சூர்யா ௧ண்ணன்

நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி! – நேற்றைய தொடர்ச்சி..

நேற்றைய எனது இடுகையில் (கூகிள் க்ரோம் – மிகப் பயனுள்ள நீட்சி!) கூகிள் க்ரோம் உலாவியில், வலைப்பக்கங்களில் பொருள் புரியாத சொற்களுக்கு, Google Dictionary நீட்சியின்  மூலமாக எப்படி அதே திரையில் விளக்கம் காண்பது என்பதை பார்த்தோம். இன்று, இது போன்ற  ஒரு உபயோகமான வசதியை அளிக்கும் Inline Google Definitions எனும் நெருப்புநரி உலாவிக்கான நீட்சியை குறித்து பார்க்கலாம். (தரவிறக்கச் சுட்டி இடுகையின் கீழ் தரப்பட்டுள்ளது) 
இந்த நீட்சியை தரவிறக்கி நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, ஒரு முறை உலாவியை ரீஸ்டார்ட் செய்யவேண்டியிருக்கும். 
இனி வலைப்பக்கங்களில் பொருள் அல்லது விளக்கம் தேவைப்படும் வார்த்தையை தேர்வு செய்து, மௌசின் வலது பொத்தானை அழுத்தி, Inline Definitions கருவியை சொடுக்குங்கள். 
நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் அதே வலைப்பக்கத்திலேயே  அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கான  பொருள் மற்றும் விளக்கங்கள், பல்வேறு தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டு வழங்கப்படும் என்பது இதனுடைய சிறப்பம்சம். 
Inline Google Definitions – நீட்சி தரவிறக்க
    
.
Advertisements

FireFox – தேவையான ஃபோல்டரில் தரவிறக்கம் செய்ய எளிய நீட்சி

Posted in நெருப்புநரி, Firefox Tips and Tricks by suryakannan on மே 29, 2010
நெருப்புநரி உலாவியில் வலைப் பக்கங்களில் உள்ள படங்கள் மற்றும் லிங்க்களை நாம் நமது கணினியில் சேமிக்கும் பொழுது, வழக்கமாக தேவையான படத்தில் அல்லது லிங்கில்  வலது க்ளிக் செய்து context menu வில் Save Image as அல்லது Save Link as என்பதை க்ளிக் செய்து பிறகு எங்கு சேமிக்க வேண்டும் என்று Browse  செய்து சேமித்துக் கொள்வது வழக்கம். 
ஆனால் வலைப்பக்கங்களில் நாம் சேமிக்கும் படங்களை எந்த ஃபோல்டரில் சேமிக்க வேண்டும் என்று context மேனுவிலேயே வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். இதை சாத்தியப் படுத்த நெருப்பு நரிக்கான ஒரு எளிய நீட்சி Save File To Extension (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)
இதனை உங்கள் நெருப்பு நரி உலாவியில் நிறுவிய பிறகு, இதன் Option இற்கு சென்று Save File to Options வசனப் பெட்டியில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
இதில் Desktop, My Documents ஃபோல்டர்கள் default ஆக இருக்கும். இதிலுள்ள Page, Link, Image ஆகிய டேபிற்கு சென்று அந்த அந்த வகை கோப்புகளை எந்த ஃபோல்டரில்  சேமிக்க வேண்டும் என்பதை கொடுக்கவும். உதாரணமாக வலைப் பக்கங்களை Desktop -இல் Software Downloads என்ற ஃபோல்டரில்  மற்றும் படங்களை Desktop – Image Downloads என்ற ஃபோல்டரிலும் சேமிக்க வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட டேபிற்கு சென்று இந்த ஃபோல்டர்களை  ADD செய்து விடுங்கள்.
இனி உங்கள் Context மெனுவில் இந்த ஃபோல்டர்கள் இணைக்கப்பட்டு விடும்.

Download Save File To Extension

FireFox – தேவையான ஃபோல்டரில் தரவிறக்கம் செய்ய எளிய நீட்சி

Posted in நெருப்புநரி, Firefox Tips and Tricks by suryakannan on மே 29, 2010
நெருப்புநரி உலாவியில் வலைப் பக்கங்களில் உள்ள படங்கள் மற்றும் லிங்க்களை நாம் நமது கணினியில் சேமிக்கும் பொழுது, வழக்கமாக தேவையான படத்தில் அல்லது லிங்கில்  வலது க்ளிக் செய்து context menu வில் Save Image as அல்லது Save Link as என்பதை க்ளிக் செய்து பிறகு எங்கு சேமிக்க வேண்டும் என்று Browse  செய்து சேமித்துக் கொள்வது வழக்கம். 
ஆனால் வலைப்பக்கங்களில் நாம் சேமிக்கும் படங்களை எந்த ஃபோல்டரில் சேமிக்க வேண்டும் என்று context மேனுவிலேயே வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். இதை சாத்தியப் படுத்த நெருப்பு நரிக்கான ஒரு எளிய நீட்சி Save File To Extension (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)
இதனை உங்கள் நெருப்பு நரி உலாவியில் நிறுவிய பிறகு, இதன் Option இற்கு சென்று Save File to Options வசனப் பெட்டியில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
இதில் Desktop, My Documents ஃபோல்டர்கள் default ஆக இருக்கும். இதிலுள்ள Page, Link, Image ஆகிய டேபிற்கு சென்று அந்த அந்த வகை கோப்புகளை எந்த ஃபோல்டரில்  சேமிக்க வேண்டும் என்பதை கொடுக்கவும். உதாரணமாக வலைப் பக்கங்களை Desktop -இல் Software Downloads என்ற ஃபோல்டரில்  மற்றும் படங்களை Desktop – Image Downloads என்ற ஃபோல்டரிலும் சேமிக்க வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட டேபிற்கு சென்று இந்த ஃபோல்டர்களை  ADD செய்து விடுங்கள். 
இனி உங்கள் Context மெனுவில் இந்த ஃபோல்டர்கள் இணைக்கப்பட்டு விடும். 

Download Save File To Extension
இந்த பதிவை உங்களுக்கு வழங்கியவர்கள் 
.

பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே சமயத்தில் கையாளுவதற்கான நீட்சி!

Posted in நெருப்புநரி, Firefox Tips and Tricks by suryakannan on ஏப்ரல் 2, 2010
ஒரு சிலர் ஜிமெயில், யாஹூ, ஹொட்மெயில் என பல மின்னஞ்சல் கணக்குகளை உபயோகித்து வருகின்றனர். இவற்றை ஒவ்வொரு முறையும் வேறு வேறு டேப்களில் திறந்து பணிபுரிவது சிரமமான காரியமாகும். இணையத்தில் நாம் வேறு முக்கியமான பணியில் இருக்கும் பொழுது, ஏதாவது மின்னஞ்சல் கணக்குகளில் புதிய மின்னஞ்சல் வரும்பொழுது பாப்அப்  அலர்ட் வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என யோசிப்பவர்களுக்கு, நெருப்பு நரி உலாவிக்கான   WebMail Notifier நீட்சி!

தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இதனை பதிந்து கொண்ட பிறகு நெருப்பு நரி உலாவியை ரீஸ்டார்ட் செய்த பின்னர்

WebMail Notifier நீட்சியில் Options சென்று Webmail Accounts டேபில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, கடவு சொல் ஆகியவற்றை கொடுத்து Add செய்து கொள்ளவும்.

மேலும் தேவையான மாற்றங்களை செய்து OK கொடுத்து சேமித்து கொள்ளவும். இனி இந்த WebMail Notifier  உங்கள் நெருப்பு நரி உலாவியின் வலது கீழ் மூலையில் அமைதியாக காத்திருக்கும் பல்வேறு கணக்குகளில் இருந்து உங்களுக்கு வரப்போகின்ற புதிய மின்னஞ்சலுக்காக..

.

நெருப்புநரிக்கான தேடுபொறி நீட்சி!

Posted in நெருப்புநரி, Firefox Tips and Tricks by suryakannan on பிப்ரவரி 27, 2010
.

நாம் கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்தும் பொழுது, அட்ரஸ்பாரில் தட்டச்சு செய்வதை இணையத்தில் தேடித்தரும் பணியையும் செய்கிறது. கூகிள் க்ரோம் உலாவியின் சிறப்பம்சமே அது வெறும் இணைய உலாவியாக மட்டுமே அல்லாது ஒரு தேடுபொறியாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளதுதான். 

நெருப்புநரி உலாவியை தொடர்ந்து உபயோகப்படுத்தி வருபவர்களுக்கு  கூகிள் க்ரோமில் உள்ளது போன்ற தேடுபொறி வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என யோசிப்பவர்களுக்காக இதோ நெருப்புநரி உலாவிக்கான Inquisitor 1.2 தேடுபொறி நீட்சி!
இந்த நீட்சியை உங்கள் நெருப்புநரி உலாவியில் நிறுவியபிறகு, அட்ரஸ் பாரில் உங்களுக்கு தேவையான விவரத்தை தட்டச்சு செய்ய துவங்குகையில், கூகிள் மற்றும் யாஹூ தேடுதல் முடிவுகள் பட்டியலிடப்படுகிறது. 
நெருப்புநரிக்கான தேடுபொறி நீட்சி!
.

நெருப்பு நரி உலாவியில் வேகமாக உலாவ – பாகம் – 2

Posted in நெருப்புநரி, Firefox Tips and Tricks by suryakannan on பிப்ரவரி 18, 2010

.

முதல் பாகத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டியை க்ளிக் செய்து எனது பதிவை படித்துவிட்டு வரவும்.


நெருப்பு நரி உலாவியில் வேகமாக உலாவ

நெருப்புநரி உலாவியில் about:config என்ற பயன்பாட்டை எப்படி உபயோகப்படுத்துவது என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். அறியாதவர்கள் மேலே கொடுத்துள்ள பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். 
நெருப்புநரி உலாவியில் அதனுடைய அனைத்து Configuration கள் அனைத்தும் இந்த About:config கட்டளையில் அடங்கிவிடும். இதிலுள்ள ஒரு சில வடிவமைப்புகளை மாற்றுவதன் மூலமாக நெருப்புநரி  உலாவியில் இன்னமும் வேகமாக உலாவ என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். 
நெருப்புநரி உலாவியை திறந்து கொண்டு அட்ரஸ் பாரில் கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பின் மதிப்பையும் Filter box இல் டைப் செய்து என்டர் கொடுத்து,  ஒவ்வொன்றாக மாற்றிய பின் உலாவியை மூடி பின்னர் திறந்து முன்பை விட வேகமாக உலாவலாம்.

மாற்ற வேண்டிய வடிவம்                  தற்போதைய மதிப்பு                மாற்றவேண்டிய மதிப்பு
network.http.pipelining                                          False                                                True
network.http.proxy.pipelining                                 False                                                True
network.http.pipelining.maxrequests                           4                                         4- லிருந்து 8 ற்குள் 
network.http.max-connections                                   30                                                  96
network.http.max-connections-per-server                   15                                                  32

அவ்வளவுதான்!..கொசுறு :- 

 உங்கள் நெருப்புநரி உலாவியின் அட்ரஸ் பாரில் ஏற்கனவே நீங்கள் சென்று வந்த வலைப்பக்கத்தின் முகவரியை டைப் செய்ய துவங்குகையில், அதுவாகவே மீதமுள்ள முகவரியை Autofill செய்ய கீழே தரப்பட்டுள்ள வடிவமைப்பின் மதிப்பை மாற்றுங்கள். 


மாற்ற வேண்டிய வடிவம்:  browser.urlbar.autofill
தற்போதைய மதிப்பு : False
மாற்றவேண்டிய மதிப்பு : True

. 

நெருப்புநரியில் படங்களை உண்மையான அளவில் பார்க்க

Posted in நெருப்புநரி, Firefox Tips and Tricks by suryakannan on பிப்ரவரி 16, 2010
.
இணையத்தில் நாம் வலைப்பக்கங்களில் பார்க்கும் ஒவ்வொரு JPG, PNG போன்ற வடிவிலான அனைத்து படங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட அளவிலானவை. (உதாரணமாக 640 x 480, 800 x 600, 1024 x 768) இது  போன்ற படங்களை நாம் உலாவியில் திறக்கும் பொழுது அந்த படங்கள்  அதனுடைய உண்மையான அளவில் காண்பிக்கப் படாமல், சிறிதாக்கப்பட்டு திரையில் காண்பிக்கப் படுகிறது.    
இது போன்ற படங்களை நெருப்பு நரி உலாவியில் அவற்றின் உண்மையான அளவில் தோன்றவைக்க ஒரு சிறிய  ட்ரிக்கை பார்க்கலாம். (நெருப்புநரி உலாவிக்கு மட்டும்)
கீழே உள்ள படத்தின் லிங்கில் மெளசின் ஸ்க்ரோல் பட்டனை அழுத்துங்கள். 
Leaves 1024 x 768
படத்தின் அளவை பார்த்துக்கொள்ளுங்கள்.
இனி புதிதாக ஒரு டேபை திறந்து கொண்டு (Ctrl + T) அங்கு Address Bar இல் about:config என டைப் செய்து என்டர் கொடுங்கள். 
இதனை தொடர்ந்து வரும் எச்சரிக்கை செய்தியில் I’ll be careful, I promise! என்ற பொத்தானை சொடுக்குங்கள்.   
 இப்பொழுது வரும் Filter bar இல் browser.enable என டைப் செய்து என்டர் கொடுக்கவும். 
கீழே வரும் “browser.enable_automatic_image_resizing” என்பதை இரட்டை க்ளிக் செய்து value ஐ false ஆக மாற்றிக்கொண்டு, அந்த டேபை மூடி விடுங்கள். இப்பொழுது மேலே முன்பு க்ளிக் செய்த படத்தின் லிங்கை ஸ்க்ரோல் பட்டனில் மறுபடி க்ளிக் செய்து வித்தியாசத்தை உணருங்கள். இப்பொழுது அதே படம் அதனுடைய  உண்மையான அளவில் (1024 x 768) தோன்றுவதை கவனிக்கலாம். 
. 

நெருப்புநரியில் பிழைதிருத்தி

Posted in நெருப்புநரி by suryakannan on ஜனவரி 2, 2010
இணைய உலகில் Firefox உலவி மற்ற உலவிகளைக் காட்டிலும் பல மடங்கு உபயோகமான வசதிகளை உள்ளடக்கியுள்ள ஓர் உலவியாகும்.  நெருப்புநரியில் உள்ள வசதிகளைப் பற்றி ஏற்கனவே பல இடுகைகளை இட்டிருந்தாலும், தினம்தினம்  இதனுடைய வசதிகள் மேம்பாடு அடைந்து வருவதால், மேலும் பல இடுகைகளை நெருப்பு நரிக்காக இட வேண்டுமாய்த்தான் இருக்கிறது.
நெருப்புநரி உலவியில் இணையத்தை உலா வரும்பொழுது, வலைப்பக்கங்களில் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸ்களில் நாம் தட்டச்சு செய்கையில் எழுத்துப் பிழைகள் சில வருவது இயல்பு, அது தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும் எந்த மொழியிலும் எழுத்துப் பிழைகளை கண்டறிய நெருப்புநரியில் உள்ளடங்கியுள்ள Spell Checker வசதியை உயிர்ப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
நெருப்புநரி உலவியை திறந்து கொண்டு அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்து என்டர் கொடுக்கவும். உடனடியாக ஒரு எச்சரிக்கை பெட்டி வரும்.
இதில் I’ll be careful, I promise! என்ற பொத்தானை சொடுக்குங்கள்.  அடுத்த திரையில் Filter டெக்ஸ்ட் பாக்ஸில் layout.spellcheckDefault என  டைப்  செய்யவும்.
இனி பட்டியலில் உள்ளதை இரட்டை க்ளிக் செய்து, திறக்கும் வசனப்பெட்டியில், இதன் மதிப்பை 2  என மாற்றவும்.
அவ்வளவுதான்! இனி நீங்கள் பிழையுடன் தட்டச்சு செய்யும் பொழுது, எழுத்து பிழைகள் சிவப்பு நிறத்தில் அடிகோடிட்டு காட்டும். அதை வலது க்ளிக் செய்வதன் மூலமாக பிழையை திருத்தலாம்.
இதற்க்கான தமிழ் அகராதி நீட்சியை இங்கே க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
.

மெனு டூல்பாரை ஒரு சிறிய பட்டனில் பொதிய

Posted in நெருப்புநரி by suryakannan on திசெம்பர் 23, 2009
நம்மில் சிலர் மடி கணினி உபயோகித்துக் கொண்டிருப்போம், இன்னும் சிலர் மினி லேப்டாப் உபயோகிக்கிறோம். இவற்றின் திரை சிறிதாக இருப்பதால், வலைப் பக்கங்களை திறக்கும் பொழுது, உலவியில் உள்ள மெனு பார் திரையின் ஒரு குறிப்பிட்ட அளவை எடுத்துக் கொள்கிறது. மேலும் உலவியில் உள்ள டூல்பார் மெனுவை அடிக்கடி நாம் உபயோகிப்பதில்லை.
நெருப்புநரி உலவியில் இந்த டூல்பார் மெனுவை முற்றிலுமாக நீக்காமல் அவை அனைத்தையும் ஒரு சிறிய பட்டனில் பொதிந்து, தேவையான பொழுது அந்த பட்டனை கிளிக் செய்து மெனு வசதிகளை பெற Compact Menu 2 என்ற நீட்சி தரப்பட்டுள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).
கீழே உள்ள படம் நீட்சியை பதிவதற்கு முன்,
அடுத்து வரும் நீட்சியை பதிவதற்கான உறுதி படுத்தும் டயலாக் பாக்ஸில் Yes பொத்தானை கிளிக் செய்து நீட்சியை பதிந்து கொள்ளுங்கள்.
Compact Menu 2 நீட்சியை பதிந்த பிறகு நெருப்புநரியின் Toolbar menu நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு சிறிய பட்டன் தோன்றியிருப்பதை பார்க்கலாம்.
இனி அந்த பட்டனை கிளிக் செய்தால் டூல்பார் மெனு திறக்கும்.

Download Compact Menu 2 Extension
.

நெருப்புநரியில் தானியங்கி வீடியோக்களை நிறுத்த

Posted in நெருப்புநரி by suryakannan on திசெம்பர் 14, 2009
நெருப்புநரி உலவியில் நாம் உலவிக் கொண்டிருக்கும் பொழுது ஒருசில வலைபக்கங்களை திறக்கும் பொழுது அதில் உள்ள Youtube வீடியோக்கள் அல்லது வேறு எம்பெட் செய்யப்பட்ட வீடியோக்கள் அல்லது ஆடியோக்கள், நாமாக ப்ளே செய்யாமல்  அதுவாகவே ப்ளே ஆகத் துவங்கிவிடும்.
சில சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் பொழுது, ஸ்பீக்கர் உங்களுக்கு தெரியாமலேயே அதிக வால்யூமில் இருக்கும் பொழுது நிகழலாம்.
ஒருவேளை உங்கள் இணைய இணைப்பு குறைந்த ஜி பி   கொண்டதாக இருக்கலாம். இவ்வாறு இருக்கும் பொழுது, இப்படி தானாகவே  இயங்கும் வீடியோக்களால் உங்கள் இணைய கணக்கில் தேவையில்லாமல் கணிசமான டவுன்லோடிங் லிமிட்டை நீங்கள் இழக்க நேரிடும்.
இதற்கான தீர்வாக நெருப்பு நரிக்கான Stop Autoplay என்ற நீட்சி தரப்பட்டுள்ளது. இந்த நீட்சியை நிறுவிய பிறகு, வீடியோ உள்ள வலைப்பக்கத்தில் வீடியோ லோட் ஆகாது. அதற்கு பதிலாக அவ்விடத்தில் ஒரு சிகப்பு பெருக்கல் குறி காணப்படும், ஒரு வேளை அந்த வீடியோ உங்களுக்கு பார்க்கவேண்டுமெனில் இதை கிளிக் செய்தால் அதன் பிறகு வீடியோ லோட் ஆகி ஓட ஆரம்பிக்கும். 
 Download Stop Autoplay Extension
            
.