சூர்யா ௧ண்ணன்

தகவல் பெறும் உரிமைச்சட்டம் – விளக்க புத்தகம் டவுன்லோடு செய்ய

Posted in பொது by suryakannan on பிப்ரவரி 15, 2010

.

உலகில் மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எத்தனையோ இருக்கின்றன. இந்த உலகில் கடந்த காலத்தில் இருந்தவை, நிகழ்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாய்த் தோன்றிய தோற்றங்கள் என எண்ணிலடங்காத பொருள்கள், உயிர்கள் எத்தனையோ இருக்கின்றன. இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்பட்டாலும், அவைகளை எல்லாம் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள மனிதனின் வாழ்க்கை போதுமானதாக இருக்காது. மனிதன் அறிந்து கொள்ள எத்தனையோ தகவல்கள் இந்த உலகில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியாது. மனிதனுடைய அறிவுத் தேடலுக்குத் தேவையான சில தகவல்களைத் தேடி அதைத் தெரிந்தவர்களிடம் செல்கிறோம். சில தகவல்களுக்காக நூலகங்களுக்குச் செல்கிறோம். சில தகவல்களுக்காக என்சைக்ளோபீடியாவைத் தேடுகிறோம். தற்போது இணையத்தின் வழியாகவும் தேடுகிறோம். இந்தத் தேடுதலுக்கு விடை கிடைத்து விடுகிறது. 
ஆனால் அரசுப் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பினால் மட்டும் நமக்கு எந்தத் தகவல்களுமே கிடைப்பதில்லை. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவன் விரும்பும் தகவல் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்த போது அதற்கு அரசின் சில சட்டதிட்டங்கள் இடையூறாக இருந்தது. இது மாற்றப்பட வேண்டும். அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005.
இந்த சட்டம் குறித்த பயனுள்ள தமிழ் விளக்க புத்தகத்தை (PDF வடிவில்) தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
தகவல் பெறும் உரிமைச்சட்டம் டவுன்லோடு 
.
Advertisements

க்ளிக் பண்ணுங்க கொண்டாடுங்க..

Posted in பொது by suryakannan on திசெம்பர் 31, 2009

அன்பு நண்பர்களே! 

நாம் வரவிருக்கும் புத்தாண்டில் எல்லாவிதமான வளங்களையும் , நலன்களையும் பெறுவோம் என்று நம்பிக்கையில் 2010- ம் ஆண்டை இனிய மனதுடன்,  நம்பிக்கையோடு வரவேற்போம்!..,

அனைவருக்கும் எனது  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!.., 

அன்புடன்

சூர்யாகண்ணன் 

.

அப்பா! எறும்புக்கு எத்தனை கால்கள்?

Posted in பொது by suryakannan on மார்ச் 21, 2009

அப்பா! எறும்புக்கு எத்தனை கால்கள்?
என்று என் மகள் கேட்டபொழுது, ஒருகணம் திணறி 6 என சொல்லிவிட்டேன். பிறகு இணையத்தில் அலசிய பொழுது..,1. எறும்புக்கு 6 கால்கள் உள்ளன. ஒவ்வொரு காலிலும் 3 இணைப்புகள் உள்ளன. எறும்பின் கால்கள் மிகவும் வலிமையானவையாக இருப்பதால் அதனால் மிக வேகமாக ஓடமுடியும். ஒரு மனிதனின் உடல் தகுதிக்கு ஏற்றவாறு எந்த வேகத்தில் ஓட முடியுமோ, அதேபோல் எறும்பினாலும் முடியும். எறும்பினால் அதன் உடல் எடையைப் போல 20 மடங்கு எடையை தூக்கமுடியும்.

2. எறும்பின் மூளையில் 2,50,000 மூளைச் செல்கள் உள்ளன. மனிதனின் மூளையில் 10,000 மில்லியன் எனவே, 40,000 எறும்பு கூட்டங்களின் மொத்த முளை ஒரு மனிதனின் மூளைக்கு சமம்.

3. எறும்புகளின் ஆயுட்காலம் 45 முதல் 60 நாட்கள்.அதன் உணர்வு கொம்புகள், தொடுதலுக்கு மட்டுமல்ல, நுகர்வதற்கும்தான்.

4. இரு தாடைகள் உள்ளன. அவை ஒரு கத்திரிக்கோல் போல பக்கவாட்டில் மூடும்படி இருக்கும். பெரிய எறும்பினால் உணவை மெல்ல முடியாது. எனவே அவைகள் உணவில் திரவத்தை உறிஞ்சிக்கொண்டு திடப்பொருளை துப்பிவிடும்.

5. இரண்டு கண்கள் உள்ளன. ஒவ்வொரு கண்ணிலும் ஏகப்பட்ட கண்கள் உள்ளன. இவற்றை கூட்டுக்கண்கள் என்கிறோம்.

6. அவற்றிற்கு வயிற்றுப்பகுதி இரு பிரிவாக உள்ளது, ஒன்று தனக்கன உணவிற்கும், மற்றொன்று சக எறும்புகளுடன் பகிர்வதற்கும்.

7. எறும்புகளில் 10,000 க்கும் மேற்ப்பட்ட இனங்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 1 அல்லது அதற்கு மேற்பட்ட ராணி எறூம்புகள் உண்டு.

8. ராணி எறும்பின் வேலை முட்டை இடுவது. அவற்றை வேலைக்கார எறும்புகள் கவனித்துக் கொள்ளும். வேலைகார எறும்புகளுக்கு இனப்பெருக்கத் திறன் கிடையாது. அவற்றின் வேலை உணவு சேகரிப்பது, சிறுசுகளை கவனித்துக் கொள்வது மற்றும் தங்கள் வீட்டை எதிரிகளிடமிருந்து காப்பது.

9. சிலவகை சிவப்பு எறும்புகளுக்கு கூர்மையான கொடுக்கு உண்டு.பிற கறுப்பு மற்றும் மர எறும்புகளுக்கு கொடுக்கு கிடையாது. ஆனால், Formic acid ஐ பீச்சி அடிக்கும். சிலவகை பறவைகளில் உள்ள ஒட்டுண்ணிகளை இந்த Formic. acid அழிக்கவல்லது.

10. எறும்புகளில் இராணுவ எறும்புகளும், விவசாய எறும்புகளும் கூட உண்டு.

About Alexa:-

First off, Pagerank is a value for web pages, not entire websites. This means each one of your web pages will have it’s own unique Pagerank value. Alexa is a site wide value.

First, auto surf programs and services are a waste of time, they don’t provide any targeted traffic and are usually just bots roaming through their members list mimicing traffic. I would stay away from any auto surfing programs. Using these is also a violation of most publisher ad network programs (AdSense, ValueClick, YPN, etc).

Futher, don’t use Alexa for any ranking data, they don’t even have %0.5 of internet users using the Alexa toolbar, so the data is very inaccurate and not useful to anyone. Actually the whole “ranking” thing is a cover for the fact Alexa is SPYWARE. This toolbar tracks everything you do in your web browser and reports it to a main server, which is then resold to marketing analysis groups. Alexa does not care about rankings, they want your data to resell!
Source(s):
http://www.civicseo.com – a search engine optimization knowledge database.