சூர்யா ௧ண்ணன்

மைக்ரோசாப்ட் வோர்ட் – மிகவும் அவசியமான, ஆச்சர்யமான ட்ரிக்

மைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டை நம்மில் பலர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். அவரவர் தேவைக்கு ஏற்றபடி, வேர்டு டாக்குமெண்டில் புகைப்படங்கள் மற்றும் பிறப் படங்களை  டெக்ஸ்ட்களுக்கு இடையில் அங்காங்கே இணைத்திருப்போம். அவற்றில் பெரும்பாலான படங்கள் அதனுடைய உண்மையான அளவிலிருந்து பெரிதாக்கியோ அல்லது சிறிதாக்கியோ இணைக்கப்பட்டிருக்கும். 
இது போன்ற வேர்டு கோப்புகளில் உள்ள படங்களை மட்டும் அதனுடைய உண்மையான அளவில் தனித்து திரும்ப பெற, அவற்றில் உள்ள டெக்ஸ்ட்களை  மட்டும் தனித்துப் பெற, இதில் எம்பெட் செய்யப்பட்ட கோப்புகளை தனித்துப் பெற, மிக முக்கியமாக மேலே சொன்ன அனைத்தையும் அந்த குறிப்பிட்ட வேர்டு கோப்பை திறக்காமல் செய்ய முடியுமா? (வேர்டு 2007)  எனில் முடியும். விளக்கத்தை மேலும் படியுங்கள்.    
மைக்ரோசாப்ட் வோர்டு 2007 கோப்பின் extension – .Docx என்பதை நாமறிவோம். ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம், இது xml கோப்புகளை உள்ளடக்கிய ஒரு Compressed file என்பதுதான். சரி! அப்படி என்னதான் ஒரு வேர்டு கோப்பிற்குள் இருக்கும் என்பதை கொஞ்சம் நுணுக்கமாக பார்க்கலாம். 
முதலில் இந்த வேர்டு கோப்பை பாருங்கள். இதில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை கொண்டுள்ளது. 
இந்த வேர்டு கோப்பை வலது க்ளிக் செய்து 7-Zip எனும் Compress utility -இல் Open Archive என்பதை க்ளிக் செய்கிறேன். 
இப்பொழுது இந்த கோப்பின் உள்ளே வேறு என்னென்ன கோப்புகள் மற்றும் கோப்புறைகள் உள்ளன என்பதை பாருங்கள். (ஆச்சர்யமாக இருக்கிறதா?) 
இப்பொழுது இதிலுள்ள Word ஃபோல்டரை திறவுங்கள். அதற்குள்ளே உள்ள Media ஃபோல்டரை ட்ராக் அன்ட் ட்ராப் செய்தோ அல்லது extract செய்தோ சேமித்துக் கொள்ளுங்கள். 
இதன் மூலமாக அந்த குறிப்பிட்ட கோப்பினுள் இணைக்கப்பட்டிருந்த படங்கள் அனைத்தும் அவற்றின் உண்மையான அளவுகளில் கிடைக்கும். மேலும் இந்த Word ஃபோல்டருக்குள் உள்ள document.xml என்ற கோப்பை Notepad++ போன்ற கருவிகளில் திறக்க, நமக்கு அதிலுள்ள plain text மட்டும் தனித்து கிட்டும். 
இந்த வேர்டு கோப்பில் எம்பெட் செய்யப்பட்டுள்ள (OLE Objects) பிற கோப்பு வகைகள் (PDF, XLS,DWG) அனைத்தும் embeddings ஃபோல்டருக்குள் .bin கோப்புகளாக சேமிக்கப் பட்டிருக்கும் (உதாரணமாக OleObject1.bin, OleObject2.bin என..)  என்பதனால் அந்த கோப்புகளை சரியாக இனங்கண்டு அதற்கேற்ற extension க்கு பெயர் மாற்றம் செய்தால் அந்த கோப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம். 
 
இதே முறையில் வேர்டு மட்டுமின்றி Excel, Powerpoint கோப்புகளிலும் பிரித்தெடுக்க முடியும் என்பது சந்தோஷமான செய்தி. 
 
7-Zip தரவிறக்க 
 
 
.
Advertisements

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி

Posted in Excel, MS Office Tips by suryakannan on ஜூன் 30, 2010
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பை பயன் படுத்துபவர்கள், குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கணித சமன்பாடுகளை வேர்டு போன்ற பயன்பாடுகளில்  உபயோகிக்க சற்றே சிரமப் பட்டிருக்கிறார்கள். 
இவர்களது இந்த சிரமத்தை மனதில் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சியை, தனியாக வழங்கி வருகிறது. 
இதனை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, புதியதாக ஒரு ரிப்பன் தோன்றியிருப்பதை கவனிக்கலாம். இதிலுள்ள வசதிகளை பயன்படுத்தி எளிதாக கணித சமன்பாடுகளை அமைக்க முடியும்.
 
மேலும் இதன் பயன் பாடுகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பார்த்த பொழுது, 
சமன்பாடுகளுக்கு தீர்வு காண்பது போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம். 
இதிலுள்ள Equation Wizard மிகவும் தரமுள்ளதாக அறியவருகிறது. 
மொத்தத்தில் இது கணிதப் புலிகளுக்கு ஒரு நல்லத் தீனியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 
Microsoft Math தரவிறக்க
இது ஒரு நீட்சி மட்டுமே!, இது தவிர மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Unveils Microsoft Math என்ற மென்பொருள் இதை விட சிறப்பாக உள்ளது. ஆனால் இதன் விலை $20.

இந்த மென்பொருள் கணித மாணவர்கள் தங்கள் அசைன்மென்ட் ஐ சிறப்பாக உருவாக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

.