சூர்யா ௧ண்ணன்

விண்டோஸ் XP/விஸ்டா/7 : Error Reporting ஐ தவிர்க்க

விண்டோஸ் XP/விஸ்டா/7 இயங்குதளங்களை பயன்படுத்தி வரும்பொழுது, ஒரு சில சமயங்களில், Error Reporting அறிவிப்பு உங்களுக்கு அலுப்பை தரலாம். Windows (app name) has stopped working திரையும், விண்டோஸ் XP யில் Send , Don’t send திரையும் வந்து உங்களை டென்ஷன் ஆக்கலாம்.

மற்றும்

இந்த பிழைச்செய்தியை விண்டோஸ் XP யில் எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். My Computer – ஐ வலது கிளிக் செய்து properties செல்லவும். அங்கு Advanced tab -ஐ கிளிக் செய்து அதில் உள்ள  error reporting பொத்தானை அழுத்தி, திறக்கும் Error Reporting வசனப் பெட்டியில்  ‘ Disable error reporting ஐ தேர்வு செய்து OK கொடுக்கவும்.
விண்டோஸ்  விஸ்டாவில், Control Panel சென்று, முதலில் Classic View விற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு, Problem Reports and Solutions  ஐ  க்ளிக் செய்யுங்கள். 

அடுத்து திறக்கும் Problem Reports and Solutions திரையில், இடது புற பேனில் உள்ள Change Settings link ஐ க்ளிக் செய்து, 
அடுத்த திரையில், Advanced settings லிங்கை க்ளிக் செய்து  Advanced settings for problem reporting என்பதற்கு கீழாக உள்ள Off ரேடியோ பட்டனை க்ளிக் செய்து, OK கொடுங்கள்.  
 
இந்த பிழைச் செய்தியை விண்டோஸ் ஏழு இயங்குதளத்தில் நீக்க, Start menu வில் சர்ச் பாக்ஸில் problem reporting settings என டைப் செய்து, மேலே தோன்றும் Choose how to report problems லிங்கை  க்ளிக் செய்து கொள்ளுங்கள். 

அடுத்து திறக்கும் விண்டோவில்,
Never check for solutions ஐ தேர்வு செய்து, OK பட்டனை க்ளிக் செய்து கொள்ளுங்கள். 
.
Advertisements

விண்டோஸ் 7 : 7 நிமிடங்களில் 7 டிப்ஸ் காணொளி

http://www.youtube.com/v/DhEh-GPPyDw?fs=1&hl=en_US

உங்கள் கணினியின் தோழன் – கிளாரி யுடிலிடீஸ்

Posted in விண்டோஸ் ஏழு, விஸ்டா ட்ரிக்ஸ், Computer Tricks, System tools by suryakannan on செப்ரெம்பர் 6, 2010
சில சமயங்களில் நமது கணினி வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகம் குறைந்து இயங்குகிறதா? வன்தட்டில் Low Disk Space பிழைச் செய்தி வருகிறதா? இணைய வேகம் குறைந்துள்ளதா? உங்கள் கணினியை optimize செய்து, பாதுகாக்க..   இதோ உங்களுக்கான தோழன் – Glary Utilities. தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவச மென்பொருள் கருவி. (பெயரில் பெண்பால் உள்ளதால் தோழியாகவும் பாவிக்கலாம்)
இது போன்ற பணிக்காக CCleaner எனும் கருவியை பலரும் பயன்படுத்தி வந்தாலும், இது  கிளாரி யுடிலிடீஸ் கருவியில் அதைவிட பல வசதிகள் கூடுதலாக தரப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
இந்த கருவியை பயன்படுத்தி, நம் வன்தட்டில் உள்ள தேவையில்லாத கோப்புகள், கோப்புறைகளை நீக்குவது (தேவையான கோப்பு எது, தேவையில்லாத கோப்பு எதுவென்று அது முடிவு செய்து கொள்ளும்), விண்டோஸ் Registry  யை கிளீன் செய்வது, உடைந்த ஷார்ட் கட்டுகளை  நீக்குவது, Uninstall Manager போன்ற பயனுள்ள வசதிகளும், 
 
 
Startup ஃபோல்டரில் உள்ள தேவையற்ற குப்பைகளை களைவது, நினைவகத்தை சிறந்த பயன்பாட்டிற்கு தயார் செய்தல், Context menu Manager ஆகிய வசதிகளும் .
கோப்புகளின் பாதுகாப்பு, இணைய வேகத்தை அதிகரிக்க என பல வகையான வசதிகளுடன் இருப்பது இதனுடைய சிறப்பம்சம். 
ஒருவேளை இதனை இயக்கிய பிறகு உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மறுபடியும் Restore செய்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதிலுள்ள Context menu வசதி குறிப்பிட்ட கோப்புறைக்குள் உள்ள கோப்புகளை கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Glary Utilities தரவிறக்க 
.

விண்டோஸ் கால்குலேட்டரை Excel டூல்பாரில் இணைக்க

நாம் எச்செல் 2007 பயன்படுத்தி வரும்பொழுது, அதில் அவசர கணக்கு போட அடிக்கடி விண்டோஸ் கால்குலேட்டரை உபயோகிப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு முறையும் கால்குலேட்டரை ஸ்டார்ட் மெனுவிலோ, அல்லது டெஸ்க்டாப் ஷார்ட் கட்டிலோ திறந்து பணிபுரிவது நேர விரயமாகும். 
இந்த விண்டோஸ் கால்குலேட்டரை எக்சல் Quick Access Toolbar -இல் இணைக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம். 
எக்ஸ்செல் 2007 ஐ திறந்து கொண்டு மேலே உள்ள Customize Quick Access Toolbar ஐ க்ளிக் செய்யுங்கள். 
  
இப்பொழுது அந்த மெனுவில் உள்ள More Commands ஐ க்ளிக் செய்யுங்கள். திறக்கும் Excel options window வில் choose commands from என்பதற்கு கீழாக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Commands not in the Ribbon என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது வரும் பட்டியலில் Calculator ஐ க்ளிக் செய்து அருகிலுள்ள ADD பொத்தானை க்ளிக் செய்து, கீழே உள்ள OK பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
இனி அடிக்கடி உபயோகிக்க விண்டோஸ் கால்குலேட்டர் உங்கள் எக்ஸ்செல் Quick Access Toolbar -இல் க்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 
.

எம்.எஸ் ஆபீஸ்: படங்களை கையாள பயனுள்ள டிப்ஸ்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பயன்பாட்டை உபயோகித்து வருபவர்கள், தங்களது Word, Excel அல்லது Powerpoint கோப்புகளில் புகைப்படங்களை இணைக்கும் பொழுது, அந்த புகைப்படங்களை தேவையான அளவு crop செய்து கொள்வது, சிறப்பு எபக்ட்கள் ஆகியவற்றை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 
வழக்கம் போல Insert இற்கு சென்று தேவையான படத்தை உங்கள் டாக்குமெண்டில் இணைத்துக் கொள்ளுங்கள். 
இப்படி இணைக்கப்பட்ட ஒரு சாதாரண Bird ஐ Love Bird (!)ஆக்குவது எப்படி?   

ரிப்பன் மெனுவிலிருந்து Crop வசதியை எடுத்துக்கொண்டு படத்தை தேவையான அளவு crop செய்து கொள்ளுங்கள்.

இனி அதே Picture Tools மெனுவிலிருந்து Picture shape வசதியை க்ளிக் செய்து தேவையான வடிவத்தை (Heart) தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த படம் அதே வடிவில் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கலாம். 
மேலும் இந்த மெனுவில் உள்ள Picture Border, Picture effects போன்ற வசதிகளை பயன்படுத்தி படத்தை மேலும் மெருகூற்றலாம்.  
இனி நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்டில் Shadow, Bevel  போன்ற வசதிகளை பயன்படுத்தி  படங்களை அழகாக வடிவாக்க முடியும். 
   
.

பவர் பாயிண்ட் – ட்ரிக்

நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனையும் அதற்கான தீர்வும் உங்களுக்கும் பயன்படலாம் என்ற எண்ணத்தில்.. (இது பலரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும்.. அறியாத சிலருக்காக..)
அவருடைய பிரச்சனை என்னவென்று முதலில் பார்ப்போம். அவர் தனது கணினியில் பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன்   ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார். சுமார் 250 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக இன்செர்ட் செய்து உருவாக்கி கொண்டிருக்கும் பொழுது, முதல் 11 படங்களை இணைத்த பிறகு சேமித்ததோடு சரி, பிறகு சேமிக்க மறந்து போனார், இறுதியில் சேமிக்க முயன்ற போது, சிஸ்டம் ஹேங் ஆகி, கணினியை Reset செய்ய வேண்டி வந்தது. மறுபடியும் அந்த கோப்பை திறந்த போது  அந்த முதல் 11 படங்கள் மட்டுமே இருந்தது. அவர் கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்கும் மேலாக செய்த பணி அனைத்தும் பறிபோன கவலை ஒரு புறமும், இதை உடனடியாக முடித்து தனது மேலதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடியும் சேர்ந்து கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தார். 
முதலில் இந்த பிரச்னைக்கு ஞாபக மறதி தவிர வேறு என்ன காரணம் என்பதை பார்க்கலாம். 
அவர் தனது பவர்பாயிண்ட் கோப்பில் இணைத்த கோப்புகள் அனைத்தும் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டவை. 
அந்த புகைப்பட கோப்புகளின் அளவை சோதித்தபோது, சராசரியாக 3 MB ஆக இருந்தது. ஒரு படத்திற்கு 3 MB எனில் 250 படங்களுக்கு 750 MB. ஆக சராசரியாக அந்த பவர்பாயின்ட் கோப்பின் அளவு 750 Mb க்கும் அதிகமானது. இதன் காரணமாகவே இதை சேமிக்கும் பொழுது, ஹேங் ஆகி சேமிக்க முடியாமல் போனது. 
இதற்கு தீர்வாக முதலில் நாம் செய்ய வேண்டியது, அந்த புகைப்படங்களின் அளவுகளை குறைப்பது, இதற்காக உபயோகிக்கப் போகும் கருவி மைக்ரோசாப்ட்டின் Power Toys Image Resizer.  இந்த கருவியை கணினியில் நிறுவிய பிறகு, தேவையான அனைத்து புகைப்படங்களையும் தேர்வு செய்து, வலது க்ளிக் செய்து Resize Pictures ஐ க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில் Medium என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.

 

இனி புதிதாக உருவாக்கப்படும், அந்த புகைப்படக் கோப்புகளின் அளவை பார்த்தால்,
 
    3 MB இருந்த கோப்பின் அளவு வெறும் 69 KB யில் அடங்கி விட்டது. இப்பொழுது கோப்புகளின் அளவை குறைத்தாகிவிட்டது, இனி உடனடியாக பவர்பாயிண்ட்டில் அனைத்து புகைப்படங்களையும் விரைவாக இணைக்க வேண்டும். ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டிருப்பது வேலைக்கு ஆகாது.

மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட்டை (2007) திறந்து கொண்டு, Insert மெனுவில் உள்ள Photo Album க்ளிக் செய்து New Photo Album செல்லுங்கள்.

 

இங்கு இடது புறமுள்ள Insert picture from என்பதற்கு கீழாக உள்ள File/Disk பொத்தானை க்ளிக் செய்து, அளவு மாற்றப்பட்ட அனைத்து புகைப்பட கோப்புகளையும் தேர்வு (Ctrl+A) செய்து கொள்ளுங்கள்.

பிறகு, Picture Layout க்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில்  தேவையான வசதியை தேர்வு செய்து கொண்டு Create பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 

அவ்வளவுதான் சில நொடிகளில் கிட்டத்தட்ட 250 க்கும் மேலான புகைப்படங்களைக் கொண்ட பவர் பாயிண்ட் பிரெசென்டேஷன் தயார், அதுவும் வெறும் 15 MB அளவிற்குள்.

‘இதென்ன பெரிய விஷயமா?’   என்று சலித்துக் கொள்பவர்களும் ஓட்டு போடலாம்.

. 

மைக்ரோசாப்ட் வோர்ட் – மிகவும் அவசியமான, ஆச்சர்யமான ட்ரிக்

மைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டை நம்மில் பலர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். அவரவர் தேவைக்கு ஏற்றபடி, வேர்டு டாக்குமெண்டில் புகைப்படங்கள் மற்றும் பிறப் படங்களை  டெக்ஸ்ட்களுக்கு இடையில் அங்காங்கே இணைத்திருப்போம். அவற்றில் பெரும்பாலான படங்கள் அதனுடைய உண்மையான அளவிலிருந்து பெரிதாக்கியோ அல்லது சிறிதாக்கியோ இணைக்கப்பட்டிருக்கும். 
இது போன்ற வேர்டு கோப்புகளில் உள்ள படங்களை மட்டும் அதனுடைய உண்மையான அளவில் தனித்து திரும்ப பெற, அவற்றில் உள்ள டெக்ஸ்ட்களை  மட்டும் தனித்துப் பெற, இதில் எம்பெட் செய்யப்பட்ட கோப்புகளை தனித்துப் பெற, மிக முக்கியமாக மேலே சொன்ன அனைத்தையும் அந்த குறிப்பிட்ட வேர்டு கோப்பை திறக்காமல் செய்ய முடியுமா? (வேர்டு 2007)  எனில் முடியும். விளக்கத்தை மேலும் படியுங்கள்.    
மைக்ரோசாப்ட் வோர்டு 2007 கோப்பின் extension – .Docx என்பதை நாமறிவோம். ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம், இது xml கோப்புகளை உள்ளடக்கிய ஒரு Compressed file என்பதுதான். சரி! அப்படி என்னதான் ஒரு வேர்டு கோப்பிற்குள் இருக்கும் என்பதை கொஞ்சம் நுணுக்கமாக பார்க்கலாம். 
முதலில் இந்த வேர்டு கோப்பை பாருங்கள். இதில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை கொண்டுள்ளது. 
இந்த வேர்டு கோப்பை வலது க்ளிக் செய்து 7-Zip எனும் Compress utility -இல் Open Archive என்பதை க்ளிக் செய்கிறேன். 
இப்பொழுது இந்த கோப்பின் உள்ளே வேறு என்னென்ன கோப்புகள் மற்றும் கோப்புறைகள் உள்ளன என்பதை பாருங்கள். (ஆச்சர்யமாக இருக்கிறதா?) 
இப்பொழுது இதிலுள்ள Word ஃபோல்டரை திறவுங்கள். அதற்குள்ளே உள்ள Media ஃபோல்டரை ட்ராக் அன்ட் ட்ராப் செய்தோ அல்லது extract செய்தோ சேமித்துக் கொள்ளுங்கள். 
இதன் மூலமாக அந்த குறிப்பிட்ட கோப்பினுள் இணைக்கப்பட்டிருந்த படங்கள் அனைத்தும் அவற்றின் உண்மையான அளவுகளில் கிடைக்கும். மேலும் இந்த Word ஃபோல்டருக்குள் உள்ள document.xml என்ற கோப்பை Notepad++ போன்ற கருவிகளில் திறக்க, நமக்கு அதிலுள்ள plain text மட்டும் தனித்து கிட்டும். 
இந்த வேர்டு கோப்பில் எம்பெட் செய்யப்பட்டுள்ள (OLE Objects) பிற கோப்பு வகைகள் (PDF, XLS,DWG) அனைத்தும் embeddings ஃபோல்டருக்குள் .bin கோப்புகளாக சேமிக்கப் பட்டிருக்கும் (உதாரணமாக OleObject1.bin, OleObject2.bin என..)  என்பதனால் அந்த கோப்புகளை சரியாக இனங்கண்டு அதற்கேற்ற extension க்கு பெயர் மாற்றம் செய்தால் அந்த கோப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம். 
 
இதே முறையில் வேர்டு மட்டுமின்றி Excel, Powerpoint கோப்புகளிலும் பிரித்தெடுக்க முடியும் என்பது சந்தோஷமான செய்தி. 
 
7-Zip தரவிறக்க 
 
 
.

லேப்டாப் டிப்ஸ் – புதியவர்களுக்கு

தொடர்ந்து மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரும். அது, தங்களது மடிகணினியை ஷட்டௌன்  செய்யாமல் மூடி வைக்கும்பொழுது Sleep mode இற்கு செல்ல வேண்டுமா? Hybernate ஆகவேண்டுமா? Shut down ஆக வேண்டுமா? அல்லது எதுவுமே ஆகக் கூடாதா? இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும்? 

விண்டோஸ் Taskbar – System Tray இல் உள்ள Battery ஐகானை வலது க்ளிக் செய்து Power Options லிங்கை க்ளிக் செய்யுங்கள். 
இப்பொழுது திறக்கும் திரையில் இடது பிரிவில் உள்ள Choose what closing the lid does என்ற லிங்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள். 
அடுத்து திறக்கும் திரையில் When I close the lid என்பதற்கு நேராக உள்ள Drop down லிஸ்டில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளலாம். 
இதில் Sleep வசதியே உகந்தது, சில சமயங்களில் திரை அவசியப்படாமல் ஏதாவது பாடல்களை கேட்க வேண்டுமென்றால் Do nothing வசதியை தேர்வு செய்து கொள்ளலாம். 
சிக்ஸ்த் சென்ஸ் – பிரணவ் மிஸ்ட்ரி குறித்தான நண்பர் கக்கு மாணிக்கத்தின் பதிவு – அவசியம் பாருங்கள்! ஆச்சர்ய படுவீர்கள்..

இரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்

பலரும் தங்களது வன்தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட  பார்ட்டிஷன்களை வைத்திருப்பது வழக்கம். தங்களுக்கு தேவையான, இரகசியமான கோப்புகளை ஒரு குறிப்பிட்ட ட்ரைவில் வைத்திருப்போம். ஒருவேளை உங்கள் கணினி, குடும்ப உறுப்பினர்கள் அல்லது அலுவலக சகாக்கள் என பலரும் உபயோகிப்பதாக இருந்தால், இது போன்ற கோப்புகளை மற்றவர்கள் பார்வையிடாமலோ அல்லது டெலிட் செய்யாமலோ தடுக்க விண்டோஸில் ஒரு சின்ன ட்ரிக் என்னவென்று பார்க்கலாம்.    
நாம் எப்படி இதை சாத்தியப்படுத்தப் போகிறோம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அதாவது, நமது இரகசிய, முக்கிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் அனைத்தையும் தனியாக ஒரு ட்ரைவில் வைத்துவிட்டு, அந்த குறிப்பிட்ட ட்ரைவை எவரும் கையாள முடியாதவாறு முடக்கப் போகிறோம். 
Start menu வில் Run அல்லது search box (Windows vista/7) சென்று gpedit.msc என தட்டச்சு செய்து என்டர் கொடுங்கள். 
இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில் இடதுபுற பேனில் User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer என்ற பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Windows Explorer ஐ க்ளிக் செய்தபிறகு, வலது புற Settings டேபில் Prevent access to drives from My Computer என்பதை இரட்டை க்ளிக் செய்திடுங்கள். 
இனி திறக்கும் வசனப்பெட்டியில் enabled ரேடியோ பட்டனை கிளி செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள options பெட்டியில் எந்தெந்த ட்ரைவ்களை Restrict செய்ய வேண்டுமோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
அவ்வளவுதான்! நம்ம ட்ரிக் முடிஞ்சது. இனி My Computer திறந்து பார்க்கும் பொழுது, நாம் restrict செய்த ட்ரைவ் தெரியும், ஆனால் அதை திறக்க முயலும் பொழுது, கீழே தரப்பட்டுள்ளது போன்ற பிழைச் செய்தி வரும். 
மறுபடியும் பழையபடி மாற்ற, மேலே சொன்ன அதே வழியை பின்பற்றி Disable க்ளிக் செய்தால் போதுமானது. இந்த ட்ரிக்கை விண்டோஸ் ஹோம் பதிப்புகள் தவிர்த்து மற்ற பதிப்புகளில்  செய்ய இயலும். (Administrative Rights உங்களுக்கு இருக்க வேண்டும்) 
.

விண்டோஸ் 7 – பலூன் அறிவிப்பை நீக்க

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் நாம் பணி புரிந்து கொண்டிருக்கும் பொழுது, Task bar -இல் உள்ள Notification area வில், உங்கள் கணினி பாதுகாப்பு குறித்து அவ்வப்பொழுது, Windows Action Center பலூன் அறிவிப்பு வருவதை கவனித்திருக்கலாம். இது சில சமயங்களில் பயனுள்ளதாக இருந்தாலும், பலருக்கு இது ஒரு தொல்லை தரும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது. 

இது போன்ற அறிவிப்புகளை நீங்கள் விரும்பாத பட்சத்தில் இதை நீக்குவது எப்படி என்பதை பார்க்கலாம். 
Control panel சென்று System and Security பகுதியில் உள்ள Action Center ஐ க்ளிக் செய்யுங்கள். 
இப்பொழுது  திறக்கும் Action Center திரையில் இடது புறமுள்ள Change Action Center Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள். 
இப்பொழுது Related Settings என்ற பகுதிக்கு கீழாக Problem reporting settings லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் When to check for solutions to problem reports என்ற திரையில் நான்கு தேர்வுகள் தரப்பட்டிருப்பதை கவனிக்கலாம். இங்கு இறுதியாக உள்ள Never check for solutions என்பதை தேர்வு செய்து OK பொத்தானை க்ளிக் செய்யுங்கள். இதற்கு மேல் இந்த அறிவிப்பு உங்களை தொல்லை செய்யாது.
இது குறித்தான எனது மற்றொரு இடுகை விண்டோஸ் ஏழில் பலூன் அறிவிப்புகளை நீக்க..,
.