சூர்யா ௧ண்ணன்

ஃபேஸ்புக் சாட்டில் ஒரு சில நண்பர்களிடமிருந்து மட்டும் ஒளிந்துகொள்ள

Posted in Bing Tips, Facebook, Firefox Tips and Tricks, Google Chrome tricks by suryakannan on ஓகஸ்ட் 24, 2010
ஃபேஸ்புக்கில் எப்பொழுதெல்லாம் நீங்கள் லாகின் செய்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுக்காகவே காத்திருந்தது போல, Hi, How are you என நீங்கள் விரும்பாத நண்பர் சாட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறாரா? 
இது போன்ற ஒரு சில தொல்லைதரும் நண்பர்களுக்கு மட்டும் நீங்கள் offline -இல் இருப்பது போன்று தோன்றவைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் உங்கள் Facebook கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். பிறகு இடதுபுற பேனில் உள்ள Friends லிங்கை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது வலதுபுறம் வந்துள்ள Create List பொத்தானை அழுத்துங்கள்.

இப்பொழுது திறக்கும் Create List வசனப் பெட்டியில் ஏதாவது பெயரை கொடுங்கள். (Offline Friends)
Offline Friends என்ற பெயரில் ஒரு புதிய லிஸ்ட் உருவாகியிருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தொல்லைதரும் நண்பர்களை இணைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது Facebook chat ஐ திறந்து கொள்ளுங்கள். 
இங்கு Offline Friends லிஸ்டிற்கு நேராக உள்ள சிறிய பச்சை  பொத்தானை க்ளிக் செய்து Offline மோடிற்கு மாறிக்கொள்ளலாம். 
இனி இவர்களின் தொல்லை உங்களுக்கு இருக்காது.

.

Advertisements

Bing தேடுபொறியில் தோன்றும் படங்களை சேமிக்க

Posted in இணையம் டிப்ஸ், Bing Tips, Computer Tricks by suryakannan on ஓகஸ்ட் 11, 2010
Google, Yahoo போல Bing தேடுபொறியும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேடுபொறியில், முதல் பார்வையிலேயே அனைவரையும் கவர்வது இதன் பின்புலத்தில் உள்ள அழகான படங்கள்தான். 
இது போன்ற படங்களை நமது கணினியில் தரவிறக்கி கொண்டால், பிறகு இதை சுவர் தாளாகவோ, அல்லது மற்ற உபயோகத்திற்கோ வைத்துக் கொள்ளலாம் என பலரும் யோசித்திருப்பார்கள். ஆனால் இதை மற்ற தளங்களில் உள்ளது போல, வலது க்ளிக் செய்து சேமிக்க முடியாது. இதற்காக ஒரு சில கருவிகள் பயன்படுகின்றன. ஆனால் இவற்றில் எதையும் பயன்படுத்தாமல், இந்த படங்களை நெருப்பு நரி உலாவியில் எப்படி சேமிப்பது என்பதை பார்க்கலாம். 
முதலில் உங்கள் நெருப்பு நரி உலாவியில் Bing தளத்திற்கு செல்லுங்கள். தளம் முழுவதுமாக திறந்த பிறகு, Tools க்ளிக் செய்து Page Info செல்லுங்கள்.
இப்போது திறக்கும் விண்டோவில் Media tab ஐ க்ளிக் செய்து, சரியான Bing பின்புல படத்தின் கோப்பை தேர்வு செய்து, கீழே உள்ள Save as பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 
இனி எங்கு சேமிக்க வேண்டும் என்பதை கொடுத்துவிட்டால் போதுமானது. அவ்வளவுதான்.