சூர்யா ௧ண்ணன்

360º வியூ மைசூர் அரண்மனை: கலக்கல்.. அவசியம் பாருங்க..

Posted in இணையம் டிப்ஸ், suryakannan, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 25, 2010
இணையத்தில் 360º வியூவில் பல முக்கியமான இடங்களை நாம் பார்த்திருப்போம், கட்டிடக்கலையில் அசத்தும் மைசூர் அரண்மனையின் 360º வியூ.
மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 
21 பணரோமிக் படங்களை உள்ளடக்கியது. சிறந்த ஆடியோ விளக்கமும் உண்டு..
ஆங்காங்கே உள்ள கேமராவை க்ளிக் செய்து மேலதிக விவரத்தை பார்க்கலாம். 
அரண்மனையின் உள்ளே உள்ள ஒவ்வொரு அறையும், அதன் விளக்கமும் மிக அருமை. 
அசத்தலான ஆர்க்கிடேக்ச்சர்! நேரில் பலரும் பார்த்திருந்தாலும், இந்த தளத்தில் பொறுமையாக ரசிக்கலாம். 
அவசியம் பாருங்க.. 
360º மைசூர் அரண்மனை
.
Advertisements

டேட்டா எக்ஸ்போர்ட்டர் நீட்சி!

Posted in இணையம் டிப்ஸ், கூகிள் க்ரோம், நன்றி by suryakannan on செப்ரெம்பர் 20, 2010
மைக்ரோசாப்ட் அவுட் லுக் உபயோகிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பது Outlook Data Export நீட்சி! (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 
இந்த நீட்சியை பயன்படுத்தி அவுட் லுக்கில் உள்ள உங்கள் Mails, Contacts, Notes, Tasks, Appointment ஆகியவற்றை, உங்களுக்கு தேவையான ஃபோல்டரில், MSG, Unicode MSG, RTF, TXT, CSV, ICS, vCard, HTML, and XML போன்ற கோப்பு வகைகளில் சேமித்துக் கொள்ள முடியும். இது ஒரு இலவச நீட்சி என்பது நல்ல செய்தி! Microsoft Outlook -இல் default உள்ள இந்த வசதியை விட இதில் பல பயனுள்ள வசதிகள் தரப்பட்டுள்ளன.
 
 இதில் தேவையான வசதியை தேர்வு செய்து, அடுத்து திறக்கும் திரையில் Export Directory மற்றும் Output Format ஐ தேர்வு செய்து Start Export பொத்தானை சொடுக்கினால் போதுமானது. 
  இதிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், மின்னஞ்சல்களை Export செய்யும் பொழுது Start Date மற்றும் End date கொடுத்து நமக்கு தேவையான கால இடைவெளியில் உள்ள மின்னஞ்சல்களை மட்டும் எக்ஸ்போர்ட் செய்திட முடியும். 
Outlook Data Export நீட்சி தரவிறக்க 
  .

Mouse Extender பயனுள்ள கருவி!

Posted in இணையம் டிப்ஸ், விண்டோஸ் ட்ரிக்ஸ், Computer Tricks, MS Office Tips by suryakannan on செப்ரெம்பர் 18, 2010
ஒரு சிலரது கணினி டெஸ்க்டாப்பில், வால்பேப்பரே தெரியாத அளவிற்கு கோப்புகளும், ஃபோல்டர்களும்,  ஷார்ட்கட்களும் நிறைந்திருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் எப்படி  டெஸ்க்டாப்பில் தேடி உடனடியாக ஒரு பயன்பாட்டின் ஷார்ட்கட்டையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட வேர்டு கோப்பையோ திறப்பார்கள் என்பது அருகில் இருந்து பார்த்தால்தான் தெரியும். சரி! இவர்களுக்கு பயன்படும் வகையிலும், 
அடிக்கடி உபயோகிக்கும் அப்ளிகேஷன்கள், உலாவிகள், கருவிகளை இன்னும் விரைவாக செயல்படுத்த ஏதாவது ஒழுங்கு படுத்தப்பட்ட வழிமுறை உண்டா? என யோசிப்பவர்களுக்கு பயன்படும் வகையிலும் அமைந்திருக்கும் ஒரு இலவச மென்பொருள் கருவி Mouse Extender! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 
இதனை கணினியில் நிறுவிக்கொண்டு, முதலில் இதனை செயல் படுத்துவதற்கான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். 
பிறகு இந்த கருவியை இயக்கி, நாம் அடிக்கடி உபயோகிக்கும் பயன்பாடுகள், உலாவிகள், அல்லது கோப்புகளை இதில் ட்ராக் அண்டு ட்ராப் செய்து கொள்ள வேண்டும். 
மேலும் இதில் இணைக்கும் பயன்பாடுகளுக்கு ஏற்றபடி Group களை உருவாக்கி அவற்றுள்ளும் இணைத்துக் கொள்ளலாம். 
அத்தோடு, தற்பொழுது, இயக்கத்திலிருக்கும் பயன்பாடுகளையும் இணைக்கும் வசதி இதிலுண்டு. 
 
 இந்த கருவியில் இவை மட்டுமின்றி அடிக்கடி உபயோகிக்கும் url ஐயும் இணைத்துக் கொள்ளலாம். 
மேலும் இதிலுள்ள ஒரு சிறந்த பயன்பாடு என்னவெனில், நீங்கள் ஏதாவது தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறீர்கள், அல்லது DVD பர்ன் செய்து கொண்டிருக்கிறீர்கள், உறக்கம் வேறு வருகிறது, இது முடியும் வரை காத்திருக்க முடியாது, என்று நினைக்கும் பொழுது, இந்த கருவியை பயன் படுத்தி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு (ஒரு நாள் வரையிலும் கூட) பிறகு கணினியை shut down / hibernate/ sleep வசதியை ஏற்படுத்திக் கொண்டு தூங்க செல்லலாம். 
இணைக்கப்பட்ட ஐகான்களை இதில் ட்ராக் அண்ட் ட்ரோப் செய்து வரிசை முறையை மாற்றியமைக்கலாம். 
   
Mouse Extender தரவிறக்க! 
.

அருமையான இலவச வீடியோ கன்வெர்டர்

நாம் இணையத்தில் தரவிறக்கம் செய்தது, அல்லது நண்பர்கள் மூலமாக கிடைத்தது என பலத்தரப்பட்ட வீடியோ கோப்புகளை நமது கணினியில் வைத்திருப்போம். ஒரு சில சமயங்களில், இது போன்ற ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மற்றொரு கோப்பு வடிவிற்கு மாற்ற வேண்டிவரும் (மொபைல் போன்களுக்கும்.. வேறு சில பயன்பாட்டிற்கும்)
இது போன்ற பயன்பாட்டிற்கு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது Any Video Converter எனும் இலவச மென்பொருள் கருவி. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.. ஓட்டு போட்டுட்டு தரவிறக்கி கொள்ளுங்கள்) 
இந்த மென்பொருள் கருவியில் நாம் பயன்படுத்தக் கூடிய கோப்பு வகைகள்:- 

Input formats: avi, asf, mov, rm, rmvb, flv, mkv, mpg, 3gp, m4v, vob, YouTube videos and more

Output formats: avi, mp4, wmv, swf, flv, mkv, MPEG-1 and MPEG-2, mpg (PAL or NTSC), mp3, wma, ogg, aac, wave, m4a

இதை உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, Spyware Terminator ஐ நிறுவ வேண்டுமா என்று கேட்கும் திரை வரும் பொழுது, Do not install Spyware Terminator தேர்வு செய்து, உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். 

இதனை இயக்கி, Add Video பொத்தானை அழுத்தி தேவையான வீடியோவை உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 
பிறகு வலது புறமுள்ள Profile லிஸ்டில் க்ளிக் செய்து தேவையான கோப்பு வடிவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Preview வலது புற பேனில் தோன்றும், இதை பார்த்து, சரியாக உள்ளதெனில், மேலே உள்ள Convert  பொத்தானை அழுத்தினால் போதுமானது. 
நாம் தேர்வு செய்திருந்த கோப்பு வடிவிற்கு கன்வெர்ட் செய்து சேமிக்கப்படும். இதிலுள்ள மாற்றொரு சிறப்பம்சம், யூ டியுப் வீடியோக்களை தரவிறக்கி கன்வெர்ட் செய்வதுதான். இதற்கு, மேலே உள்ள YouTube பொத்தானை அழுத்தி Youtube video விற்கான url ஐ கொடுத்து OK பட்டனை சொடுக்கவும். 
இப்பொழுது லிஸ்டில் வந்துள்ள YouTube video வை வலது க்ளிக் செய்து,
தரவிறக்கம் செய்து கொண்டு பிறகு, கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 
இதன் தரமும் வேகமும் மற்ற கருவிகளைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. 

http://www.youtube.com/v/P5_Msrdg3Hk?fs=1&hl=en_US

Any Video Converter தரவிறக்க

.

க்ரோம்: பயனுள்ள யூ டியுப் நீட்சி! – எந்திரன்

Posted in இணையம் டிப்ஸ், கூகிள் க்ரோம், Computer Tricks, YouTube by suryakannan on செப்ரெம்பர் 17, 2010
வழக்கமாக நாம் க்ரோம் உலாவியில் யூ டியுப் தளத்தில் காணொளிகளை காணும் பொழுது, திரையில் அந்த வீடியோ மற்றும் அது சம்பந்தப்பட்ட பிற லிங்குகள், வசதிகள் தோன்றும்.  நாம் அந்த வசதிகளை காண மேலும் கீழுமாக உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, காணொளியையும் திரையில் தோன்றியிருக்கும் படியும், அதுவும் வழக்கமாக உள்ளது போலன்றி, அதைவிட பெரிதாகவும், திரையில் நம் வசதிக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ள ஒரு அருமையான நீட்சி! VidzBigger!
தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. அந்த லிங்கில் சென்று, Install பட்டனை க்ளிக் செய்து க்ரோம் உலாவியில் நிறுவிக்கொள்ளுங்கள். 
இதனை நிறுவியபிறகு, க்ரோம் உலாவியில், இது நிறுவப்பட்ட செய்தி தோன்றும். 
நாம் வழக்கமாக யூ டியூப் தளத்தில் படங்களை காணும் பொழுது கீழே உள்ளது போல தோன்றும். 
இந்த நீட்சியை நிறுவிய பிறகு, (ஐஸ்வர்யாவின் முத்தத்திற்கும் இந்த நீட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை)
திரையில் விரவியிருந்த பல ஆப்ஷன்கள் அனைத்தும் வலது புற பேனில், வரிசையாக மாற்றியமைக்கப்படும் என்பதோடல்லாமல், நாம் அந்த பக்கத்தில் ஸ்க்ரோல் செய்யும் பொழுது வலதுபுற பேன் மட்டுமே ஸ்க்ரோல் ஆகும் என்பதால், திரையில் படம் அது பாட்டிற்கு ஓடிக் கொண்டிருக்கும். 

மேலும் க்ரோம் உலாவியின் வலது மேல் புறத்தில் உள்ள இந்த நீட்சியின் ஐகானை க்ளிக் செய்து, Video Preferences பொத்தானை அழுத்தி, பின்னர் திறக்கும் பல வசதிகளில், நமக்கு தேவையான வசதிகளை சேர்க்கவும், நீக்கவும் செய்து யூ டியூப் தளத்தில் காணொளிகளை கண்டுகளிக்கலாம்.   
VidzBigger – க்ரோம் நீட்சி தரவிறக்க 

.

கூகிள் vs கூகிள் இன்ஸ்டன்ட்

Posted in இணையம் டிப்ஸ், ஜிமெயில் டிப்ஸ், google buzz tricks, Google Chrome tricks by suryakannan on செப்ரெம்பர் 10, 2010
இணைய தேடியந்திரத்தில் முக்கிய பங்காற்றிவரும் கூகிள் நிறுவனத்தின் கூகிள் இன்ஸ்டன்ட்! நீங்கள் சர்ச் பாக்ஸில் டைப் செய்ய செய்ய அதற்கான தேடுதல் முடிவுகள் உடனடியாக திரையில். இது தற்சமயம்   US, UK, France, Germany, Italy, Spain மற்றும்  Russia ஆகிய நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 

http://www.youtube.com/v/Wx0UNFtwWg0?fs=1&hl=en_US

இன்னும் மேலதிக விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

.

ஜிமெயில்: ஒரு அவசியமான ட்ரிக்!

ஜிமெயில் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு முக்கிய காரணமே, மற்ற மின்னஞ்சல் சேவைகளைக் காட்டிலும் இதிலுள்ள அதிகப்படியான வசதிகளும், புதிதுபுதிதாக பல வசதிகளை வழங்கிவரும் கூகுளின் சேவையுமே ஆகும். 
ஜிமெயிலை அனைவரும் ஒரே விதத்தில் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக ஒரு சிலர் தங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையுமே உடனடியாக படித்து விடுவது வழக்கம். மற்றும் சிலர் வருகின்ற மின்னஞ்சல்களில் மிகவும் அவசியமானவற்றை மட்டிலும் படித்துவிட்டு, மற்றவைகளை படிக்காமலேயே Inbox -ல் விட்டுவிடுவது, அல்லது ஏதாவது Label லில் சேமித்து வைப்பது என பல விதங்களில் பயன்பாடு மாறுபடுகிறது. 
இப்படி படிக்காமலேயே இன்பாக்ஸில் விட்டு வைத்து வரும்பொழுது சில நாட்கள் கழித்து Unread messages 28, 60 என ஒரு சிலரது ஜிமெயில் கணக்கில் நூற்றுக்கணக்கில் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். 
 
ஒருவேளை இவையனைத்தையும் டெலிட் செய்வதாக இருந்தால் வழி கொஞ்சம் சுலபம்தான். Drop down மெனுவிலுள்ள லிஸ்டில் Unread என்பதை தேர்வு செய்தால் Unread மெயில்கள் அனைத்தும் தேர்வாகிவிடும்,
 
Delete பொத்தானை அழுத்தி நீக்கிவிடலாம். 
 
ஆனால் இப்படி தேர்வு செய்யும் பொழுது, Unread மெயில்கள் மட்டும் தனித்து திரையில் தெரியாது, ஏற்கனவே படித்த மெயில்களுடன் கலந்து தேதி வாரியாகவே தோன்றும். இதனால் Unread மெயில்களை  சில சமயங்களில் பல திரைகளில் தேடவேண்டியிருக்கும். 
அப்படியானால் கடந்த நாட்களில் படிக்காத மின்னஞ்சல்களை மட்டும் வரிசையாக பட்டியலில் பார்த்து, தேவையானவற்றை வாசித்தும், தேவையற்ற மின்னஞ்சல்களை delete செய்யவும் ஏதேனும் வழியிருக்கிறதா? இதற்கான ஒரு சிறிய ட்ரிக் ஒன்றை பார்க்கலாம். 
உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, மேலே உள்ள Search Mail பெட்டியில் is: என டைப் செய்யுங்கள். 
திறக்கும் லிஸ்ட் பாக்ஸில் is:unread என்பதை தேர்வு செய்யுங்கள். (அல்லது டைப் செய்து கொள்ளலாம்) இப்பொழுது உங்கள் ஜிமெயில் கணக்கில் நீங்கள் படிக்காத அனைத்து மின்னஞ்சல்களும் வரிசையாக பட்டியலில் கிடைக்கும்.
ஆனால் இந்த முறையில் நமக்கு இன்பாக்ஸில் உள்ள Unread மெயில்கள் மட்டுமின்றி, நீங்கள் உருவாக்கி சேமித்து வைத்துள்ள label களில் உள்ள Unread மெயில்களும் பட்டியலிடப்படும். ஆனால் நமக்கு inbox -இல் உள்ள Unread  மெயில்கள் மட்டும் பார்க்க வேண்டுமெனில், அதே கட்டளையோடு label:inbox என கொடுத்தால் போதுமானது. (is:unread label:inbox)
இப்பொழுது உங்கள் இன்பாக்ஸில் உள்ள படிக்காத மெயில்கள் மட்டும் பட்டியலில் காணக் கிடைக்கும்.      
.       

இணைய வீடியோக்களை முழுத்திரையில் கண்டுகளிக்க

Posted in இணையம் டிப்ஸ், வீடியோ, Magic, Rotate Video in VLC by suryakannan on ஓகஸ்ட் 21, 2010
நம்மில் பலர் இணையத்தில் யூ ட்யுப் போன்ற தளங்களில் உள்ள வீடியோக்களை வழக்கமாக Google Chrome, Firefox, IE போன்ற இணைய உலாவியில்தான் பார்த்து வருகிறோம். இதில் நமக்கு சிறிய அளவில்தான் படங்களை காண முடிகிறது.

இதோ சுதந்திர இலவச மென்பொருளான VLC மீடியா ப்ளேயரில் இது போன்ற வீடியோக்களை முழுத் திரையில் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் தேவையான வலைப்பக்கத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் வீடியோவிற்கான URL ஐ காப்பி செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக http://www.youtube.com/watch?v=mhRIs_XhM3U&feature=fvsr . இப்பொழுது VLC Media Player ஐ திறந்து கொண்டு, Media Menu வில் சென்று 

Open Network Stream வசதியை க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் Open Media வசன்ப்பெட்டியில் Network டேபில், Please enter a network URL என்பதற்கு கீழாக உள்ள பெட்டியில் நீங்கள் காப்பி செய்த URL ஐ பேஸ்ட் செய்து கீழே உள்ள Play பொத்தானை சொடுக்குங்கள்.

ஓரிரு வினாடிகளுக்கு மேலே உள்ளது போன்ற திரை தோன்றி மறைந்த பிறகு, உங்கள் அபிமான வீடியோ VLC Player -ல் ஓடத்துவங்கும், இப்பொழுது வீடியோ திரையில் வழக்கம்போல இரட்டை க்ளிக் செய்து முழுத்திரையில் காண முடியும்.

 

.

Bing தேடுபொறியில் தோன்றும் படங்களை சேமிக்க

Posted in இணையம் டிப்ஸ், Bing Tips, Computer Tricks by suryakannan on ஓகஸ்ட் 11, 2010
Google, Yahoo போல Bing தேடுபொறியும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேடுபொறியில், முதல் பார்வையிலேயே அனைவரையும் கவர்வது இதன் பின்புலத்தில் உள்ள அழகான படங்கள்தான். 
இது போன்ற படங்களை நமது கணினியில் தரவிறக்கி கொண்டால், பிறகு இதை சுவர் தாளாகவோ, அல்லது மற்ற உபயோகத்திற்கோ வைத்துக் கொள்ளலாம் என பலரும் யோசித்திருப்பார்கள். ஆனால் இதை மற்ற தளங்களில் உள்ளது போல, வலது க்ளிக் செய்து சேமிக்க முடியாது. இதற்காக ஒரு சில கருவிகள் பயன்படுகின்றன. ஆனால் இவற்றில் எதையும் பயன்படுத்தாமல், இந்த படங்களை நெருப்பு நரி உலாவியில் எப்படி சேமிப்பது என்பதை பார்க்கலாம். 
முதலில் உங்கள் நெருப்பு நரி உலாவியில் Bing தளத்திற்கு செல்லுங்கள். தளம் முழுவதுமாக திறந்த பிறகு, Tools க்ளிக் செய்து Page Info செல்லுங்கள்.
இப்போது திறக்கும் விண்டோவில் Media tab ஐ க்ளிக் செய்து, சரியான Bing பின்புல படத்தின் கோப்பை தேர்வு செய்து, கீழே உள்ள Save as பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 
இனி எங்கு சேமிக்க வேண்டும் என்பதை கொடுத்துவிட்டால் போதுமானது. அவ்வளவுதான். 

நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி! – நேற்றைய தொடர்ச்சி..

நேற்றைய எனது இடுகையில் (கூகிள் க்ரோம் – மிகப் பயனுள்ள நீட்சி!) கூகிள் க்ரோம் உலாவியில், வலைப்பக்கங்களில் பொருள் புரியாத சொற்களுக்கு, Google Dictionary நீட்சியின்  மூலமாக எப்படி அதே திரையில் விளக்கம் காண்பது என்பதை பார்த்தோம். இன்று, இது போன்ற  ஒரு உபயோகமான வசதியை அளிக்கும் Inline Google Definitions எனும் நெருப்புநரி உலாவிக்கான நீட்சியை குறித்து பார்க்கலாம். (தரவிறக்கச் சுட்டி இடுகையின் கீழ் தரப்பட்டுள்ளது) 
இந்த நீட்சியை தரவிறக்கி நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, ஒரு முறை உலாவியை ரீஸ்டார்ட் செய்யவேண்டியிருக்கும். 
இனி வலைப்பக்கங்களில் பொருள் அல்லது விளக்கம் தேவைப்படும் வார்த்தையை தேர்வு செய்து, மௌசின் வலது பொத்தானை அழுத்தி, Inline Definitions கருவியை சொடுக்குங்கள். 
நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் அதே வலைப்பக்கத்திலேயே  அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கான  பொருள் மற்றும் விளக்கங்கள், பல்வேறு தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டு வழங்கப்படும் என்பது இதனுடைய சிறப்பம்சம். 
Inline Google Definitions – நீட்சி தரவிறக்க
    
.