சூர்யா ௧ண்ணன்

பென் டிரைவ் பாதுகாப்பு – Autorun.inf

Posted in பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் by suryakannan on ஜூலை 28, 2010
இப்பொழுது அனைவரின் கைகளிலும் பென் டிரைவ் புழங்குவது, நமது தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒரு சிறு அடையாளமே.ஒரு  குறிப்பிட்ட  கணினியிலிருந்து, தங்களுக்கு தேவையான தகவல்களை உடனடியாக சேமித்துக் கொள்ள CD/DVD ஆகியவற்றை விட ஒரு சிறந்த எளிய சாதனமாக இருப்பது இந்த Flash/Pen டிரைவ்கள்தான்.

ஆனால், இந்த பென் டிரைவ்களின் மூலமாகவே பெரும்பாலான NewFolder.exe virus, kinza.exe virus, W32.Rontokbro.B@mm virus,  Regsvr.exe போன்ற வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் வெகு விரைவாக உங்கள் கணினியை தாக்குகின்றன. இது போன்ற மோசமான பாதிப்புகளை உருவாக்கக் கூடிய இந்த வைரஸ்கள் விரைவாக, நமது கண்காணிப்பை மீறி நமது கணினியில் பரவுவதற்கு அதில் உள்ள Autorun.inf என்ற ஃபைல் தான் முக்கிய பங்காற்றுகிறது. அப்படி என்னதான் சக்தி இருக்கிறது இந்த Autorun.inf கோப்பில் என்று பார்த்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் windows 95 பதிப்பு வெளி வந்த பொழுது, இது புழக்கத்திற்கு வந்தது. அதாவது, விண்டோஸ் 95 இயங்குதளத்தில்  CD யை திறப்பதற்கு முன்பாகவே அல்லது அந்த சிடியை My Computer -ல் இரட்டை க்ளிக் செய்யும் பொழுது,    இந்த Autorun அந்த CD யின் ரூட் டைரக்டரியில் உள்ள Autorun.inf  கோப்பை படித்து அதில் தரப்பட்டுள்ள கட்டளைகளை செயல்படுத்தும் பங்காற்றுகிறது. உதாரணமாக கீழே தரப்பட்டுள்ளது ஒரு Autorun.inf கோப்பில் உள்ள கட்டளைகள்.

[autorun]
open=autorun.exe
icon=autorun.ico
label= My Thumb Drive(98XXXXXXXX)
   

ஒரு பாதிக்கப்பட்ட பென் ட்ரைவை நல்லதொரு Antivirus மற்றும் Anti malware  உள்ள கணினியில் திறந்து, Tools -> Folder Options சென்று Show hidden files and folders க்ளிக் செய்து விட்டு, அதில் உள்ள கோப்புகளின் விவரங்களை பார்க்கும் பொழுது,

Hidden வடிவில் அந்த பென் டிரைவில் உள்ள வைரஸ்களை (நமக்கு சம்பந்தமில்லாத / நாம் உருவாக்காத கோப்புகள்) காண முடியும். (இப்படி காண்பிப்பது போல, வைரஸ் தாக்கப்பட்ட கணினியில் காண்பிக்காது. அவற்றில் Folder Options வசதி நீக்கப் பட்டிருக்கும்.) இவற்றை நமது கணினியில் ஏற்றுகின்ற வேலையை இந்த Autorun.inf கோப்புகள் செய்கின்றன. 

இப்படி சந்தேகமுள்ள பென் ட்ரைவ்களை நமது கணினியில் இணைத்த பிறகு, நேரடியாக My Computer -இல் சென்று திறக்காதீர்கள். Start -> Run இற்கு சென்று அந்த பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை கொடுங்கள் (H:) இனி திறக்கும் Explorer -இல் மேலே குறிப்பிட்டிருப்பது போல, Show hidden files and folders என்ற வசதியை enable செய்து கொள்ளுங்கள். இனி அந்த பென் டிரைவில், உங்களுக்கு சம்பந்தமில்லாத, .EXE கோப்புகள் ஸ்கிரிப்ட் கோப்புகளை shift+del கொடுத்து நீக்கி விடுவது நல்லது.      

இது போன்ற தாக்குதல்களிலிருந்து நமது கணினியை காக்க No Autorun என்ற இலவச கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இந்த மென்பொருள் கருவியை நமது கணினியில் பதிந்து கொள்வதன் மூலமாக இது போன்ற தாக்குதல்களிலிருந்து தப்பலாம்.

No Autorun தரவிறக்க 

.

Advertisements

"This Device can perform faster" அறிவிப்பை நீக்க

Posted in பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் by suryakannan on பிப்ரவரி 24, 2010
.
வழக்கமாக நமது கணினிகளில் பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை கனெக்ட் செய்யும் பொழுது, டாஸ்க் பாரில் “This Device can perform faster” என்ற பலூன் அறிவிப்பு வருவதை கவனிக்கலாம். 
இந்த அறிவிப்பு நாம் ஒவ்வொருமுறையும் பார்க்க வேண்டியுள்ளது. இதற்குமேல் இந்த பலூன் அறிவிப்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம். 
விண்டோஸ் எக்ஸ்பியில், My Computer ஐ வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். இங்கு Hardware டேபில் உள்ள Device Manager பொத்தானை அழுத்தி Device Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள பட்டியலில் இறுதியாக உள்ள  Universal Serial Bus Controllers என்பதற்கு நேராக உள்ள + குறியை க்ளிக் செய்து, பிறகு USB Host Controller -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லவும். 
  
இங்கு Advanced டேபில் “Don’t tell me about USB errors” என்பதை check செய்து விடுங்கள் அவ்வளவுதான். 
விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 -இல், இந்த பலூன் அறிவிப்பு தோன்றும் பொழுது அதன் மீது க்ளிக் செய்தால், This Device Can Perform Faster  என்ற விண்டோ திறக்கும். இதில் கீழே உள்ள “Tell me if my device can perform faster” என்பதை Uncheck செய்து விடுங்கள். 
 
.

பென் ட்ரைவில் மறைந்துபோன ஃபோல்டர்களை மீட்டெடுக்க

Posted in பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் by suryakannan on பிப்ரவரி 4, 2010
.
நாம் வழக்கமாக நமது பென்ட்ரைவில் அத்தியாவசியமான கோப்புகளையும் அவற்றை உள்ளடக்கிய கோப்புறைகளையும் (Folders) சேமித்து வைப்பது வழக்கம். மால்வேர் மற்றும் ஸ்பைவேர்கள் உடனடியாக மற்றும் எளிதாக தாக்குவது பென் ட்ரைவை என்பதனால் சில சமயங்களில் நமது அதி முக்கியமான கோப்புறைகள் மறைக்கப் பட்டுவிடலாம். அதாவது உங்கள் பென் ட்ரைவில் கோப்புறைகள் இருக்கும் ஆனால் உங்களால் பார்க்கவோ, உபயோகிக்கவோ இயலாது. பென் ட்ரைவில் Usage space ஐ சோதித்தால் கோப்புறைகள் மறைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.
ஒரு சில மால்வேர்களின் வேலையே பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூற்றை (attribute) மாற்றி விடுவதுதான். இதனால் உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூறு Hidden ஆக மாறி விடுகிறது. இதை சரி செய்ய Explorer -ல் Attribute பகுதிக்குச் சென்றால் அங்கு Attribute வசதி செயல் இழக்கம் (Greyed out) செய்யப்பட்டிருக்கும். ஒரு சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் மூலமாக முயற்சி செய்தாலும் சில சமயங்களில் மீட்பது சிரமம்தான்.
இந்த நிலையில் என்ன செய்யலாம்? 
முதலில்  உங்கள்  பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக I: என வைத்துக் கொள்வோம். Command Prompt ஐ திறந்து கொண்டு i: என டைப் செய்து என்டர் கொடுங்கள். 
இனி வரும் I:> என்ற ப்ராம்ப்ட்டில் attrib -r -s -h *.* /s  /d என டைப் செய்து என்டர் கொடுங்கள். 
உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் அளவைப் பொறுத்து இந்த கட்டளை செயல்படும் நேரம் மாறுபடும். மறுபடியும் I:> ப்ராம்ப்ட் வந்த பிறகு Exit என டைப் செய்து என்டர் கொடுத்து விண்டோஸ் க்கு வந்து விடலாம். இப்பொழுது My Computer சென்று பென் ட்ரைவை திறந்து பாருங்கள். உங்கள் கோப்புறைகள் மீட்டெடுக்கப் பட்டிருப்பதை காணலாம். 
இந்த பணியை செய்ய Files & Folders Reset Tool என்ற கருவி உள்ளது. ஆனால் ஒரு சில பென் ட்ரைவ்களில் இது சரியாக வேலை செய்யவில்லை. எதற்கும் முயற்சித்துப் பாருங்கள். 
Files & Folders Reset Tool
.