்புகள் மற்றும் கோப்புறைகள் உள்ளன என்பதை பாருங்கள். (ஆச்சர்யமாக இருக்கிறதா?) 
இப்பொழுது இதிலுள்ள Word ஃபோல்டரை திறவுங்கள். அதற்குள்ளே உள்ள Media ஃபோல்டரை ட்ராக் அன்ட் ட்ராப் செய்தோ அல்லது extract செய்தோ சேமித்துக் கொள்ளுங்கள். 
இதன் மூலமாக அந்த குறிப்பிட்ட கோப்பினுள் இணைக்கப்பட்டிருந்த படங்கள் அனைத்தும் அவற்றின் உண்மையான அளவுகளில் கிடைக்கும். மேலும் இந்த Word ஃபோல்டருக்குள் உள்ள document.xml என்ற கோப்பை Notepad++ போன்ற கருவிகளில் திறக்க, நமக்கு அதிலுள்ள plain text மட்டும் தனித்து கிட்டும். 
இந்த வேர்டு கோப்பில் எம்பெட் செய்யப்பட்டுள்ள (OLE Objects) பிற கோப்பு வகைகள் (PDF, XLS,DWG) அனைத்தும் embeddings ஃபோல்டருக்குள் .bin கோப்புகளாக சேமிக்கப் பட்டிருக்கும் (உதாரணமாக OleObject1.bin, OleObject2.bin என..)  என்பதனால் அந்த கோப்புகளை சரியாக இனங்கண்டு அதற்கேற்ற extension க்கு பெயர் மாற்றம் செய்தால் அந்த கோப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம். 
 
இதே முறையில் வேர்டு மட்டுமின்றி Excel, Powerpoint கோப்புகளிலும் பிரித்தெடுக்க முடியும் என்பது சந்தோஷமான செய்தி. 
 
7-Zip தரவிறக்க 
 
 
.

பிரணவ் மிஸ்ட்ரி: An Invisible Computer Mouse

Posted in An Invisible Computer Mouse by suryakannan on ஓகஸ்ட் 13, 2010

உலகமே ஆச்சர்யத்துடன் பார்க்கும் இந்தியரின் சாதனை..

Researchers at MIT, led by Pranav Mistry, have developed a new ‘mouseless’ experience that provides computer users with the familiar interaction of a physical computer mouse without actually needing one. Mouseless lets a user click and scroll a cursor on the screen using only  their cupped palm moving around a table as if they are holding a mouse. It employs an embedded infrared laser and camera on the computer to track finger and palm movements and interprets them into computer commands.

Here’s a short demo of the Mouseless project:

http://www.youtube.com/v/yHGODp0b8Ks?fs=1&hl=en_US

இது என்னுடைய இடுகை அல்ல.. நன்றி – http://www.psfk.com 

சிக்ஸ்த் சென்ஸ் – பிரணவ் மிஸ்ட்ரி குறித்தான நண்பர் கக்கு மாணிக்கத்தின் பதிவு – அவசியம் பாருங்கள்! ஆச்சர்ய படுவீர்கள்.. 

http://www.pranavmistry.com/


நன்றி வானம்பாடிகள்

.

லேப்டாப் டிப்ஸ் – புதியவர்களுக்கு

தொடர்ந்து மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரும். அது, தங்களது மடிகணினியை ஷட்டௌன்  செய்யாமல் மூடி வைக்கும்பொழுது Sleep mode இற்கு செல்ல வேண்டுமா? Hybernate ஆகவேண்டுமா? Shut down ஆக வேண்டுமா? அல்லது எதுவுமே ஆகக் கூடாதா? இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும்? 

விண்டோஸ் Taskbar – System Tray இல் உள்ள Battery ஐகானை வலது க்ளிக் செய்து Power Options லிங்கை க்ளிக் செய்யுங்கள். 
இப்பொழுது திறக்கும் திரையில் இடது பிரிவில் உள்ள Choose what closing the lid does என்ற லிங்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள். 
அடுத்து திறக்கும் திரையில் When I close the lid என்பதற்கு நேராக உள்ள Drop down லிஸ்டில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளலாம். 
இதில் Sleep வசதியே உகந்தது, சில சமயங்களில் திரை அவசியப்படாமல் ஏதாவது பாடல்களை கேட்க வேண்டுமென்றால் Do nothing வசதியை தேர்வு செய்து கொள்ளலாம். 
சிக்ஸ்த் சென்ஸ் – பிரணவ் மிஸ்ட்ரி குறித்தான நண்பர் கக்கு மாணிக்கத்தின் பதிவு – அவசியம் பாருங்கள்! ஆச்சர்ய படுவீர்கள்..

Bing தேடுபொறியில் தோன்றும் படங்களை சேமிக்க

Posted in இணையம் டிப்ஸ், Bing Tips, Computer Tricks by suryakannan on ஓகஸ்ட் 11, 2010
Google, Yahoo போல Bing தேடுபொறியும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேடுபொறியில், முதல் பார்வையிலேயே அனைவரையும் கவர்வது இதன் பின்புலத்தில் உள்ள அழகான படங்கள்தான். 
இது போன்ற படங்களை நமது கணினியில் தரவிறக்கி கொண்டால், பிறகு இதை சுவர் தாளாகவோ, அல்லது மற்ற உபயோகத்திற்கோ வைத்துக் கொள்ளலாம் என பலரும் யோசித்திருப்பார்கள். ஆனால் இதை மற்ற தளங்களில் உள்ளது போல, வலது க்ளிக் செய்து சேமிக்க முடியாது. இதற்காக ஒரு சில கருவிகள் பயன்படுகின்றன. ஆனால் இவற்றில் எதையும் பயன்படுத்தாமல், இந்த படங்களை நெருப்பு நரி உலாவியில் எப்படி சேமிப்பது என்பதை பார்க்கலாம். 
முதலில் உங்கள் நெருப்பு நரி உலாவியில் Bing தளத்திற்கு செல்லுங்கள். தளம் முழுவதுமாக திறந்த பிறகு, Tools க்ளிக் செய்து Page Info செல்லுங்கள்.
இப்போது திறக்கும் விண்டோவில் Media tab ஐ க்ளிக் செய்து, சரியான Bing பின்புல படத்தின் கோப்பை தேர்வு செய்து, கீழே உள்ள Save as பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 
இனி எங்கு சேமிக்க வேண்டும் என்பதை கொடுத்துவிட்டால் போதுமானது. அவ்வளவுதான்.