சூர்யா ௧ண்ணன்

விண்டோஸ் செக்யூரிட்டி: நண்பர்களோடு உங்கள் கணினியை பகிரும் பொழுது..

Posted in மென்பொருள் உதவி, suryakannan, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 27, 2010
நீங்கள் உங்களது கணினியில் ஏதாவது முக்கியமான அல்லது இரகசியமான டாக்குமெண்டுகளை டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது, திடிரென வரும் உங்கள் நண்பர் ‘ஒரு சில நிமிடங்கள் உங்கள் கணினியை பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என்று கேட்கும் பொழுது உங்களால் மறுக்க முடியாது. உங்கள் டாக்குமெண்டுகளை மினிமைஸ் செய்து விட்டு  நண்பருக்கு உங்கள் கணினியை அல்லது மடிக்கணினியை கொடுக்கிறீர்கள். 
இந்த காலத்தில் எத்தனை நண்பர்கள் உண்மையானவர்களாக இருக்கிறார்கள்? நீங்கள் கொஞ்சம் அசந்தால் போதும் அவர், நீங்கள் மினிமைஸ் செய்து வைத்த டாக்குமெண்டை திறந்து பார்த்து, பின்னர் ஒன்றும் தெரியாதது போல உங்களிடம் கணினியை, அவரது பணி முடிந்து விட்டதாக கூறி ஒப்படைத்து விடுவார். ஆனால் பின்னாளில் அவர் வைக்கப் போகும் ஆப்பு!  இன்று அவர் உங்களை அறியாமல் பார்த்த அந்த குறிப்பிட்ட டாக்குமெண்ட் சம்பந்தமானதாக இருக்கலாம் யார் கண்டது? 
இது போன்ற சமயங்களில், நீங்கள் மினிமைஸ் செய்யாமல் அனைத்தையும் மூடிவிட்டு, உங்கள் நண்பருக்கு கொடுத்தால், அவர் உங்களை தவறாக நினைத்து விடுவாரோ? என்று வெள்ளந்தியாக யோசிப்பது புரிகிறது. சரி, இதற்கு சரியான தீர்வு LockThis! எனும் இலவச மென்பொருள் கருவி! 
இந்த மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு, இதில் உள்ளிருப்பு கடவு சொல்லை மாற்ற வேண்டும். System tray யில் உள்ள இந்த LockThis! ஐகானை வலது க்ளிக் செய்து, Admin panel ஐ சொடுக்குங்கள். 
பிறகு கடவு சொல் கேட்கும் பொழுது LockThis! என்பதை கொடுங்கள். இதுதான் முதன் முதலாக இதை பயன்படுத்தும் பொழுது உள்ளிருக்கும் கடவு சொல். இதைத்தான் நாம் மாற்ற வேண்டும். இனி Admin panel லில் Change Admin Password பொத்தானை சொடுக்கி புதிய கடவு சொல்லை கொடுக்கவும். 
இரண்டு முறை கடவு சொல்லை கொடுத்து OK பட்டனை சொடுக்கிய பின்னர் வரும் சிறு வசனப் பெட்டியில் OK பட்டனை சொடுக்கி புதிய கடவு சொல்லை activate செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்! இனி உங்கள் நண்பருக்கு கணினியை கொடுக்கும்பொழுது, உங்கள் டாக்குமெண்டை கண்ட்ரோல் கீயை அழுத்திய படி Minimize பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது. 

 

மறுபடி கடவு சொல் கொடுத்துதான் திறக்க முடியும்! 
LockThis! தரவிறக்க   
.
Advertisements

ஃபோல்டர் சைஸ்: பயனுள்ள கருவி

Posted in மென்பொருள் உதவி, Computer Tricks, suryakannan, wikipedia by suryakannan on செப்ரெம்பர் 25, 2010
நமது கணினியின் வன்தட்டில் சில சமயங்களில், குறிப்பட்ட பார்டிஷனில் இடம் குறைவாக உள்ளது என்று செய்தி வரலாம். (Low Disc space warning) அல்லது நீங்களாக வன்தட்டில் தேவையில்லாத கோப்புகளை களைந்து, சுத்தம் செய்யலாம் என்று கருதி செயலில் இறங்கி இருக்கலாம். 
இது  போன்ற சமயங்களில், ‘சிறிய அளவிலான கோப்புகள் மற்றும் கோப்புறைகள் தானே இருக்கிறது, ஆனால் இவ்வளவு இடத்தை எது அடைத்திருக்கிறது’ என்ற சந்தேகம் வருவது இயற்கை. 
இது ஏதாவது temp files , தரவிறக்கம் செய்து வைத்த படங்கள், பாடல்கள், மென்பொருட்கள், அவசரத்திற்கு உருவாக்கிய கோப்புறைகளை களையாமல் வைத்த்திருப்பது போன்றவற்றால் இருக்கலாம். 
சரி இந்த சூழலில், நமது வன்தட்டில் எந்த எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்திருக்கிறது என்பதை, Search சென்று *.* கொடுத்து தேடி Size வாரியாக வரிசைப்படுத்தி பார்ப்பதற்குள்ளாக சில சமயங்களில் கணினி தொங்கி விடலாம் அல்லது ரீஸ்டார்ட் ஆகிவிடலாம். 
இந்த பிரச்னைக்கு தீர்வாக ஒரு மிகச் சிறிய சுதந்திர இலவச மென்பொருளான Folder Size ஐ பயன்படுத்தி பார்க்கலாம் என்ற முயற்சி வெற்றியடைந்தது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)               
இந்த சிறிய மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, இதனை இயக்கி,
Explore பொத்தானுக்கு நேராக உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில், எந்த பார்ட்டிஷனில், எந்த ஃபோல்டருக்குள் எனும் path ஐ கொடுத்து, GO பொத்தானை சொடுக்கினால் போதுமானது. 
உடனடியாக அந்த ட்ரைவில் குறிப்பிட்ட ஃபோல்டருக்குள் உள்ள சப் ஃபோல்டர்கள் என அனைத்தையும் திரட்டி அதன் அளவுகளோடு வரைபடமாகவே காண்பித்துவிடும். இதனை மௌஸ் வீல் கொண்டு காட்சி பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும், இடது பட்டனை அழுத்தி நகர்த்தவும், வலது பட்டனை அழுத்தி reset செய்யவும் வழியுண்டு. 
இப்படி காண்பிக்கும் வரைபடத்தில் எந்த ஃபோல்டரில் அதிக அளவு கோப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு, சந்தேகமான ஃபோல்டரை க்ளிக் செய்து Explore பொத்தானை அழுத்தினால் விண்டோஸ் Explorer இல் அந்த ஃபோல்டர் திறக்கும், அதனை சோதித்து, தேவையற்ற பெரிய கோப்புகளை நீக்கி விடலாம். 
    
Folder Size தரவிறக்க 
.

பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை!

Posted in மென்பொருள் உதவி, MS Office Tips, suryakannan by suryakannan on செப்ரெம்பர் 21, 2010
எம்.எஸ் ஆஃபீஸ் 2007 அல்லது 2010 தொகுப்பு உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் மைக்ரோசாப்ட் OneNote பயன்பாடும் தானாகவே நிறுவப்பட்டிருக்கும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த பயன்பாட்டை உபயோகித்திருக்கிறோம்? 
OneNote என்பது ஏதோ ஒரு குறிப்பேடு போன்ற ஒரு மென்பொருள் என்றே பலரும் கருதி வருகிறோம். ஆனால் அதன் அதி முக்கிய பயன்பாட்டை அறிந்து கொண்டால் இது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிடும். 
வழக்கமாக நம்மில் பலர், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, இணைய முகவரி, விலாசம், பள்ளிப் பாடங்கள் பற்றிய குறிப்புகள், பொருட்களின் விலைக் குறிப்புகள், செலவு கணக்கு  மற்றும்  வேறு ஏதேனும் சிறு குறிப்புகள் ஆகியவற்றை ஏதேனும் ஒரு நோட்டு புத்தகத்தின் பக்கத்திலோ, அல்லது டைரி, நாட்காட்டி இவற்றில் எழுதி வைப்பது வாடிக்கை. இவையனைத்தையும் மைக்ரோசாப்ட் OneNote பயன்பாட்டில் எளிதாக பயன்படுத்தலாமே!
இதனுடைய சக்திவாய்ந்த தேடுதல் வசதி இதன் சிறப்பம்சம்.  இது மற்ற வேர்டு processor  போலல்லாமல், இதன் பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் க்ளிக் செய்து டைப் செய்யும் வசதி உண்டு. மேலும், இதில் டெக்ஸ்ட், படங்கள், டிஜிட்டல் கையெழுத்து, ஆடியோ வீடியோ ரெகார்டிங், OCR கன்வெர்ஷன் (இது குறித்தான எனது விரிவான இடுகையை Microsoft OneNote – உபயோகமான பயன்பாடு  பார்க்கவும்) நண்பர் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் இந்த OneNote பயன்பாடு பதிவர்களுக்கு எந்த அளவிற்கு பயன்படும் என்பதையும்  இதில் ஆடியோ வீடியோ ரெகார்டிங் வசதி குறித்தும் எழுதியிருந்த இடுகையை (1 நோட்) அறிந்தும் அறியாமலும்  பார்க்கவும். 
சரி இதில் இது தவிர வேறு என்ன பயன்பாடு உள்ளது என்று பார்க்கலாம். கணக்குகளை இதில் போட முடியும் என்பது சிறந்த விஷயம். One Note -இல் தேவையான் பகுதியில் க்ளிக் செய்து, உதாரணமாக 365*78= என டைப் செய்து என்டர் கொடுத்தால்,

உடனடியாக கணக்கு அதுவே போட்டுக் கொள்ளும்.

 கொஞ்சம் கடினமாக (7^8) * sqrt(1250) + 1798 = என்று கொடுத்துப் பார்த்தால் உடனடி பதில்

என்று வருகிறது.  அது மட்டுமின்றி, Insert tab இல் உள்ள Symbol பொத்தானை அழுத்தி தேவையான கணித மாறிலிகளை இணைத்தும் கணக்கு போட முடிகிறது. 

உதாரணமாக ,

இப்படி பல கணக்குகளை போடும் வசதியை நாம் Onenote -இல் பெறலாம். இதில் நாம் பயன்படுத்தக் கூடிய கணித குறியீடுகள்:
 
இன்னும் கடினமான கல்லூரி கணக்குகளை எளிதாக, இந்த OneNote மற்றும் பிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 /10 தொகுப்புகளில் பயன்படுத்துவது குறித்தான எனது மற்றுஒரு இடுகையை பார்க்கவும் (மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி  ) 

இது மாணவர்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

இந்த OneNote குறித்தான மேலதிக விவரங்களை மற்றொரு இடுகையில் பார்க்கலாம்.

அருமையான இலவச வீடியோ கன்வெர்டர்

நாம் இணையத்தில் தரவிறக்கம் செய்தது, அல்லது நண்பர்கள் மூலமாக கிடைத்தது என பலத்தரப்பட்ட வீடியோ கோப்புகளை நமது கணினியில் வைத்திருப்போம். ஒரு சில சமயங்களில், இது போன்ற ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மற்றொரு கோப்பு வடிவிற்கு மாற்ற வேண்டிவரும் (மொபைல் போன்களுக்கும்.. வேறு சில பயன்பாட்டிற்கும்)
இது போன்ற பயன்பாட்டிற்கு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது Any Video Converter எனும் இலவச மென்பொருள் கருவி. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.. ஓட்டு போட்டுட்டு தரவிறக்கி கொள்ளுங்கள்) 
இந்த மென்பொருள் கருவியில் நாம் பயன்படுத்தக் கூடிய கோப்பு வகைகள்:- 

Input formats: avi, asf, mov, rm, rmvb, flv, mkv, mpg, 3gp, m4v, vob, YouTube videos and more

Output formats: avi, mp4, wmv, swf, flv, mkv, MPEG-1 and MPEG-2, mpg (PAL or NTSC), mp3, wma, ogg, aac, wave, m4a

இதை உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, Spyware Terminator ஐ நிறுவ வேண்டுமா என்று கேட்கும் திரை வரும் பொழுது, Do not install Spyware Terminator தேர்வு செய்து, உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். 

இதனை இயக்கி, Add Video பொத்தானை அழுத்தி தேவையான வீடியோவை உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 
பிறகு வலது புறமுள்ள Profile லிஸ்டில் க்ளிக் செய்து தேவையான கோப்பு வடிவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Preview வலது புற பேனில் தோன்றும், இதை பார்த்து, சரியாக உள்ளதெனில், மேலே உள்ள Convert  பொத்தானை அழுத்தினால் போதுமானது. 
நாம் தேர்வு செய்திருந்த கோப்பு வடிவிற்கு கன்வெர்ட் செய்து சேமிக்கப்படும். இதிலுள்ள மாற்றொரு சிறப்பம்சம், யூ டியுப் வீடியோக்களை தரவிறக்கி கன்வெர்ட் செய்வதுதான். இதற்கு, மேலே உள்ள YouTube பொத்தானை அழுத்தி Youtube video விற்கான url ஐ கொடுத்து OK பட்டனை சொடுக்கவும். 
இப்பொழுது லிஸ்டில் வந்துள்ள YouTube video வை வலது க்ளிக் செய்து,
தரவிறக்கம் செய்து கொண்டு பிறகு, கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 
இதன் தரமும் வேகமும் மற்ற கருவிகளைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. 

http://www.youtube.com/v/P5_Msrdg3Hk?fs=1&hl=en_US

Any Video Converter தரவிறக்க

.

லேப்டாப்/நெட்புக்:- டென்ஷனில்லாமல் பணிபுரிய…

Posted in மென்பொருள் உதவி, லேப்டாப், NetBook by suryakannan on செப்ரெம்பர் 9, 2010
சமீப காலமாக பெரும்பாலானோர் மேசை கணினியை விட லேப்டாப்/நெட்புக் ஆகியவற்றையே அதிகமாக விரும்புகிறார்கள். ஆனால் என்னதான் இவைகள் அழகாகவும், ஸ்லிம்மாகவும், விலை மலிவாகவும், எங்கு வேண்டுமென்றாலும் இலகுவாக எடுத்துச் செல்ல வசதியாக இருந்தாலும், மேசை கணினி கீ போர்டில் நாம் சரளமாக டைப் செய்வது போல இவற்றில் முடிவதில்லை. 
அதிலும் முக்கியமாக நாம் ஏதாவது டைப் செய்கையில் டச் பேடில் கை படாமல் இருப்பது இயலாத காரியம். 

சில நேரங்களில் நாம் டைப் செய்யும் பொழுது, நம்மையறியாமலேயே நமது கைகள் டச் பேடில் படும் பொழுது, மௌஸ் கர்சர் நாம் டைப் செய்து கொண்டிருக்கும் திரையை விட்டு, வேறு எங்காவது ஒடி விடுவது வாடிக்கை. இதிலும் கொடுமை என்னவென்றால், இந்த கர்சர் எங்காவது ஓடி, அந்த சமயத்தில் தேவையில்லாத ஏதோ ஒரு அப்ளிகேஷனை திறந்து கொள்வதுதான்.
ஒரு சில லேப்டாப்/நெட்புக்குகளில் கீ பேடிலேயே டச் பேடை disable செய்து கொள்ளும் வசதி உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் டைப் செய்யும்பொழுது ஞாபகமாக இந்த கீகளை அழுத்தி டச் பேடை disable செய்வது இயலாத காரியம். 
சரி இதற்கு என்னதான் தீர்வு? 
இதோ Google Code வழங்கும்  TouchFreeze இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் கருவி! (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இதனை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, டாஸ்க்பாரில் இதன் ஐகானை க்ளிக் செய்து Load at System Startup வசதியை enable  செய்து கொள்ளுங்கள்.

இந்த கருவியின் சிறப்பான பணி என்னவெனில், அமைதியாக டாஸ்க்பாரில் அமர்ந்து கொண்டு, எப்பொழுதெல்லாம் நீங்கள் டெக்ஸ்ட் டைப் செய்கிறீர்களோ அந்த சமயங்களிலெல்லாம் டச் பேடை   Freeze செய்து விடும். இதனால் மௌஸ் கர்சர் ஆங்காங்கே அலையாமல் இருப்பதால், தேவையற்ற டென்ஷன் ஏதுமின்றி உங்கள் பணியை தொடரலாம். 
TouchFreeze தரவிறக்க
.

விண்டோஸ் கால்குலேட்டரை Excel டூல்பாரில் இணைக்க

நாம் எச்செல் 2007 பயன்படுத்தி வரும்பொழுது, அதில் அவசர கணக்கு போட அடிக்கடி விண்டோஸ் கால்குலேட்டரை உபயோகிப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு முறையும் கால்குலேட்டரை ஸ்டார்ட் மெனுவிலோ, அல்லது டெஸ்க்டாப் ஷார்ட் கட்டிலோ திறந்து பணிபுரிவது நேர விரயமாகும். 
இந்த விண்டோஸ் கால்குலேட்டரை எக்சல் Quick Access Toolbar -இல் இணைக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம். 
எக்ஸ்செல் 2007 ஐ திறந்து கொண்டு மேலே உள்ள Customize Quick Access Toolbar ஐ க்ளிக் செய்யுங்கள். 
  
இப்பொழுது அந்த மெனுவில் உள்ள More Commands ஐ க்ளிக் செய்யுங்கள். திறக்கும் Excel options window வில் choose commands from என்பதற்கு கீழாக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Commands not in the Ribbon என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது வரும் பட்டியலில் Calculator ஐ க்ளிக் செய்து அருகிலுள்ள ADD பொத்தானை க்ளிக் செய்து, கீழே உள்ள OK பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
இனி அடிக்கடி உபயோகிக்க விண்டோஸ் கால்குலேட்டர் உங்கள் எக்ஸ்செல் Quick Access Toolbar -இல் க்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 
.

பவர் பாயிண்ட் – ட்ரிக்

நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனையும் அதற்கான தீர்வும் உங்களுக்கும் பயன்படலாம் என்ற எண்ணத்தில்.. (இது பலரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும்.. அறியாத சிலருக்காக..)
அவருடைய பிரச்சனை என்னவென்று முதலில் பார்ப்போம். அவர் தனது கணினியில் பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன்   ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார். சுமார் 250 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக இன்செர்ட் செய்து உருவாக்கி கொண்டிருக்கும் பொழுது, முதல் 11 படங்களை இணைத்த பிறகு சேமித்ததோடு சரி, பிறகு சேமிக்க மறந்து போனார், இறுதியில் சேமிக்க முயன்ற போது, சிஸ்டம் ஹேங் ஆகி, கணினியை Reset செய்ய வேண்டி வந்தது. மறுபடியும் அந்த கோப்பை திறந்த போது  அந்த முதல் 11 படங்கள் மட்டுமே இருந்தது. அவர் கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்கும் மேலாக செய்த பணி அனைத்தும் பறிபோன கவலை ஒரு புறமும், இதை உடனடியாக முடித்து தனது மேலதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடியும் சேர்ந்து கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தார். 
முதலில் இந்த பிரச்னைக்கு ஞாபக மறதி தவிர வேறு என்ன காரணம் என்பதை பார்க்கலாம். 
அவர் தனது பவர்பாயிண்ட் கோப்பில் இணைத்த கோப்புகள் அனைத்தும் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டவை. 
அந்த புகைப்பட கோப்புகளின் அளவை சோதித்தபோது, சராசரியாக 3 MB ஆக இருந்தது. ஒரு படத்திற்கு 3 MB எனில் 250 படங்களுக்கு 750 MB. ஆக சராசரியாக அந்த பவர்பாயின்ட் கோப்பின் அளவு 750 Mb க்கும் அதிகமானது. இதன் காரணமாகவே இதை சேமிக்கும் பொழுது, ஹேங் ஆகி சேமிக்க முடியாமல் போனது. 
இதற்கு தீர்வாக முதலில் நாம் செய்ய வேண்டியது, அந்த புகைப்படங்களின் அளவுகளை குறைப்பது, இதற்காக உபயோகிக்கப் போகும் கருவி மைக்ரோசாப்ட்டின் Power Toys Image Resizer.  இந்த கருவியை கணினியில் நிறுவிய பிறகு, தேவையான அனைத்து புகைப்படங்களையும் தேர்வு செய்து, வலது க்ளிக் செய்து Resize Pictures ஐ க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில் Medium என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.

 

இனி புதிதாக உருவாக்கப்படும், அந்த புகைப்படக் கோப்புகளின் அளவை பார்த்தால்,
 
    3 MB இருந்த கோப்பின் அளவு வெறும் 69 KB யில் அடங்கி விட்டது. இப்பொழுது கோப்புகளின் அளவை குறைத்தாகிவிட்டது, இனி உடனடியாக பவர்பாயிண்ட்டில் அனைத்து புகைப்படங்களையும் விரைவாக இணைக்க வேண்டும். ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டிருப்பது வேலைக்கு ஆகாது.

மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட்டை (2007) திறந்து கொண்டு, Insert மெனுவில் உள்ள Photo Album க்ளிக் செய்து New Photo Album செல்லுங்கள்.

 

இங்கு இடது புறமுள்ள Insert picture from என்பதற்கு கீழாக உள்ள File/Disk பொத்தானை க்ளிக் செய்து, அளவு மாற்றப்பட்ட அனைத்து புகைப்பட கோப்புகளையும் தேர்வு (Ctrl+A) செய்து கொள்ளுங்கள்.

பிறகு, Picture Layout க்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில்  தேவையான வசதியை தேர்வு செய்து கொண்டு Create பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 

அவ்வளவுதான் சில நொடிகளில் கிட்டத்தட்ட 250 க்கும் மேலான புகைப்படங்களைக் கொண்ட பவர் பாயிண்ட் பிரெசென்டேஷன் தயார், அதுவும் வெறும் 15 MB அளவிற்குள்.

‘இதென்ன பெரிய விஷயமா?’   என்று சலித்துக் கொள்பவர்களும் ஓட்டு போடலாம்.

. 

Q-Dir File Manager – பயனுள்ள கருவி!

Posted in மென்பொருள் உதவி, Computer Tricks, Windows Security by suryakannan on ஓகஸ்ட் 9, 2010
நமது கணினியில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிஷன்களில் கோப்புகளை காப்பி செய்வது, மூவ் செய்வது, ஒப்பிட்டு பார்ப்பது போன்ற பல காரியங்களுக்காக நாம் வழக்கமாக உபயோகிக்கும் விண்டோஸ் Explorer ஒரே ஒரு pane மட்டுமே உள்ளதால் நம்மால் விரைவாக, துல்லியமாக கோப்புகளை கையாள இயலுவதில்லை.
இது போன்ற கோப்புகளின் மேலாண்மைக்காகவே Multi pane வசதி கொண்ட Q-Dir என்ற மென்பொருள் கருவி பல வகையிலும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 
ஒரே விண்டோவில் அதிக பட்சமாக நான்கு pane களை வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலமாக ஒரே சமயத்தில் நான்கு கோப்புறைகள் அல்லது நான்கு ட்ரைவ்களை கையாள முடியும்.
Tree View உட்பட நமக்கு தேவையான வகையில் கோப்புகளின் பட்டியலை  மாற்றியமைக்க முடியும்.

இதிலுள்ள options பகுதிக்கு சென்று, Context menu வில் புதிதாக எதாவது சேர்க்க வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் preview வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதிலுள்ள Colors டேபிற்கு சென்று குறிப்பிட்ட கோப்பு வகைகளுக்கு விருப்பமான நிறங்களை தேர்வு செய்து கொள்வதன் மூலமாக பலத்தரப் பட்ட கோப்பு வகைகளையும் எளிதாகவும், விரைவாகவும் கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் பல வசதிகள் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது பயன்படுத்திப் பாருங்கள்.

   

.

100 சிறந்த சுதந்திர இலவச மென்பொருட்கள் ஒரே தளத்தில்

100 சிறந்த சுதந்திர இலவச மென்பொருட்கள் ஒரே தளத்தில்… Ubuntu Linux Help

இதில் Linux க்கு மட்டுமின்றி பல மென்பொருட்கள் விண்டோஸ்  இயங்குதளத்திற்கும் சேர்த்து தரவிறக்க கிடைப்பது தனி சிறப்பு. 

தளத்திற்கான சுட்டி 

நண்பர்களே! .. உங்களுடைய பின்னூட்டங்களை Publish செய்யும் பொழுது ஏதோ சிறு பிரச்சனை எழுகிறது.. பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. பின்னூட்டங்கள் Publish ஆகவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்

.

Eraser

Posted in மென்பொருள் உதவி, Computer Tricks by suryakannan on ஜூலை 3, 2010
நாம் கணினியில் ஒரு கோப்பை அழிக்கிறோம், அதை Recycle bin லிருந்தும் நீக்கி விடுகிறோம்.  அந்த கோப்பு உண்மையில் உங்கள் கணினியிலிருந்து நீக்கப் பட்டு விட்டதா? 
இல்லை என்பதே பதில்! File system Table லில் இருந்து அந்த கோப்பின் reference மட்டுமே நீக்கப் பட்டுள்ளது. அந்த கோப்பு குறிப்பிட்ட ட்ரைவில் எழுதப்பட்டுள்ள இடத்தில் மறுபடியும் ஏதாவது கோப்பு விவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டால் மட்டுமே அந்த கோப்பு உண்மையிலேயே நீக்கப் பட்டுள்ளதாக கருதமுடியும். ஃபோர்மெட் செய்யும் பொழுதும் இதே கதைதான்.
உங்கள் பழைய கணினியை யாருக்காவது விற்கிறீர்கள் அல்லது கொடுக்கிறீர்கள், அல்லது உங்கள் மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுக்கிறீர்கள்,  (இந்த இடுகை சத்தியமாக சாமியார்களுக்கு எழுதப்பட்டதல்ல)  இப்படி கோப்புகள் அழித்ததாக நீங்கள் நினைத்திருக்கும் ட்ரைவிலிருந்து, ஒரு சில மென்பொருட்களைக் கொண்டு எளிதாக திரும்ப எடுத்து விட முடியும். 
அப்படியெனில் கணினியில் ஒரு ட்ரைவில் உள்ள தகவல்களை நிரந்தரமாக அழிப்பது எப்படி? ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது, Eraser எனும் சுதந்திர இலவச மென்பொருள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).
 
உங்கள் கணினியில் உள்ள ட்ரைவில் தகவல்களை நிரந்தரமாக அழிப்பதற்க்கான மென்பொருள் இது என்பதால், மிகவும் கவனமாக கையாளவும். 

Eraser தரவிறக்க 
Eraser வலைப்பக்க முகவரி
.