சூர்யா ௧ண்ணன்

விண்டோஸ் செக்யூரிட்டி: நண்பர்களோடு உங்கள் கணினியை பகிரும் பொழுது..

Posted in மென்பொருள் உதவி, suryakannan, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 27, 2010
நீங்கள் உங்களது கணினியில் ஏதாவது முக்கியமான அல்லது இரகசியமான டாக்குமெண்டுகளை டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது, திடிரென வரும் உங்கள் நண்பர் ‘ஒரு சில நிமிடங்கள் உங்கள் கணினியை பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என்று கேட்கும் பொழுது உங்களால் மறுக்க முடியாது. உங்கள் டாக்குமெண்டுகளை மினிமைஸ் செய்து விட்டு  நண்பருக்கு உங்கள் கணினியை அல்லது மடிக்கணினியை கொடுக்கிறீர்கள். 
இந்த காலத்தில் எத்தனை நண்பர்கள் உண்மையானவர்களாக இருக்கிறார்கள்? நீங்கள் கொஞ்சம் அசந்தால் போதும் அவர், நீங்கள் மினிமைஸ் செய்து வைத்த டாக்குமெண்டை திறந்து பார்த்து, பின்னர் ஒன்றும் தெரியாதது போல உங்களிடம் கணினியை, அவரது பணி முடிந்து விட்டதாக கூறி ஒப்படைத்து விடுவார். ஆனால் பின்னாளில் அவர் வைக்கப் போகும் ஆப்பு!  இன்று அவர் உங்களை அறியாமல் பார்த்த அந்த குறிப்பிட்ட டாக்குமெண்ட் சம்பந்தமானதாக இருக்கலாம் யார் கண்டது? 
இது போன்ற சமயங்களில், நீங்கள் மினிமைஸ் செய்யாமல் அனைத்தையும் மூடிவிட்டு, உங்கள் நண்பருக்கு கொடுத்தால், அவர் உங்களை தவறாக நினைத்து விடுவாரோ? என்று வெள்ளந்தியாக யோசிப்பது புரிகிறது. சரி, இதற்கு சரியான தீர்வு LockThis! எனும் இலவச மென்பொருள் கருவி! 
இந்த மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு, இதில் உள்ளிருப்பு கடவு சொல்லை மாற்ற வேண்டும். System tray யில் உள்ள இந்த LockThis! ஐகானை வலது க்ளிக் செய்து, Admin panel ஐ சொடுக்குங்கள். 
பிறகு கடவு சொல் கேட்கும் பொழுது LockThis! என்பதை கொடுங்கள். இதுதான் முதன் முதலாக இதை பயன்படுத்தும் பொழுது உள்ளிருக்கும் கடவு சொல். இதைத்தான் நாம் மாற்ற வேண்டும். இனி Admin panel லில் Change Admin Password பொத்தானை சொடுக்கி புதிய கடவு சொல்லை கொடுக்கவும். 
இரண்டு முறை கடவு சொல்லை கொடுத்து OK பட்டனை சொடுக்கிய பின்னர் வரும் சிறு வசனப் பெட்டியில் OK பட்டனை சொடுக்கி புதிய கடவு சொல்லை activate செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்! இனி உங்கள் நண்பருக்கு கணினியை கொடுக்கும்பொழுது, உங்கள் டாக்குமெண்டை கண்ட்ரோல் கீயை அழுத்திய படி Minimize பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது. 

 

மறுபடி கடவு சொல் கொடுத்துதான் திறக்க முடியும்! 
LockThis! தரவிறக்க   
.
Advertisements

13 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. சிநேகிதி said, on செப்ரெம்பர் 27, 2010 at 1:25 பிப

  நல்ல தகவல்

 2. நட்புடன் ஜமால் said, on செப்ரெம்பர் 27, 2010 at 1:33 பிப

  செம செம நண்பரேநன்றி

 3. தேனம்மை லெக்ஷ்மணன் said, on செப்ரெம்பர் 27, 2010 at 1:53 பிப

  நல்ல பகிர்வு நன்றி சூர்யா..

 4. ஆ.ஞானசேகரன் said, on செப்ரெம்பர் 27, 2010 at 3:13 பிப

  நல்ல மென்பொருள் நண்பா…

 5. வானம்பாடிகள் said, on செப்ரெம்பர் 27, 2010 at 3:47 பிப

  superb again:)

 6. S.முத்துவேல் said, on செப்ரெம்பர் 27, 2010 at 4:47 பிப

  மிக மிக மிக மிக மிக மிக நல்ல பதிவு..தாங்கள் பதிவுகள். அனைத்தும். மிக அருமை.. -தங்கள் சிஷ்யன்

 7. curesure4u said, on செப்ரெம்பர் 27, 2010 at 4:51 பிப

  nalla sonneenka

 8. ஹாய் அரும்பாவூர் said, on செப்ரெம்பர் 27, 2010 at 8:07 பிப

  உங்கள் தகவலுக்கு நன்றி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சூர்யா கண்ணன்

 9. தமிழ் ரசிகா said, on செப்ரெம்பர் 28, 2010 at 2:24 முப

  எவ்வளளவு தகவல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

 10. BPL said, on செப்ரெம்பர் 28, 2010 at 7:17 முப

  Very Useful info. Thanks a Lot.

 11. BPL said, on செப்ரெம்பர் 28, 2010 at 7:18 முப

  Very Useful info. Thanks a Lot….

 12. BPL said, on செப்ரெம்பர் 28, 2010 at 7:18 முப

  Very useful info.Thanks a Lot….

 13. Kiyass said, on செப்ரெம்பர் 28, 2010 at 2:33 பிப

  மிகவும் அருமையான தகவல் சார், இப்படியாக பல தடவைகள் நான் மாட்டி இருக்கின்றேன், இனி இப்படியொரு நிகழ்வு இருக்காது என்று நம்பலாம். பகிர்வுக்கு நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: