சூர்யா ௧ண்ணன்

இணைய பாதுகாப்பு: நண்பர்கள் கணினியில் நீங்கள் பணிபுரியும்பொழுது

Posted in Google Chrome tricks, suryakannan, System tools, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 29, 2010
சில தவிர்க்க முடியாத சமயங்களில் உங்கள் நண்பரது கணினியில் நீங்கள் பணிபுரிய வேண்டிய சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. அவசரமாக மின்னஞ்சல்  பார்க்கவோ அல்லது இணையத்தில் வேறு ஏதாவது தகவல்களை பார்க்கவோ வேண்டியிருக்கலாம். நீங்களும் பணி முடித்து அவரது கணினி அல்லது மடிக்கணினியை அவரிடம் ஒப்படைத்து விடுகிறீர்கள்.
மற்றொரு இடுகையில் நான் சொன்னது போல யாரை நம்ப முடியும்? நீங்கள் சென்றபிறகு, நீங்கள் பயன்படுத்திய உலாவியை திறந்து, நீங்கள் சென்ற தளங்களின் விவரங்களை பார்ப்பது, உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறக்க முயல்வது  (தவறுதலாக ஏதேனும் தளத்தில் லாக்அவுட் செய்துவிட மறந்தால் அவ்வளவுதான்.) என ஒரு சில குறுக்கு புத்திகாரர்களிடமிருந்து நீங்கள் எவ்வாறு தப்பலாம்? 
கூகிள் க்ரோம் உலாவியில் இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது. அதுதான்  Incognito mode எனும் private browsing. இந்த முறையில் நாம் இணையத்தில் உலாவும் பொழுது,  Browser History, Search History மற்றும் கூகீஸ் அந்த கணினியில் சேமிக்கப் படுவதில்லை. எனவே உங்கள் நண்பருக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் தவிர்க்கலாம். 
இதற்குமேல் நண்பர்களது அல்லது பொது கணினிகளில் Google Chrome உலாவியில் பணிபுரியும்பொழுது, Tools பட்டனை க்ளிக் செய்து, மெனுவில்  New incognito window. ஐ க்ளிக் செய்து Private Browsing துவங்கலாம். 
   
அல்லது Ctrl+Shift+N ஷார்ட் கட் கீகளை அழுத்தியும் துவங்கலாம்.  இவ்வாறு துவங்கும் பொழுது, முதல் முறை கீழே உள்ளது போன்ற செய்தி வரும்.

இந்த வகையில் க்ரோம் பயன்படுத்தும் பொழுது உலாவியில் ஏற்கனவே நிறுவியுள்ள நீட்சிகள் அனைத்தும் முடக்க பட்டிருக்கும். தேவையான நீட்சிகளை நீங்கள் enable செய்து கொள்ளலாம். இப்படி Browsing துவங்கும் பொழுது, ஒரு புதிய ஐகான் இடது மூலையில் வந்திருப்பதை கவனிக்கலாம். 
ஏதாவது வலைப்பக்கத்தில் உள்ள லிங்குகளை மட்டிலும் இந்த மோடில் திறக்க, அந்த லிங்கில் வலது க்ளிக் செய்து Open link in incognito window. என்பதை க்ளிக் செய்தால் போதுமானது. 
ஹைலைட்:-
இந்த incognito முறையில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு ஜிமெயில் கணக்குகளில் நுழைந்து கொண்டு பணியாற்றலாம்.  
எனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட உலாவிகளை கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை.
.
Advertisements

கூகிள் vs கூகிள் இன்ஸ்டன்ட்

Posted in இணையம் டிப்ஸ், ஜிமெயில் டிப்ஸ், google buzz tricks, Google Chrome tricks by suryakannan on செப்ரெம்பர் 10, 2010
இணைய தேடியந்திரத்தில் முக்கிய பங்காற்றிவரும் கூகிள் நிறுவனத்தின் கூகிள் இன்ஸ்டன்ட்! நீங்கள் சர்ச் பாக்ஸில் டைப் செய்ய செய்ய அதற்கான தேடுதல் முடிவுகள் உடனடியாக திரையில். இது தற்சமயம்   US, UK, France, Germany, Italy, Spain மற்றும்  Russia ஆகிய நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 

http://www.youtube.com/v/Wx0UNFtwWg0?fs=1&hl=en_US

இன்னும் மேலதிக விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

.

ஜிமெயில்: ஒரு அவசியமான ட்ரிக்!

ஜிமெயில் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு முக்கிய காரணமே, மற்ற மின்னஞ்சல் சேவைகளைக் காட்டிலும் இதிலுள்ள அதிகப்படியான வசதிகளும், புதிதுபுதிதாக பல வசதிகளை வழங்கிவரும் கூகுளின் சேவையுமே ஆகும். 
ஜிமெயிலை அனைவரும் ஒரே விதத்தில் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக ஒரு சிலர் தங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையுமே உடனடியாக படித்து விடுவது வழக்கம். மற்றும் சிலர் வருகின்ற மின்னஞ்சல்களில் மிகவும் அவசியமானவற்றை மட்டிலும் படித்துவிட்டு, மற்றவைகளை படிக்காமலேயே Inbox -ல் விட்டுவிடுவது, அல்லது ஏதாவது Label லில் சேமித்து வைப்பது என பல விதங்களில் பயன்பாடு மாறுபடுகிறது. 
இப்படி படிக்காமலேயே இன்பாக்ஸில் விட்டு வைத்து வரும்பொழுது சில நாட்கள் கழித்து Unread messages 28, 60 என ஒரு சிலரது ஜிமெயில் கணக்கில் நூற்றுக்கணக்கில் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். 
 
ஒருவேளை இவையனைத்தையும் டெலிட் செய்வதாக இருந்தால் வழி கொஞ்சம் சுலபம்தான். Drop down மெனுவிலுள்ள லிஸ்டில் Unread என்பதை தேர்வு செய்தால் Unread மெயில்கள் அனைத்தும் தேர்வாகிவிடும்,
 
Delete பொத்தானை அழுத்தி நீக்கிவிடலாம். 
 
ஆனால் இப்படி தேர்வு செய்யும் பொழுது, Unread மெயில்கள் மட்டும் தனித்து திரையில் தெரியாது, ஏற்கனவே படித்த மெயில்களுடன் கலந்து தேதி வாரியாகவே தோன்றும். இதனால் Unread மெயில்களை  சில சமயங்களில் பல திரைகளில் தேடவேண்டியிருக்கும். 
அப்படியானால் கடந்த நாட்களில் படிக்காத மின்னஞ்சல்களை மட்டும் வரிசையாக பட்டியலில் பார்த்து, தேவையானவற்றை வாசித்தும், தேவையற்ற மின்னஞ்சல்களை delete செய்யவும் ஏதேனும் வழியிருக்கிறதா? இதற்கான ஒரு சிறிய ட்ரிக் ஒன்றை பார்க்கலாம். 
உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, மேலே உள்ள Search Mail பெட்டியில் is: என டைப் செய்யுங்கள். 
திறக்கும் லிஸ்ட் பாக்ஸில் is:unread என்பதை தேர்வு செய்யுங்கள். (அல்லது டைப் செய்து கொள்ளலாம்) இப்பொழுது உங்கள் ஜிமெயில் கணக்கில் நீங்கள் படிக்காத அனைத்து மின்னஞ்சல்களும் வரிசையாக பட்டியலில் கிடைக்கும்.
ஆனால் இந்த முறையில் நமக்கு இன்பாக்ஸில் உள்ள Unread மெயில்கள் மட்டுமின்றி, நீங்கள் உருவாக்கி சேமித்து வைத்துள்ள label களில் உள்ள Unread மெயில்களும் பட்டியலிடப்படும். ஆனால் நமக்கு inbox -இல் உள்ள Unread  மெயில்கள் மட்டும் பார்க்க வேண்டுமெனில், அதே கட்டளையோடு label:inbox என கொடுத்தால் போதுமானது. (is:unread label:inbox)
இப்பொழுது உங்கள் இன்பாக்ஸில் உள்ள படிக்காத மெயில்கள் மட்டும் பட்டியலில் காணக் கிடைக்கும்.      
.       

ஃபேஸ்புக் சாட்டில் ஒரு சில நண்பர்களிடமிருந்து மட்டும் ஒளிந்துகொள்ள

Posted in Bing Tips, Facebook, Firefox Tips and Tricks, Google Chrome tricks by suryakannan on ஓகஸ்ட் 24, 2010
ஃபேஸ்புக்கில் எப்பொழுதெல்லாம் நீங்கள் லாகின் செய்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுக்காகவே காத்திருந்தது போல, Hi, How are you என நீங்கள் விரும்பாத நண்பர் சாட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறாரா? 
இது போன்ற ஒரு சில தொல்லைதரும் நண்பர்களுக்கு மட்டும் நீங்கள் offline -இல் இருப்பது போன்று தோன்றவைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் உங்கள் Facebook கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். பிறகு இடதுபுற பேனில் உள்ள Friends லிங்கை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது வலதுபுறம் வந்துள்ள Create List பொத்தானை அழுத்துங்கள்.

இப்பொழுது திறக்கும் Create List வசனப் பெட்டியில் ஏதாவது பெயரை கொடுங்கள். (Offline Friends)
Offline Friends என்ற பெயரில் ஒரு புதிய லிஸ்ட் உருவாகியிருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தொல்லைதரும் நண்பர்களை இணைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது Facebook chat ஐ திறந்து கொள்ளுங்கள். 
இங்கு Offline Friends லிஸ்டிற்கு நேராக உள்ள சிறிய பச்சை  பொத்தானை க்ளிக் செய்து Offline மோடிற்கு மாறிக்கொள்ளலாம். 
இனி இவர்களின் தொல்லை உங்களுக்கு இருக்காது.

.

கூகிள் க்ரோம் – மிகப் பயனுள்ள நீட்சி!

Posted in கூகிள் க்ரோம், Google Chrome tricks by suryakannan on ஓகஸ்ட் 5, 2010

கூகிள் க்ரோம் உலாவியில், நாம் இணையத்தில் ஆங்கில கட்டுரைகளை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருள் தெரியவில்லை எனில் அதற்காக மற்றொரு டேபில், இதற்க்கான பொருளை தேடவேண்டிய அவசியம் இனி இல்லை. 

  

கூகிள் க்ரோமிற்க்கான Google Dictionary நீட்சி இந்த பணியை மிகவும் எளிதாக்குகிறது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இதனை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, உங்கள் க்ரோம் உலாவியில் address bar க்கு அருகில் Dictionary icon புதிதாக வந்திருப்பதை காணலாம். 
இனி தேவையான வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, பொருள் தெரியாத வார்த்தையை தேர்வு செய்து இந்த ஐகானை கிளிக்கினால், விளக்கம் அதே திரையில் கிடைக்கும். 


  


அல்லது தேவையான வார்த்தையின் மீது இரட்டை க்ளிக் செய்தால் அந்த வார்த்தையையொட்டி, அதன் விளக்கம் கிடைக்கும்.


   
இந்த நீட்சியின் வசதிகளை மாற்றியமைக்க, அட்ரஸ் பார் அருகிலுள்ள ஐகானை க்ளிக் செய்து, அங்கு Extension options சென்றால் போதுமானது. Google Chrome Dictionary Extension தரவிறக்க