சூர்யா ௧ண்ணன்

வலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய

Posted in Computer Tricks, MS Office Tips by suryakannan on செப்ரெம்பர் 23, 2010
வலைபக்கங்களில் நாம் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, நமக்கு தேவையான சில விபரங்கள் Table வடிவில் இருக்கலாம்.

 

இவற்றை நாம் Excel 2007 பயன்பாட்டில் தேவைப்படும் பொழுது வலைப்பக்கத்திலிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யும்பொழுது, டேபிள் வடிவில் அல்லாமல், ஒரு அமைப்பில்லாமல் பேஸ்ட் ஆகியிருப்பதை கவனிக்கலாம். 

இது போன்ற சமயங்களில், இணையத்தில் நமக்கு தேவையான விவரங்கள் அடங்கிய டேபிளை Excel 2007 -இல் எப்படி இறக்குமதி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான வலைப்பக்கத்திற்கு சென்று, குறிப்பிட்ட டேபிள் உள்ள பக்கத்தின் url ஐ காப்பி செய்து கொள்ளுங்கள். Excel ஐ திறந்து கொண்டு Data டேபில் உள்ள Get External Data பகுதியில் உள்ள From Web பொத்தானை சொடுக்குங்கள்.

இப்பொழுது திறக்கும் New Web Query வசனப் பெட்டியில், அட்ரஸ் பாரில் காப்பி செய்து வைத்த url ஐ பேஸ்ட் செய்து Go பொத்தானை சொடுக்குங்கள்.   

   
இப்பொழுது அந்த url க்கான வலைப்பக்கம் Query திரையில் திறக்கும். இங்கு தேவையான Table க்கு மேற்புறமுள்ள மஞ்சள் நிற பெட்டியை க்ளிக் செய்வதன் மூலம் அந்த table ஐ தேர்வு செய்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டேபிள்களை தேர்வு செய்து கொள்ள இயலும்.   

Import பொத்தானை சொடுக்கிய பிறகு Excel sheet -இல் எந்த செல்லில் இந்த டேபிளை இருத்த வேண்டும் என்று தேர்வு செய்து கொண்டு, OK பொத்தானை சொடுக்குங்கள்.    

இதோ உங்களுக்கு தேவையான டேபிள் இப்பொழுது உங்கள் எச்செல் ஷீட்டில்.

.
Advertisements

10 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. புதிய மனிதா said, on செப்ரெம்பர் 23, 2010 at 7:45 முப

  அருமையான பகிர்வு …

 2. இளைய கவி said, on செப்ரெம்பர் 23, 2010 at 8:10 முப

  சாமி நீங்க நல்லா இருக்கனும் சாமி! உங்க புள்ள குட்டி எல்லாம் நல்லா இருக்கனும் மவராசா!

 3. எஸ்.கே said, on செப்ரெம்பர் 23, 2010 at 9:30 முப

  ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல் சார்! பல சமயம் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது!

 4. Jaleela Kamal said, on செப்ரெம்பர் 23, 2010 at 1:28 பிப

  பயனுள்ள பதிவுபிளாக்க்கரில் போஸ்ட் எக்ஸலில் டேபுல் எப்படி போடுவது.

 5. Jaleela Kamal said, on செப்ரெம்பர் 23, 2010 at 1:29 பிப

  தமிழ் டைப்பிங்குக்கு NHM ரைட்டர் டவுண்ட் லோடு செய்வது போல் (அரபிக் மற்றும் ஹிந்திக்கு எபப்டி செய்யனும் ஏதாவது லிங்க் இருந்தால் கொடுங்கள்.

 6. வானம்பாடிகள் said, on செப்ரெம்பர் 23, 2010 at 1:46 பிப

  excellent tool. thank you

 7. சூர்யா ௧ண்ணன் said, on செப்ரெம்பர் 23, 2010 at 2:06 பிப

  //Jaleela Kamal said… தமிழ் டைப்பிங்குக்கு NHM ரைட்டர் டவுண்ட் லோடு செய்வது போல் (அரபிக் மற்றும் ஹிந்திக்கு எபப்டி செய்யனும் ஏதாவது லிங்க் இருந்தால் கொடுங்கள்.//இந்த இரண்டு சுட்டியை ட்ரை பண்ணி பாருங்க.. எனக்கு இரண்டு மொழியும் தெரியாததால் முயற்சித்து பார்க்கவில்லை.. அரபி..ஹிந்தி …ஹிந்தி …

 8. Jaleela Kamal said, on செப்ரெம்பர் 23, 2010 at 2:23 பிப

  உடன் பதிலிக்கு மிக்க நன்றி சூரியா கண்ணன் சார்,இது என் பையனுகு தான் தேவை முயற்சித்து பார்க்க சொல்கிறேன்.ஹிந்தி நானும் முயற்சித்து பார்க்கிறேன்

 9. Sunitha said, on செப்ரெம்பர் 23, 2010 at 6:07 பிப

  அருமையான பதிவுsunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

 10. THIRUMALAI said, on செப்ரெம்பர் 25, 2010 at 9:04 முப

  wonderful.thank you very much .plz help me how to convert .exe file ebook in to pdf or word .plz help me


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: