சூர்யா ௧ண்ணன்

கூகிள் vs கூகிள் இன்ஸ்டன்ட்

Posted in இணையம் டிப்ஸ், ஜிமெயில் டிப்ஸ், google buzz tricks, Google Chrome tricks by suryakannan on செப்ரெம்பர் 10, 2010
இணைய தேடியந்திரத்தில் முக்கிய பங்காற்றிவரும் கூகிள் நிறுவனத்தின் கூகிள் இன்ஸ்டன்ட்! நீங்கள் சர்ச் பாக்ஸில் டைப் செய்ய செய்ய அதற்கான தேடுதல் முடிவுகள் உடனடியாக திரையில். இது தற்சமயம்   US, UK, France, Germany, Italy, Spain மற்றும்  Russia ஆகிய நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 

http://www.youtube.com/v/Wx0UNFtwWg0?fs=1&hl=en_US

இன்னும் மேலதிக விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

.

Advertisements

ஜிமெயில்: ஒரு அவசியமான ட்ரிக்!

ஜிமெயில் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு முக்கிய காரணமே, மற்ற மின்னஞ்சல் சேவைகளைக் காட்டிலும் இதிலுள்ள அதிகப்படியான வசதிகளும், புதிதுபுதிதாக பல வசதிகளை வழங்கிவரும் கூகுளின் சேவையுமே ஆகும். 
ஜிமெயிலை அனைவரும் ஒரே விதத்தில் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக ஒரு சிலர் தங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையுமே உடனடியாக படித்து விடுவது வழக்கம். மற்றும் சிலர் வருகின்ற மின்னஞ்சல்களில் மிகவும் அவசியமானவற்றை மட்டிலும் படித்துவிட்டு, மற்றவைகளை படிக்காமலேயே Inbox -ல் விட்டுவிடுவது, அல்லது ஏதாவது Label லில் சேமித்து வைப்பது என பல விதங்களில் பயன்பாடு மாறுபடுகிறது. 
இப்படி படிக்காமலேயே இன்பாக்ஸில் விட்டு வைத்து வரும்பொழுது சில நாட்கள் கழித்து Unread messages 28, 60 என ஒரு சிலரது ஜிமெயில் கணக்கில் நூற்றுக்கணக்கில் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். 
 
ஒருவேளை இவையனைத்தையும் டெலிட் செய்வதாக இருந்தால் வழி கொஞ்சம் சுலபம்தான். Drop down மெனுவிலுள்ள லிஸ்டில் Unread என்பதை தேர்வு செய்தால் Unread மெயில்கள் அனைத்தும் தேர்வாகிவிடும்,
 
Delete பொத்தானை அழுத்தி நீக்கிவிடலாம். 
 
ஆனால் இப்படி தேர்வு செய்யும் பொழுது, Unread மெயில்கள் மட்டும் தனித்து திரையில் தெரியாது, ஏற்கனவே படித்த மெயில்களுடன் கலந்து தேதி வாரியாகவே தோன்றும். இதனால் Unread மெயில்களை  சில சமயங்களில் பல திரைகளில் தேடவேண்டியிருக்கும். 
அப்படியானால் கடந்த நாட்களில் படிக்காத மின்னஞ்சல்களை மட்டும் வரிசையாக பட்டியலில் பார்த்து, தேவையானவற்றை வாசித்தும், தேவையற்ற மின்னஞ்சல்களை delete செய்யவும் ஏதேனும் வழியிருக்கிறதா? இதற்கான ஒரு சிறிய ட்ரிக் ஒன்றை பார்க்கலாம். 
உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, மேலே உள்ள Search Mail பெட்டியில் is: என டைப் செய்யுங்கள். 
திறக்கும் லிஸ்ட் பாக்ஸில் is:unread என்பதை தேர்வு செய்யுங்கள். (அல்லது டைப் செய்து கொள்ளலாம்) இப்பொழுது உங்கள் ஜிமெயில் கணக்கில் நீங்கள் படிக்காத அனைத்து மின்னஞ்சல்களும் வரிசையாக பட்டியலில் கிடைக்கும்.
ஆனால் இந்த முறையில் நமக்கு இன்பாக்ஸில் உள்ள Unread மெயில்கள் மட்டுமின்றி, நீங்கள் உருவாக்கி சேமித்து வைத்துள்ள label களில் உள்ள Unread மெயில்களும் பட்டியலிடப்படும். ஆனால் நமக்கு inbox -இல் உள்ள Unread  மெயில்கள் மட்டும் பார்க்க வேண்டுமெனில், அதே கட்டளையோடு label:inbox என கொடுத்தால் போதுமானது. (is:unread label:inbox)
இப்பொழுது உங்கள் இன்பாக்ஸில் உள்ள படிக்காத மெயில்கள் மட்டும் பட்டியலில் காணக் கிடைக்கும்.      
.       

ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு

Posted in ஜிமெயில் டிப்ஸ், using Gmail Offline by suryakannan on ஜூலை 5, 2010
ஜிமெயில் கணக்கில் உங்களுக்கு Paypal மற்றும் eBay போன்ற பண பரிவர்த்தனை செய்ய உதவும் தளங்களிலிருந்து, வரும் மின்னஞ்சல்கள் உண்மையாகவே அந்த தளத்திலிருந்துதான் வருகிறது என்று எப்படி நம்ப முடியும்? 
இப்படி உங்களுக்கு வந்த மின்னஞ்சலில் உள்ள சுட்டிக்கு சென்று, உங்கள் கணக்கு விவரங்களை அளிக்கிறீர்கள். (அச்சு அசலில் Paypal / eBay தளத்தைப் போலவே இருக்கும்) அதில் நீங்கள் அளிக்கும் விவரங்களை களவாடிக்கொண்டு,  உங்களுக்கு பெரிய அளவில் ஒரு ஆப்பு வைத்தால்… கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.    
மின்னஞ்சல் சேவையில் பல சிறப்பு வசதிகளை இலவசமாக வழங்கிவரும், கூகிள் (ஜிமெயில்) இதைப் பற்றி சிந்திக்காமல் இருக்குமா? 
உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். வலது மேற்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்து, 
Labs பகுதிக்கு செல்லுங்கள். 
அங்கு Authentication icon for verified senders என்ற பகுதிக்கு செல்லுங்கள். 
இதை Enable செய்து விட்டால் போதும். இனி ஜிமெயில் Paypal மற்றும் eBay தளங்களைப் போன்ற பெயர்களை தாங்கிவரும் போலி மெயில்களை ஃபில்டர் செய்து விடும். 
 
 தற்சமயம் ஜிமெயில் இந்த வசதியை PayPal மற்றும் eBay கணக்குகளுக்கு மட்டுமே அளித்துள்ளது. 
ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்யாதவர்களுக்கும் ஓட்டுரிமை உண்டு..
.

இப்படி ஒரு இமெயில் உங்களுக்கு வந்தால்

Posted in ஜிமெயில் டிப்ஸ், Computer Tricks by suryakannan on ஜூன் 10, 2010

சமீப காலமாக இணையத்தில் ஹேக்கர்களின் தொல்லை தாங்க முடிய வில்லை.  இதோ நண்பர் ஒருவருக்கு வந்த மின்னஞ்சல் எனக்கு ஃபோர்வேர்டு செய்திருந்தார்.

ஜிமெயில் டீமில் இருந்து வந்து போன்ற ஒரு மிரட்டல் மெயில், ஜிமெயிலில் User Name, password கொடுத்து உள்ளே நுழைகிறோம். நமது ஜிமெயில் கணக்கின் விவரங்கள் அனைத்துமே, ஜிமெயில் சர்வரில் சேமிக்கப் பட்டுள்ள நிலையில், நம்மிடம் எதற்கு மறுபடியும்    User Name, password ஐ கொடுக்க வேண்டும். 
இது போன்ற மின்னஞ்சல் உங்களுக்கு வருமாயின், பயந்து போய் உங்கள் விவரங்களை கொடுத்து விடாதீர்கள். உடனடியாக அந்த மெயிலை டெலிட் செய்து விடுங்கள். 

பெங்களூர் நண்பர்களிடம் ஒரு சிறு உதவி!

MBA (HR) முடித்த சகோதரர் ஒருவருக்கு, 11-06-2010 முதல் 17-06-2010 ற்குள் பெங்களூரில் ஏதாவது Walk-in Interviews இருந்தால் எனக்கு தெரியப் படுத்தி உதவி செய்யவும்..

suryakannan@gmail.com

அன்புடன்
சூர்யா கண்ணன்

. 

கணினி தொழில்நுட்ப விவாதங்கள்

கூகிள் – ட்ரிக்ஸ்

Posted in ஜிமெயில் டிப்ஸ் by suryakannan on ஏப்ரல் 9, 2010
விளையாட்டிற்கு இரண்டும், உபயோகமாக ஒன்றும். 

நம்மில் பெரும்பாலோனோர் தேடுபொறியாக கூகிள் தேடு இயந்திரத்தையே பயன் படுத்தி வருகிறோம். இந்த கூகிள் முகப்பு பக்கம் அன்றைய தினத்தின் சிறப்பம்சத்தை கருத்தில் கொண்டு சிறந்த லோகோவுடன் தோற்றமளிக்கும். இந்த முகப்பு பக்கத்தை நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது எப்படி? 

இதற்கென்றே சில தளங்கள் உள்ளன. அதில் ஒன்று www.buzzisearch.com . இந்த தளத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் பெயரை டைப் செய்யுங்கள். 
பிறகு அதன் கீழே உள்ள அனிமேட்டட்எழுத்து வகைகளில் உங்களுக்கு தேவையான வகையை தேர்வு செய்யுங்கள். அடுத்து திறக்கும் திரையில் உங்கள் விருப்பபடி Google பக்கம் திறக்கும். இதை உங்கள் உலாவியின் முகப்பு பக்கமாகவோ அல்லது புக் மார்க் செய்து விட்டாலோ இனி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற கூகிள் பக்கத்தில் பணிபுரியலாம்.

 அடுத்ததாக கூகிள் பக்கத்திற்கு Background படத்தை இணைக்க ஒரு வலைத்தளம் www.mcsearcher.com இந்த தளத்தில் சென்று கூகிள் பக்கத்திற்கு தேவையான பெயரையும், background படத்தையும்  இணைத்து விட்டு Create here பொத்தானை சொடுக்குங்கள்.

இனி திறக்கும் உங்கள் விருப்பமான பக்கம் புதிய படத்துடன்.

Gmail நம்மில் பலரும் உபயோகிக்கும் ஒரு மின்னஞ்சல் வசதி. இதில் மின்னஞ்சல்  பயன்பாட்டை தவிர, மற்றொரு  உபயோகமான பயன்பாடு ஒளிந்து கொண்டிருக்கிறது.

PDF வடிவிலான ஒரு டெக்ஸ்ட் கோப்பை நீங்கள் எடிட் செய்ய வேண்டும், அதற்கான மென்பொருள் அச்சமயம் உங்களிடம் இல்லை என வைத்துக் கொள்வோம். என்ன செய்யலாம்?

அந்த கோப்பை உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கே மின்னஞ்சல் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த மின்னஞ்சலை திறந்து கொண்டு attachment பகுதியில் அந்த கோப்பிற்கு நேராக உள்ள View பொத்தானை சொடுக்குங்கள். இனி திறக்கும் Google Docs பக்கத்தில் உங்கள் கோப்பு திரையில் தோன்றும்.

அதற்கு மேலாக உள்ள Plain HTML என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது அந்த PDF கோப்பு HTML கோப்பாக திரையில் தோன்றும். இனி நீங்கள் செய்ய வேண்டியது, இதில் உள்ள டெக்ஸ்டை காப்பி செய்து வேர்டு போன்ற பயன்பாடுகளில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். Editable Text  இப்ப ரெடி.  

அடடா!.. வடை போச்சே!.. – ஜிமெயில் ட்ரிக்ஸ்

Posted in ஜிமெயில் டிப்ஸ் by suryakannan on பிப்ரவரி 17, 2010
.
ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை தனது பணி நிமித்தமாக அத்தியாவசியமாக பயன் படுத்தி வரும் நண்பர் ஒருவர் இன்று காலை தொலைபேசியில் அழைத்து மிகவும் அவசரமாய், அவசியமாய் ஓரு உதவி கேட்டிருந்தார்.
.
அந்த நண்பர் வழக்கமாக காலையில் அலுவலகத்திற்கு வந்து கணினியில் ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் முதலில் இன்பாக்ஸ் இல் மின்னஞ்சல்களை திறக்காமலேயே, தேவையற்ற மின்னஞ்சல்களை வரிசையாக தேர்வு செய்து டெலிட் செய்துவிடுவது வழக்கம். இன்றும் வழக்கம் போல அவருக்கு தேவையற்ற நியூஸ் லெட்டர் போன்ற மின்னஞ்சல்களை தேர்வு செய்து டெலிட் செய்யும் பொழுது, தவறுதலாக மிக முக்கியமான மேலதிகாரியிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலையும் சேர்த்து டெலிட் செய்து விட்டார். 
அதற்கு முன்பாக அவரது மேலதிகாரி தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு மின்னஞ்சலை படித்தீர்களா? பதில் வரலையே,  என கேட்டிருந்த போது, மின்னஞ்சலை படித்து விட்டேன்.. இன்னும் சிறிது நேரத்தில் பதில் அனுப்புகிறேன், என்று வேறு அளந்து விட்டார். 
இப்பொழுது மின்னஞ்சலை டெலிட் செய்துவிட்ட நிலையில் ‘அடடா!..  வடை போச்சே!.. ‘ என தலையில் கை வைத்தபடி என்னை தொடர்பு கொண்டார். 
‘இன்பாக்ஸ் ஃபோல்டரிலிருந்து டெலிட் செய்திருந்தால் அந்த மெயில் ட்ராஷ் ஃபோல்டரில் இருக்கும்.. போய் பாருங்கள்’ என்றேன்.
‘ட்ராஷ் ஃபோல்டர் ஜிமெயிலில் எங்கேயும் காணோமே! .. இப்ப என்ன செய்றது’ 
அவருக்கு ஏற்பட்டது போல உங்களுக்கும் நேர்ந்தால்?..

உங்கள் ஜிமெயில் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு ஜிமெயில் திரையின் வலது மேல் மூலையில் உள்ள Settings லிங்கை சொடுக்குங்கள்.
இனி வரும் திரையில் Labels லிங்கை க்ளிக் செய்யுங்கள். இங்கு பட்டியலிடப் பட்டிருக்கும் Inbox, Buzz, Draft போன்ற ஃபோல்டருக்கு கீழே உள்ள Trash  ஃபோல்டருக்கு நேராக உள்ள Show என்ற லிங்கை ஒருமுறை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
 
அவ்வளவுதான்! .. இனி ட்ராஷ் ஃபோல்டரும் உங்கள் ஜிமெயில் திரையில் இடது புற பேனில் தோன்றிவிடும். அங்கு சென்று டெலிட் செய்த மின்னஞ்சல்களை பார்த்துக் கொள்வதோடு, அதனை தேர்வு செய்து Move to பொத்தானை க்ளிக் செய்து மீண்டும் Inbox ஃபோல்டருக்கு  மாற்றிக் கொள்ளலாம். 

. 

உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க

Posted in ஜிமெயில் டிப்ஸ் by suryakannan on ஜனவரி 21, 2010

உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க முடியுமா?

முடியும்!

ஜிமெயிலிலிருந்து  உங்கள் ஹாட்மெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்களை படிக்கவும், அதேசமயம் ஜிமெயிலில் இருந்த படியே ஹாட் மெயில் கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்பவும் முடியும்! எப்படி என்பதைப் பார்க்கலாம்.
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேல்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள். இங்கு Accounts and Import என்ற பகுதிக்கு செல்லுங்கள்.
 
இந்த பக்கத்தில் கீழே உள்ள  Check mail using POP3:  என்பதற்கு நேராக உள்ள Add POP3 email account என்ற பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்து திறக்கும்  Add a mail account you own என்ற விண்டோவில் Email address என்ற டெக்ஸ்ட் பாக்ஸில் உங்களுடைய ஹாட்மெயில் விலாசத்தை கொடுத்து Next Step பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்தப் பக்கத்தில் உங்களுடைய windows Live கணக்கினுடைய பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து, கீழே உள்ள settings அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப் படுத்தி (குறிப்பாக நீங்கள் ஜிமெயிலில் படித்த ஹாட்மெயில் மின்னஞ்சலை, ஹாட் மெயிலில் விட்டு வைக்க வேண்டுமா? என்பதற்கு “Leave a copy of retrieved messages on the server”    என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.) பிறகு Add Account பொத்தானை அழுத்துங்கள். 

    POP Server: pop3.live.com
    Port: 995
    Always use a secure connection (SSL) when retrieving mail

அடுத்த திரையில் Yes, I want to be able to send mail as… என்பதை தேர்வு செய்து Next Step க்ளிக் செய்யுங்கள்.
இறுதியாக ஜிமெயிலிருந்து உங்கள் ஹாட் மெயில் கணக்கிற்கு ஒரு வெரிபிகேஷன் மெயில் வரும் அதனை டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்து Verify பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.. இனி உங்கள் ஹாட்மெயில் கணக்கிலுள்ள மின்னஞ்சல்களை ஜிமெயிலில் பார்க்கலாம். அதோடு மட்டுமல்லாமல். ஜிமெயில் Compose திரையில் From க்கு நேராக உள்ள ட்ராப் டவுன் லிஸ்டில் ஹாட்மெயில் கணக்கை தேர்வு செய்து, ஜிமெயிலில் இருந்தபடியே, ஹாட்மெயிலில் மின்னஞ்சல்  செய்யலாம்.

.

நமது மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறார்களா?

Posted in ஜிமெயில் டிப்ஸ் by suryakannan on ஜனவரி 16, 2010
ஜிமெயில் பயனாளர்கள் பலர் ஒரு கணினியில் மட்டுமல்லாது பல கணினிகளில் ஜிமெயிலில் பணி புரிகிறார்கள். உதாரணமாக Browsing Centre, அலுவலக கணினி, வீட்டிலுள்ள கணினி, நண்பர்கள் அல்லது உறவினர்களின் கணினி போன்றவற்றில் மின்னஞ்சல் பணிகளை முடித்த பிறகு ஞாபகமறதியால் Sign out செய்யாமல் வந்து விடுகிறார்கள்.  இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். மொத்தமாக நாம் பணி செய்த அனைத்து கணினிகளிலிருந்தும்  ஒரே நேரத்தில் sign out  செய்ய இயலுமா?
மேலும் நமது மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறார்களா? என்பதையும் நாம் அறிந்து கொள்ள ஜிமெயிலில் வசதி தரப்பட்டுள்ளது.

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். Inbox இன் கீழே உள்ள Last account activity என்பதற்கு நேராக உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் Activity Information விண்டோவில் உங்களது கடைசி ஐந்து லாகின் விவரங்கள் தரப்பட்டிருக்கும். இதிலிருந்து உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய இயலும்.
மேலும் இதிலுள்ள Sign out all other sessions என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக மாற்ற  கணினிகளிலிருந்து ஒரே சமயத்தில் Sign out செய்து விட முடியும்.
.

ஜிமெயிலில் அனைத்து மின்னஞ்சல்களையும் ஃபார்வேர்டு செய்ய

Posted in ஜிமெயில் டிப்ஸ் by suryakannan on ஜனவரி 15, 2010
ஜிமெயில் பயனாளர்கள் சிலருக்கு தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு ஆட்டோமெடிக்காக ஃபார்வேர்டு செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். இதனை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்து Settings பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.
இதில் Forwarding and POP/IMAP எனும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இந்த பக்கத்தில் முதலாவதாக உள்ள Forwarding பகுதியில் Forward a copy of incoming mail to என்பதற்கு நேராக உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்து, email address என்ற பகுதியில் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஃபார்வேர்டு செய்ய வேண்டுமோ அந்த முகவரியை டைப் செய்யவும்.
அவ்வளவுதான், இனி அப்படி ஃபார்வேர்டு  செய்த மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு செய்த பிறகு என்ன செய்வது எனபதையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது இதனுடைய சிறப்பம்சம்.
.