சூர்யா ௧ண்ணன்

டேட்டா எக்ஸ்போர்ட்டர் நீட்சி!

Posted in இணையம் டிப்ஸ், கூகிள் க்ரோம், நன்றி by suryakannan on செப்ரெம்பர் 20, 2010
மைக்ரோசாப்ட் அவுட் லுக் உபயோகிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பது Outlook Data Export நீட்சி! (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 
இந்த நீட்சியை பயன்படுத்தி அவுட் லுக்கில் உள்ள உங்கள் Mails, Contacts, Notes, Tasks, Appointment ஆகியவற்றை, உங்களுக்கு தேவையான ஃபோல்டரில், MSG, Unicode MSG, RTF, TXT, CSV, ICS, vCard, HTML, and XML போன்ற கோப்பு வகைகளில் சேமித்துக் கொள்ள முடியும். இது ஒரு இலவச நீட்சி என்பது நல்ல செய்தி! Microsoft Outlook -இல் default உள்ள இந்த வசதியை விட இதில் பல பயனுள்ள வசதிகள் தரப்பட்டுள்ளன.
 
 இதில் தேவையான வசதியை தேர்வு செய்து, அடுத்து திறக்கும் திரையில் Export Directory மற்றும் Output Format ஐ தேர்வு செய்து Start Export பொத்தானை சொடுக்கினால் போதுமானது. 
  இதிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், மின்னஞ்சல்களை Export செய்யும் பொழுது Start Date மற்றும் End date கொடுத்து நமக்கு தேவையான கால இடைவெளியில் உள்ள மின்னஞ்சல்களை மட்டும் எக்ஸ்போர்ட் செய்திட முடியும். 
Outlook Data Export நீட்சி தரவிறக்க 
  .
Advertisements

யாழ்தேவி, தினக்குரலுக்கு நன்றி!

Posted in நன்றி, Computer Tricks by suryakannan on செப்ரெம்பர் 20, 2010

இன்று காலை எனக்கு வந்த  மின்னஞ்சலில் ஒரு சந்தோஷ செய்தி காத்திருந்தது.

//உங்களை யாழ்தேவியின் நட்சத்திரப்பதிவராக வரும் திங்கட்கிழமை 20 ஆம் திகதியிருந்து ஒரு வாரத்திற்கு (ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர்; 26 வரை) அறிவிக்க விரும்புகிறோம்.//
அதுமட்டுமின்றி, 
//அத்துடன், தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து யாழ்தேவி நடாத்தும் ‘இணையத்தில் எம்மவர்’ பக்கத்திற்கு, உங்களைப்பற்றிய விபரக்குறிப்பொன்றையும், புகைப்படமொன்றையும் எதிர்வரும் 24ஆம்; திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.// 
நான் சும்மா வீம்புக்குதாங்க எழுத வந்தேன்.. ஆனா சக புதிவுலக நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகள் என்னை ஊக்கப்படுத்தி இன்று இப்படி யாழ்தேவி மற்றும் தினக்குரல் பத்திரிக்கையின் நான் எதிர்பார்க்காத ஒரு அங்கீகாரத்தை அடைய வழி  வகுத்துவிட்டார்கள்! அனைவருக்கும் எனது பணிவான நன்றி! 
 யாழ்தேவி மற்றும்  தினக்குரல் பத்திரிக்கைக்கு எனது மனமார்ந்த நன்றி!
. 

வடை கிடைச்சுடுச்சு!..

Posted in நன்றி by suryakannan on ஜூலை 27, 2010
கடந்த 17-07-2010 அன்று எனது ஜிமெயில், யாஹூ, rediff, Facebook, Twitter, Orkut, Blogger என எனது அனைத்து கணக்குகளும் ஒரே இரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே! 
அதன் பிறகு, மற்றொரு கணக்கை உபயோகித்து, தற்காலிகமாக (http://sooryakannan.blogspot.com) என்ற வலைப்பூவை ஆரம்பித்தேன். எனது அந்த இக்கட்டான சூழ்நிலையில் வலையுலக நண்பர்கள்  எனக்கு அளித்த ஆதரவும், ஆறுதலும் என்னை பிரமிக்க வைத்தது.

தொடர்ந்த கடின முயற்சிக்குப் பிறகு, மறுபடியும் எனது ஜிமெயில் கணக்கை  மீட்டெடுத்து விட்டேன். ஜிமெயிலில் Recovery Form மற்றும் options எதுவும் பயனளிக்கவில்லை. ஜிமெயில் தளத்தில் உள்ள எந்த லின்க்கும் பயன்படவில்லை, எப்படி மீட்டெடுத்தேன் என்பதை தற்பொழுது உங்களோடு  பகிர்ந்து கொள்ள போவதில்லை. ஏனென்றால் மீட்டெடுப்பதற்கான அந்த வழியையும், ஹேக்கர்கள் அறிந்து கொள்ளுவதால், பாதிப்பு நம்மை போன்றவர்களுக்குத்தான். எனவே எவருக்காவது இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.

தொலைபேசியில் விசாரித்து ஆறுதல் அளித்த நண்பர்கள். தங்களது வலைப்பூவில் எனது இந்த மற்றம் குறித்த செய்தியையும், லிங்கையும் கொடுத்து, நான் சோர்ந்து போகாமல், எனக்கு உத்வேகமளித்த நண்பர்களே! உங்களுக்கும் எனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிலிஷ் (இன்ட்லி) க்கும்   மனம் நெகிழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சூர்யா கண்ணன்
     

   

200 வது பதிவு – நண்பர்களுக்கு நன்றி!

Posted in நன்றி by suryakannan on மே 12, 2010

அனைவருக்கும் வணக்கம்!

இது http://suryakannan.blogspot.com இன் எனது 200 வது பதிவு!

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.. கடந்த 05-03-2009 அன்று எனது முதல் பதிவை எழுதினேன்.. ஆரம்பத்தில் எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் எனது நான்  எதிர்பார்க்காத ஒன்று. 
எனக்கு அறிமுகமான முதல் திரட்டி தமிலிஷ் தான். எதுவுமே சரியாக எழுதத் தெரியாமல் தான் நான் இந்த பதிவுலகத்திற்கு வந்தேன். ஆனால் சக பதிவர்களின் ஊக்கம், அறிவுரை என்னை இத்தனை பதிவுகளை எழுதுவதற்கும்,  சக பதிவர்களின் ஆதரவு  என்னை ஓரளவிற்கு குறிப்பிடும்படியான பதிவராகவும் வார்த்து எடுத்திருக்கிறது. (குறிப்பிடும்படியான பதிவரா? யார் சொன்னதுன்னு கேட்கப்படாது..)

சில விஷயங்களை கற்றுக் கொடுப்பதில் உள்ள திருப்தியும் மன நிறைவும் அலாதியானது தான்!.
இந்த 200 பதிவை எழுதும் பொழுது எனது வலைப்பக்கத்திற்கான பார்வையாளர்கள் 2,00,000 ஆக இருக்க வேண்டும் என்று எதிர் பார்த்து காத்திருந்தேன்.. ஆனால் கொஞ்சம் குறைவு. 
 இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்றொரு சிறு அயர்ச்சியும்.. மற்றொரு புறம் இன்னும் சிறப்பான தகவல்களை தர வேண்டுமே என்ற   முனைப்பும் தோன்றுகிறது. 
எனது சிற்றறிவிற்கு எட்டிய தகவல்களை இதுவரை உங்களோடு பகிர்ந்து வந்துள்ளேன். இவற்றில் ஏதாவது தவறுகளோ அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தாலோ தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். 

இவையனைத்தும் என்னால் சாத்தியப்பட வைத்த சகபதிவர்கள், திரட்டிகள், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எனது நெகிழ்வான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


.