சூர்யா ௧ண்ணன்

AutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்க

Posted in AutoCAD Tricks by suryakannan on ஓகஸ்ட் 17, 2009
நண்பரின் கேள்வியும், என் அறிவுக்கு எட்டிய பதிலையும் கீழே தந்துள்ளேன். (மற்றவர்களுக்கும் உபயோகப்படட்டும் என்று)

அன்பு சகோதரர் சூர்யகண்ணனுக்கு…
AutoCad ல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.
என்னுடைய DWGS ஐ Read only
shapeக்கு மாற்றவேண்டும். மற்றவர்கள்
என்னுடைய dwg ஐ Open செய்யலாம்
objectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.
முக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]
குறிப்பு:
right click-properties-tic read only என்ற முறையில் வேண்டாம்.
வேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்தந்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ஆஷிக்

கேள்வியின் சாரம்சம்:-

உங்களுடைய வரைபடத்தை வேறு யாரும் எடிட் செய்ய கூடாது.

Object களின் அளவுகளை (Distance, Area, Volume Etc..,) தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கவேண்டும்.

Print செய்யும்படியாக இருக்கவேண்டும்.

வழி ஒன்று:-

உங்கள் வரைபடத்தை DWF கோப்பாக Export செய்வது.

இந்த முறையில் உருவாக்கப்படும் DWF கோப்பானது AutoDesk DWF Viewer -ல் திறக்கும்படியாக இருக்கும்.

இந்த கோப்பை பிரிண்ட் செய்ய இயலும்.
எடிட் செய்ய இயலாது.

ஆனால் Object களின் அளவுகளை பார்க்க முடியாது என்பதனால் இந்த வழி உங்களுக்கு தீர்வாக அமையாது.

வழி இரண்டு:-

CADLock மற்றும் DWGLock போன்ற மென்பொருளை உபயோகிக்கலாம்.

இந்த வழியில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆனால் இந்த மென்பொருட்கள் எதுவுமே இலவசம் கிடையாது. நீங்கள் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.

இந்த மென்பொருட்களின் Trial Version களை தரவிறக்கம் செய்ய சுட்டிகள் கீழே..,

CADLock

DWGLock

AutoCAD லேயே ஏதாவது ட்ரிக் இருக்கா, என ஆராய்ந்து பார்த்ததன் விளைவு..,

வழி மூன்று:-

தேவையான வரைபடத்தை திறந்து கொண்டு,

Wblock கட்டளையை கொடுத்து, உங்கள் வரைபடத்தை ஒரு மற்றொரு கோப்பில் இன்செர்ட் செய்யும்படியான Block ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்பொழுது, ஒரு புதிய Drawing File ஐ திறந்து, அதன் Command Window வில் MINSERT என்ற கட்டளையை கொடுத்து, Number of Row – 1 எனவும், Number of Columns – 2 எனவும் Specify distance between columns – 0 எனவும் கொடுத்து insert செய்து கொள்ளுங்கள்.

கீழே உள்ள கட்டளை வரிகளை கவனிக்கவும். (NEW BLOCK என்பது wblock கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட Drawing File ஆகும்)

Command: MINSERT
Enter block name or [?] : NEW BLOCK

Units: Inches Conversion: 1.0000
Specify insertion point or [Basepoint/Scale/X/Y/Z/Rotate]:
Enter X scale factor, specify opposite corner, or [Corner/XYZ] <1>:
Enter Y scale factor :

Specify rotation angle <0>:

Enter number of rows (—) <1>: 1

Enter number of columns (|||) <1>: 2

Specify distance between columns (|||): 0

இந்த கோப்பை தேவையான பெயரில் சேமித்துக் கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.
இந்த முறையில் உருவாக்கப்படும் வரைபடத்தை Explode செய்ய முடியாது.

எடிட் செய்ய முடியாது.
பிரிண்ட் எடுக்கலாம்.
அளவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த வழி உங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த ட்ரிக்கை கண்டறிய என்னை யோசிக்க வைத்த நண்பர் திரு. ஆஷிக் அவர்களுக்கு நன்றி!

Prevent/Protect copy, edit your AutoCAD drawings

AutoCAD Tricks – ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு டிராயிங் ஃபைலை எந்த வடிவில் மாற்றினால் நல்லது?

Posted in AutoCAD Tricks by suryakannan on ஜூன் 18, 2009
வழக்கமாக ஆட்டோ கேடில் நாம் ஒரு வரைபடத்தை உருவாக்கி சேமிக்கும் பொழுது அது DWG கோப்பாக இருக்கும். இந்த கோப்பு ஆட்டோ கேட் மென்பொருள் உள்ள கனினியில் மட்டுமே திறக்கும் படியாக இருக்கும்.

சில சமயங்களில் நமது வாடிக்கையாளருக்கு ஒரு டிராயிங்கை மின் அஞ்சல் செய்யும்படி இருக்கும். அதேவேளை அவரது கணினியில் ஆட்டோ கேட் மென் பொருள் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஆட்டோ கேட் உபயோகிக்க தெரியாதவராக இருக்கலாம்.

இதற்கு நம்மில் பலர் உபயோகிக்கும் வழி, அந்த கோப்பை JPG or Tiff கோப்பாக மாற்றி அனுப்புவது. ஆனால் இந்த முறையில் மாற்றப்படும் படங்கள் அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை அத்தோடு Background colour கருப்பு நிறமாக இருப்பதால், படத்தை பார்ப்பவருக்கும் ஒரு வித சலிப்பை தட்டும் விதமாக இருக்கும். பெரிய வரைபடமாக இருந்தால் அதை Zoom in / Zoom out செய்யும் பொழுது படத்தின் தரம் மிகவும் மோசமானதாக இருப்பதுடன். அதில் ஒரு Proffessional Touch இருக்காது. PDF கோப்பாக மாற்றுவதற்கும் நம்முடைய கணினியில் வசதி இருக்க வேண்டும்.

இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க..,

விண்டோசில் WMF (Windows Meta File) என்ற வடிவம், அனைத்து கணினியிலும் திறக்கக் கூடியதாகவும் (Windows Picture and Fax viewer), எவ்வளவு பெரிதாக்கினாலும் தரம் குறையாமல் இருக்கும்.

வழக்கமாக ஆட்டோ கேடில் டிராயிங் ஏரியா கருப்பு நிறமாக இருக்கும். இதை வெள்ளை நிறமாக மாற்றுவோம்.

Tools menu விற்கு சென்று Options கிளிக் செய்யவும். இதில் Display tab-ல் Colours பட்டனை கிளிக் செய்து Window Element – இன் கீழ் Model Tab Background என்று இருப்பதில் நிறத்தை Black இற்கு பதிலாக White ஐ தேர்வு செய்து கொள்ளவும். Apply&Close மற்றும் Apply பிறகு Close கொடுத்து விடவும். இப்பொழுது உங்கள் டிராயிங் ஏரியா வெண்மையாக மாறியிருக்கும்.

இப்பொழுது Command Window வில் wmfout என்ற கட்டளையை கொடுத்து என்டர் செய்து, கோப்பின் பெயரை கொடுத்து, பிறகு டிராயிங் ஏரியாவை தேர்வு செய்து என்டர் கொடுத்தால் போதுமானது.

WMF கோப்பு ரெடி! இனி இந்த கோப்பு எல்லா கணினியிலும் ஆட்டோ கேட் துணையின்றி திறக்கும்படியாக இருக்கும்.

மேலே குறிப்பிட்ட வழியை பின்பற்றி டிராயிங் ஏரியாவின் நிறத்தை பழையபடி கருப்பாக மாற்றிவிடவும்.

இந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் தொடர்ந்து இடலாம் என கருதுகிறேன். (வரவேற்பு இருந்தால்… உங்களுக்கு உபயோகமாக இருந்தால்)