சூர்யா ௧ண்ணன்

டேட்டா எக்ஸ்போர்ட்டர் நீட்சி!

Posted in இணையம் டிப்ஸ், கூகிள் க்ரோம், நன்றி by suryakannan on செப்ரெம்பர் 20, 2010
மைக்ரோசாப்ட் அவுட் லுக் உபயோகிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பது Outlook Data Export நீட்சி! (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 
இந்த நீட்சியை பயன்படுத்தி அவுட் லுக்கில் உள்ள உங்கள் Mails, Contacts, Notes, Tasks, Appointment ஆகியவற்றை, உங்களுக்கு தேவையான ஃபோல்டரில், MSG, Unicode MSG, RTF, TXT, CSV, ICS, vCard, HTML, and XML போன்ற கோப்பு வகைகளில் சேமித்துக் கொள்ள முடியும். இது ஒரு இலவச நீட்சி என்பது நல்ல செய்தி! Microsoft Outlook -இல் default உள்ள இந்த வசதியை விட இதில் பல பயனுள்ள வசதிகள் தரப்பட்டுள்ளன.
 
 இதில் தேவையான வசதியை தேர்வு செய்து, அடுத்து திறக்கும் திரையில் Export Directory மற்றும் Output Format ஐ தேர்வு செய்து Start Export பொத்தானை சொடுக்கினால் போதுமானது. 
  இதிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், மின்னஞ்சல்களை Export செய்யும் பொழுது Start Date மற்றும் End date கொடுத்து நமக்கு தேவையான கால இடைவெளியில் உள்ள மின்னஞ்சல்களை மட்டும் எக்ஸ்போர்ட் செய்திட முடியும். 
Outlook Data Export நீட்சி தரவிறக்க 
  .
Advertisements

க்ரோம்: பயனுள்ள யூ டியுப் நீட்சி! – எந்திரன்

Posted in இணையம் டிப்ஸ், கூகிள் க்ரோம், Computer Tricks, YouTube by suryakannan on செப்ரெம்பர் 17, 2010
வழக்கமாக நாம் க்ரோம் உலாவியில் யூ டியுப் தளத்தில் காணொளிகளை காணும் பொழுது, திரையில் அந்த வீடியோ மற்றும் அது சம்பந்தப்பட்ட பிற லிங்குகள், வசதிகள் தோன்றும்.  நாம் அந்த வசதிகளை காண மேலும் கீழுமாக உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, காணொளியையும் திரையில் தோன்றியிருக்கும் படியும், அதுவும் வழக்கமாக உள்ளது போலன்றி, அதைவிட பெரிதாகவும், திரையில் நம் வசதிக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ள ஒரு அருமையான நீட்சி! VidzBigger!
தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. அந்த லிங்கில் சென்று, Install பட்டனை க்ளிக் செய்து க்ரோம் உலாவியில் நிறுவிக்கொள்ளுங்கள். 
இதனை நிறுவியபிறகு, க்ரோம் உலாவியில், இது நிறுவப்பட்ட செய்தி தோன்றும். 
நாம் வழக்கமாக யூ டியூப் தளத்தில் படங்களை காணும் பொழுது கீழே உள்ளது போல தோன்றும். 
இந்த நீட்சியை நிறுவிய பிறகு, (ஐஸ்வர்யாவின் முத்தத்திற்கும் இந்த நீட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை)
திரையில் விரவியிருந்த பல ஆப்ஷன்கள் அனைத்தும் வலது புற பேனில், வரிசையாக மாற்றியமைக்கப்படும் என்பதோடல்லாமல், நாம் அந்த பக்கத்தில் ஸ்க்ரோல் செய்யும் பொழுது வலதுபுற பேன் மட்டுமே ஸ்க்ரோல் ஆகும் என்பதால், திரையில் படம் அது பாட்டிற்கு ஓடிக் கொண்டிருக்கும். 

மேலும் க்ரோம் உலாவியின் வலது மேல் புறத்தில் உள்ள இந்த நீட்சியின் ஐகானை க்ளிக் செய்து, Video Preferences பொத்தானை அழுத்தி, பின்னர் திறக்கும் பல வசதிகளில், நமக்கு தேவையான வசதிகளை சேர்க்கவும், நீக்கவும் செய்து யூ டியூப் தளத்தில் காணொளிகளை கண்டுகளிக்கலாம்.   
VidzBigger – க்ரோம் நீட்சி தரவிறக்க 

.

கூகிள் க்ரோம்:- படங்களை கையாள ஒரு பயனுள்ள நீட்சி

Posted in கூகிள் க்ரோம் by suryakannan on ஓகஸ்ட் 21, 2010
நாம் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, Flickr போன்ற தளங்களில் காணும் புகைப்படங்களை முழுத்திரையில் மற்றும், ஸ்லைட் ஷோ வடிவில் காண கூகிள் க்ரோம் உலாவிக்கான ஒரு எளிய  நீட்சி SlideShow. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). 

இந்த தளத்தில் உள்ள Install பட்டனை க்ளிக் செய்து உங்கள் க்ரோம் உலாவியில் எளிதாக பதிந்து கொள்ளலாம். 

அட்ரஸ் பாரின் வலது புறம் இந்த நீட்சி பதிந்து விட்டதற்கான குறிப்பு தோன்றும். இந்த நீட்சியின் பட்டன் அல்லது லிங்க் எதுவும் உங்கள் உலாவியில் தோன்றாது.
ஆனால் இந்த SlideShow நீட்சி எந்தெந்த தளங்களில் வேலை செய்யுமோ, அந்தந்த தளங்கள் திறக்கப்படும் பொழுது, தானாகவே இது வேலை செய்ய ஆரம்பிக்கும். உங்களுக்கு தேவையான பதத்தை க்ளிக் செய்த பிறகு, அந்த குறிப்பிடட்ட படம் மட்டும் பெரிதாக திரையில் தோன்றும், பிற படங்கள் கீழே சிறிதாக SlideShow போல தோற்றமளிக்கும். 
இந்த நீட்சி Flickr போன்ற புகைப்பட தளங்களை விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நீட்சி என்பதில் ஐயமில்லை.

.

கூகிள் க்ரோம் – மிகப் பயனுள்ள நீட்சி!

Posted in கூகிள் க்ரோம், Google Chrome tricks by suryakannan on ஓகஸ்ட் 5, 2010

கூகிள் க்ரோம் உலாவியில், நாம் இணையத்தில் ஆங்கில கட்டுரைகளை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருள் தெரியவில்லை எனில் அதற்காக மற்றொரு டேபில், இதற்க்கான பொருளை தேடவேண்டிய அவசியம் இனி இல்லை. 

கூகிள் க்ரோமிற்க்கான Google Dictionary நீட்சி இந்த பணியை மிகவும் எளிதாக்குகிறது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இதனை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, உங்கள் க்ரோம் உலாவியில் address bar க்கு அருகில் Dictionary icon புதிதாக வந்திருப்பதை காணலாம். 
இனி தேவையான வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, பொருள் தெரியாத வார்த்தையை தேர்வு செய்து இந்த ஐகானை கிளிக்கினால், விளக்கம் அதே திரையில் கிடைக்கும். 

அல்லது தேவையான வார்த்தையின் மீது இரட்டை க்ளிக் செய்தால் அந்த வார்த்தையையொட்டி, அதன் விளக்கம் கிடைக்கும்.

இந்த நீட்சியின் வசதிகளை மாற்றியமைக்க, அட்ரஸ் பார் அருகிலுள்ள ஐகானை க்ளிக் செய்து, அங்கு Extension options சென்றால் போதுமானது. Google Chrome Dictionary Extension தரவிறக்க 

திக்குத் தெரியாமல் விழிக்கையில்

Posted in இணையம் டிப்ஸ், கூகிள் க்ரோம் by suryakannan on ஓகஸ்ட் 4, 2010
கூகிள் நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது. இன்றைய இணைய உலகில் நாம் ஒரு தொழில்நுட்ப வல்லுனராக இல்லாவிட்டாலும் கூட, அவ்வப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தாற்போல நம்மை நாம் அப்டேட் செய்யாவிட்டால், நாம் outdated ஆகிவிடுவோம் என்பது நிதர்சனமான உண்மை.

சரி விஷயத்திற்கு வருவோம், ஏதோ ஒரு புதிய நகரத்திற்கு உங்கள் வாகனத்தில் செல்கிறீர்கள், அங்கு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது சாலைக்கு செல்ல வேண்டும் எனில் விலாசம் தெரியாத ஊரில் ஒவ்வொருவரிடமும் வழி கேட்டு, விசாரித்து அங்கு செல்வதற்குள் டென்ஷனாகி விடும். பதிலாக உங்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, உங்கள் இணைய இணைப்புள்ள மடிகணினி அல்லது netbook அல்லது தற்பொழுது இணைய இணைப்புடன் வருகின்ற செல்போன் வழியாக இணையத்திற்குள் நுழைந்து, Google Maps தளத்திற்கு சென்று தற்பொழுது நீங்கள் உள்ள நகரத்தின் சாலை பெயரையும், போக வேண்டிய சாலை பெயரையும் கொடுத்தால், அந்த குறிப்பிட்ட சாலைக்கு செல்ல எந்தெந்த வழிகள் உள்ளன, எவ்வளவு நேரம் எடுக்கும்  என்பதை  தெளிவாக தெரிந்து கொண்டு பயனடையலாம் என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், இது அறியாதவர்களுக்காக.

maps.google.com தளத்திற்கு செல்லுங்கள்.

  Set default location பகுதியில்  நீங்கள் இருக்கும் நகரத்தின் பெயரி கொடுத்து சேமித்துக் கொள்ளுங்கள். பிறகு Get Directions லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இனி A க்கு நேராக நீங்கள் தற்பொழுதுள்ள சாலை அல்லது பகுதியின் பெயரையும், B க்கு நேராக நீங்கள் செல்ல வேண்டிய சாலையின் பெயரையும் கொடுத்து Get Directions பொத்தானை அழுத்துங்கள்.

அடுத்த நொடியில் நீங்கள் செல்லவேண்டிய சாலைகளின் வரைபடம் உங்கள் திரையில்..

எந்த சாலையிலிருந்து எந்த திசையில் திரும்ப வேண்டும் என்பதுவரை விரிவான விளக்கம் இடதுபுற பேனில் தோன்றுவது சிறப்பு.

அதுமட்டுமின்றி அந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல மற்று வழிகளும், அங்கு சென்றடைய ஆகும் காலம் ஆகியவற்றுடன் பட்டியலில் கிடைக்கும். தேவையான மாற்று வழியை கிளிக் செய்து அந்த வரைபடத்தையும் காணலாம்.

கூகிள் உங்கள் பயணத்தை எளிதாக்குகிறது.

எந்த வாகனத்தில் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

.

உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்?

நீங்கள் வலைப்பதிவரா? நீங்கள் ஒரு வலைப்பக்கத்திற்கு சொந்தக்காரரா? அல்லது நீங்கள் வலைப்பக்கத்தை வடிவமைப்பவரா? 

ஒரு சில வலைப்பக்கங்கள் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கலாம். அது நமது வலைப்பூவாக இருக்கிற பட்சத்தில், நமது நண்பர்களோ அல்லது வாசகர்களோ நம்மிடம் ‘ஏன் உங்கள் வலைப்பக்கம் திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது?’ என கேட்கும் பொழுது, அது எதனால் என நாம் எப்படி அறிந்து கொள்வது?

நமது தளத்தில் உள்ள ஏதாவது விஜிட்டினாலோ அல்லது ஏதாவது ஒரு லிங்க், படம் அல்லது ஓட்டுப் பட்டை என ஏதோ ஒன்று லோட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது.  இதை கூகிள் க்ரோம் உலாவியில் எப்படி கண்டறிவது என்று பார்க்கலாம். 

அந்த குறிப்பிட்ட வலைப்பக்கத்தை கூகிள் க்ரோம் உலாவியில் திறந்து கொள்ளுங்கள். பிறகு அந்த பக்கத்தில் வலது க்ளிக் செய்து, Context menu வில் Inspect element ஐ க்ளிக் செய்யுங்கள். 

இனி திறக்கும் Developer Tools விண்டோவில் Resources பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.இப்பொழுது You need to enable resource tracking to use this panel என்பதில் Only enable for this session என்பதை தேர்வு செய்து Enable resource tracking பொத்தானை அழுத்துங்கள். 

அந்த வலைப்பக்கம் மறுபடியும் லோட் ஆகும். இப்பொழுது அந்த பக்கத்தில் உள்ள ஒவ்வொரு ஐட்டமும் லோட் ஆவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். 
இந்த பதிவை உங்களுக்கு வழங்கியவர்கள் .

உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்?

நீங்கள் வலைப்பதிவரா? நீங்கள் ஒரு வலைப்பக்கத்திற்கு சொந்தக்காரரா? அல்லது நீங்கள் வலைப்பக்கத்தை வடிவமைப்பவரா? 

ஒரு சில வலைப்பக்கங்கள் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கலாம். அது நமது வலைப்பூவாக இருக்கிற பட்சத்தில், நமது நண்பர்களோ அல்லது வாசகர்களோ நம்மிடம் ‘ஏன் உங்கள் வலைப்பக்கம் திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது?’ என கேட்கும் பொழுது, அது எதனால் என நாம் எப்படி அறிந்து கொள்வது?

நமது தளத்தில் உள்ள ஏதாவது விஜிட்டினாலோ அல்லது ஏதாவது ஒரு லிங்க், படம் அல்லது ஓட்டுப் பட்டை என ஏதோ ஒன்று லோட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது.  இதை கூகிள் க்ரோம் உலாவியில் எப்படி கண்டறிவது என்று பார்க்கலாம். 

அந்த குறிப்பிட்ட வலைப்பக்கத்தை கூகிள் க்ரோம் உலாவியில் திறந்து கொள்ளுங்கள். பிறகு அந்த பக்கத்தில் வலது க்ளிக் செய்து, Context menu வில் Inspect element ஐ க்ளிக் செய்யுங்கள். 

இனி திறக்கும் Developer Tools விண்டோவில் Resources பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.இப்பொழுது You need to enable resource tracking to use this panel என்பதில் Only enable for this session என்பதை தேர்வு செய்து Enable resource tracking பொத்தானை அழுத்துங்கள். 

அந்த வலைப்பக்கம் மறுபடியும் லோட் ஆகும். இப்பொழுது அந்த பக்கத்தில் உள்ள ஒவ்வொரு ஐட்டமும் லோட் ஆவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். .

சிறுவர்களுக்கான இணைய பாதுகாப்பு – நீட்சி!

இப்பொழுதெல்லாம் கணினியும், இணையமும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் வீட்டிலும் பயன்பாட்டில் உள்ளது. பெரியவர்கள் தங்களுக்கான வேலைகளை இணையத்தில் செய்து கொள்கிறார்கள். சிறுவர்கள் உள்ள இல்லங்களில் உள்ள பெரியவர்களுக்கு எப்பொழுதுமே உள்ளூர ஒரு கலக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமது குழந்தைகள் ஏதாவது பலான, பலான வலைப்பக்கங்களை பார்த்து விடுவார்களோ என்ற பீதி வருவது நியாயமானதுதான். 
இது போன்ற பலான பலான பக்கங்கள் உங்கள் கணினியில் திறக்காமல் இருக்க (திறக்கலையின்னா.. இருக்கவே இருக்கு ப்ரொவ்சிங் சென்டர்.. என்று நீங்கள் புலம்புவது தெரிகிறது.. ஆனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது) நிறைய மென்பொருட்கள் சந்தையில் விற்கப்படுகிறன.  ஆனால் பணம் செலவழித்து வாங்க வேண்டுமே? 
இதோ இலவசமாக இவற்றை உங்கள் கணினியில் தடை செய்ய கூகிள் க்ரோமிற்க்கான எளிய நீட்சி Kid safe – LinkExtend  உங்களுக்காக.   (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).
இந்த நீட்சியை உங்கள் கூகிள் க்ரோம் உலாவியில் நிறுவியபிறகு, நீங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான செயல், இதன் Option பகுதிக்குச் சென்று Allow entering unsafe sites என்ற ஆப்ஷனை uncheck செய்து விடுவதுதான். 
  மேலும் இந்த நீட்சி Web of Trust, Alexa, Browser Defender, Web Security Guard, ICRA மற்றும் Google Safe Search போன்ற சக்தி வாய்ந்த கருவிகளால் கட்டுப்படுத்தப் படுவதால், உங்கள் வயிற்று கலக்கம் மட்டுப்பட்டிருப்பது உங்களால் உணர முடியும். 
  இந்த நீட்சியை நிறுவிய பிறகு எந்த தேடுபொறியில் சென்று பலான பக்கங்களை தேடினாலும். No Chance.
முயற்சி செய்து பாருங்கள். 
Download the Kid Safe – LinkExtend extension
இந்த பதிவை உங்களுக்கு வழங்கியவர்கள் 

க்ளிக் கூகிள் வியூ – நீட்சி

Posted in கூகிள் க்ரோம் by suryakannan on மார்ச் 19, 2010
நாம் நமக்கு தேவையான படங்களை இணையத்தில் தேட Google Image ஐ பெரும்பாலும் பயன் படுத்துகிறோம், கூகிள் இமேஜ் இல் இப்படியாக தேடப்படும் படங்கள் முதலில் அந்த படம் இடம்பெற்றிருக்கும் வலைப்பக்கமும் திறக்கப்பட்டு அதன் இடது மூலையில், நாம் தேர்வு செய்த படம் சிறிய Thumbnail ஆக தோன்றும், அருகில் See Full size image என்ற லிங்கும் தோன்றும், அதனை க்ளிக் செய்த பின்னர் தான் படம் உண்மையான அளவில் தனித்து காண்பிக்கப்படும்.

இப்படி சுற்றி வளைத்து போகாமல் படத்தை க்ளிக் செய்தவுடனே திரையில் உண்மையான அளவில் தோன்ற கூகிள் க்ரோமிற்கான ஒரு எளிய நீட்சி clickGOOGLEview
 
பதிவு திருடர்களின் கவனத்திற்கு .., 
ஒவ்வொரு பதிவு எழுதுவதற்கு முன்னரும், அதை குறித்த யோசனை, தகவல்கள் திரட்டுதல், தளங்களை கண்டறிதல், பயன்பாடுகளை தேடுதல், சோதித்துப் பார்த்தல் இவை அனைத்தும் போக நண்பர்களின் ஒரு சில சந்தேகங்களை போக்குதல் என பல வேலைகளை எனது மற்ற அலுவல் நேரங்களை மிச்சப் படுத்தி நான் செய்து வருகிறேன். 

ஆனால் ஒரு சில பதிவு திருடர்கள், நோகாமல் பதிவை திருடி தங்களின் வலைபக்கங்களில் இட்டுக் கொள்வது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட நாளிதழுக்கும் அவரது பெயரில் அனுப்பி வைத்து சம்பாதித்து கொள்கிறார். இதனால் எழுதுகிற ஆர்வமும் குறைந்து வருகிறது..

இதற்கு மேல் எனது பதிவுகளை திருட வேண்டாம் என கேட்டுக் கொள்வதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்?…  

.