சூர்யா ௧ண்ணன்

பிளாக்கர் டிப்ஸ்: உங்கள் ப்ளாக்-ஐ குறித்த மேலதிக தகவல்கள்

Posted in Blogger Backup, Blogger Tips N Tricks by suryakannan on ஜூலை 31, 2010
நமது பிளாக்கை குறித்தான மேலதிக தகவல்களை பெற கூகிள் அனலிடிக்ஸ் வசதியை பயன்படுத்தி வந்தோம். இந்த வசதியை பயன்படுத்தி, நமது பதிவுகளுக்கான வாசகர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வளவு? எந்த தளத்தின் மூலமாக எவ்வளவு டிராபிக், குறிப்பிட்ட ஒரு இடுகையை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? எந்த உலாவி, எந்த இயங்குதளம், எந்த குறிச்சொல்லை வைத்து தேடி நமது பிளாக்கை அடைந்திருக்கிறார்கள் என்பது போன்ற பல உபயோகமான தகவல்களை பெற்று வந்தோம். 
இந்த வசதி சமீப காலமாக Blogger இலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பலரும் அறிந்த ஒன்றாகும். இது கூகிள் அனலிடிக்ஸ் ஐ விட எந்த வகையில் பயனுள்ளது? என்று பார்க்கும் பொழுது, ஒரு முக்கியமான வசதியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. வழக்கமாக நமது ப்ளாக்கிற்கு நாம் ஒரே அடைப்பலகையை வைத்து நாம் திருப்தி அடைவதில்லை, அவ்வப்பொழுது நமது அடைப்பலகையை நாம் நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதுண்டு. 
கூகிள் அனலிடிக்ஸ் வசதியை நமது பிளாக்கில் பயன்படுத்த, அந்த தளத்தில் நமது ப்ளாக்கிற்காக, வழங்கப்படும் HTML code னை நமது அடைப்பலகை Code -ல் இணைக்க வேண்டும். அதன் பிறகே நமது ப்ளாக் track செய்யப்படும். நாம் ஒவ்வொரு முறையும் அடைப்பலகையை மாற்றும் பொழுதும் மறக்காமல் இந்த கோடை இணைக்க வேண்டியது அவசியம். ஆனால் ப்ளாக்கரில் தரப்பட்டுள்ள இந்த வசதியில் நமக்கு இந்த தொல்லை இல்லை. 
இந்த வசதியை பெற, பலரும் வழக்கமாக செல்லும் http://www.blogger.com தளத்திற்கு செல்லக் கூடாது. அதற்கு மாறாக, http://draft.blogger.com தளத்திற்கு செல்லுங்கள்.

அங்கு Make Blogger in Draft my default dashboard என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். புதிதாக வந்துள்ள Stats என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் திரையில் உங்களது அந்த குறிப்பிட்ட பிளாக்கின் டிராபிக் தகவல்கள் அனைத்தையும் Overview, Posts, Traffic Sources & Audience ஆகிய டேப்களில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

       
இதில் Audience டேபில் சென்று நமது ப்ளாக் எந்தெந்த உலாவிகளில் எத்தனை சதவீதம் பேர் பார்க்கிறார்கள் என்ற தகவலை தெரிந்து கொண்டு, அதற்கேற்றார்போல, நமது அடைப்பலகையை மாற்றியமைக்க சௌகரியமாக இருக்கும்.

இந்த வசதி பிளாக்கர் கணக்கிலேயே உள்ளது என்பதனால் இதற்காக எந்த HTML Code ஐயும் நமது அடைபலகையிலோ அல்லது விஜிட்டிலோ இணைத்துக் கொள்ள அவசியமில்லை.

. 

Advertisements

அடடா வடை போச்சே! – Blogger Backup – இலவச கருவி

Posted in Blogger Backup, Blogger Tips N Tricks by suryakannan on ஜூலை 9, 2010
ஒரு பதிவராக நமது பிளாக்கை பத்திரமாக வைத்துக் கொள்வது சில சமயங்களில் சற்று சிரமமான காரியம்தான். நமது ஒவ்வொரு இடுகைகளும் நமது எண்ணங்களின், சிந்தனைகளின், ஆராய்ச்சிகளின் வெளிப்பாடாக உள்ளது என்பதும், இவையனைத்தும் நமது அந்தரங்க டைரியை விட மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்பதனையும் எவராலும் மறுக்க முடியாது. 
உங்கள் பிளாக்கில் நூற்றுக் கணக்கில் இடுகைகளை வைத்திருப்பீர்கள், திடீரென ஒரு நாளில் இவையனைத்தும் தொலைத்து விட்டு அடடா என் பிளாக்கை காணோமே.. இடுகைஎல்லாம் போச்சே என்று புலம்பி கொண்டிருப்பது சிலருக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. 
இதற்கு ஒரு நல்ல தீர்வாக Blogger Backup எனும் சுதந்திர இலவச மென்பொருள் அமைந்துள்ளது ஒரு வரப்பிராசாதம் தான். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)
இந்த சிறிய மென்பொருள் கருவியை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு இதனை திறந்து, 
 
Available Blogs என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Add/Update/Remove blog என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
இனி Log into Blogger to get and add your blogs டேபில் உங்கள் பிளாக்கர் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து கீழே உள்ள பட்டனை க்ளிக் செய்யுங்கள். அல்லது OR Manually add or edit a Blogger blog டேபை க்ளிக் செய்யுங்கள். (நான் கீழே உள்ள விளக்கப் படங்களில் இரண்டாவது முறையை கொடுத்துள்ளேன்.) 
இரண்டாவது வழியில்Blog Title/Name, Blogger Blog URL ஆகியவற்றை கொடுங்கள், Blogger Feed URL தெரிந்தால் கொடுங்கள், இல்லையெனில் Get Feed URL பட்டனை அழுத்தி பெற்றுக்கொண்டு, Add/Update Blog பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 
இனி அடுத்த திரை உங்கள் ப்ளாக் விவரங்களை காட்டும், இதில், உங்கள் வன்தட்டில் எந்த ட்ரைவில் உள்ள ஃபோல்டரில்  சேமிக்க வேண்டும் என்பதை கொடுங்கள். மேலும் பின்னூட்டங்களை சேமிக்க வேண்டுமெனில், Save Comments check box ஐ டிக் செய்யுங்கள். இப்படி சேமிக்கும் இடுகைகளை ஒரே கோப்பில் சேமிக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு இடுகைக்கும் ஒவ்வொரு கோப்பை உருவாக்க வேண்டுமா என்பதை Save posts as format என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலதிக விவரங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி மாறிக் கொண்டு Backup posts என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 
இப்பொழுது உங்கள் பிளாக்கில் உள்ள ஒவ்வொரு இடுகைகளும், பின்னூட்டங்களும் Backup ஆக துவங்கும். இது அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை, எனது பிளாக்கில் 240 க்கு மேற்பட்ட இடுகைகளை Backup எடுக்க ஐந்து நிமிடங்கள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. 
 
இப்படி பேக்கப் எடுக்கும் பொழுது உங்கள் ஒவ்வொரு இடுகைகளும் ஒவ்வொரு XML கோப்புகளாக உங்கள் கணினியில் சேமிக்கப் படுகிறது. 
அவ்வளவுதான்! இனி எப்பொழுதாவது உங்கள் இடுகைகளை தொலைத்து விட்டு ‘அடடா வடை போச்சே!.. என்று தலையில் கை வைப்பதை விட்டுவிட்டு மௌஸில் கை வைத்து, இதே மென்பொருள் கருவியை பயன் படுத்தி உங்கள் இடுகைகளை Restore செய்து கொள்ளுங்கள்.   

Blogger Backup தரவிறக்க 
.