சூர்யா ௧ண்ணன்

வலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய

Posted in Computer Tricks, MS Office Tips by suryakannan on செப்ரெம்பர் 23, 2010
வலைபக்கங்களில் நாம் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, நமக்கு தேவையான சில விபரங்கள் Table வடிவில் இருக்கலாம்.

 

இவற்றை நாம் Excel 2007 பயன்பாட்டில் தேவைப்படும் பொழுது வலைப்பக்கத்திலிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யும்பொழுது, டேபிள் வடிவில் அல்லாமல், ஒரு அமைப்பில்லாமல் பேஸ்ட் ஆகியிருப்பதை கவனிக்கலாம். 

இது போன்ற சமயங்களில், இணையத்தில் நமக்கு தேவையான விவரங்கள் அடங்கிய டேபிளை Excel 2007 -இல் எப்படி இறக்குமதி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான வலைப்பக்கத்திற்கு சென்று, குறிப்பிட்ட டேபிள் உள்ள பக்கத்தின் url ஐ காப்பி செய்து கொள்ளுங்கள். Excel ஐ திறந்து கொண்டு Data டேபில் உள்ள Get External Data பகுதியில் உள்ள From Web பொத்தானை சொடுக்குங்கள்.

இப்பொழுது திறக்கும் New Web Query வசனப் பெட்டியில், அட்ரஸ் பாரில் காப்பி செய்து வைத்த url ஐ பேஸ்ட் செய்து Go பொத்தானை சொடுக்குங்கள்.   

   
இப்பொழுது அந்த url க்கான வலைப்பக்கம் Query திரையில் திறக்கும். இங்கு தேவையான Table க்கு மேற்புறமுள்ள மஞ்சள் நிற பெட்டியை க்ளிக் செய்வதன் மூலம் அந்த table ஐ தேர்வு செய்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டேபிள்களை தேர்வு செய்து கொள்ள இயலும்.   

Import பொத்தானை சொடுக்கிய பிறகு Excel sheet -இல் எந்த செல்லில் இந்த டேபிளை இருத்த வேண்டும் என்று தேர்வு செய்து கொண்டு, OK பொத்தானை சொடுக்குங்கள்.    

இதோ உங்களுக்கு தேவையான டேபிள் இப்பொழுது உங்கள் எச்செல் ஷீட்டில்.

.
Advertisements

பவர் பாய்ண்ட் டிப்ஸ் 2010 : லேசர் பாயிண்டர்

Posted in Computer Tricks, MS Office Tips, MS Project free training by suryakannan on செப்ரெம்பர் 22, 2010
மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பயன் படுத்தி பிரசண்டேஷன்களை ப்ரொஜெக்டரில், காண்பிக்கும் பொழுது, லேசர் பாயிண்டரை பயன் படுத்துவது வழக்கம். 
 
 சமயத்தில் லேசர் பாயிண்டர் நம்மிடம் இல்லையெனில், நமது மௌஸ் பாயிண்டரையே லேசர் பாயிண்டராக பயன்படுத்தும் வசதி மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் 2010 -இல் தரப்பட்டுள்ளது. 
பவர் பாயிண்டில் ஸ்லைடு ஷோவை உருவாக்கியபிறகு F5 கீயை அழுத்தியோ அல்லது From beginning, அல்லது From Current Slide பொத்தானை, Slide Show டேபிலிருந்து க்ளிக் செய்து  ஸ்லைடு ஷோவை துவக்குங்கள்.
ஸ்லைடு ஷோ ஆரம்பித்தவுடன், Ctrl கீ மற்றும் மௌஸ் இடது பட்டனை அழுத்துவதன் மூலமாக, சிவப்பு நிற லேசர் பாயிண்டரை திரையில் தோன்றவைக்க முடியும். 
 
இந்த வசதி 2010 பதிப்பில் மட்டுமே உண்டு. மேலும் இந்த லேசர் பாயின்டரின் நிறத்தை default ஆக உள்ள சிவப்பு நிறத்திலிருந்து வேறு நிறத்திற்கு மாற்ற, Slide show tab -இல் Set up Slide show பொத்தானை அழுத்துங்கள். 
இப்பொழுது திறக்கும் Set up show வசனப் பெட்டியில், Laser Pointer Color க்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் சிவப்பு, பச்சை அல்லது நீல நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம். 
 
.

பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை!

Posted in மென்பொருள் உதவி, MS Office Tips, suryakannan by suryakannan on செப்ரெம்பர் 21, 2010
எம்.எஸ் ஆஃபீஸ் 2007 அல்லது 2010 தொகுப்பு உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் மைக்ரோசாப்ட் OneNote பயன்பாடும் தானாகவே நிறுவப்பட்டிருக்கும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த பயன்பாட்டை உபயோகித்திருக்கிறோம்? 
OneNote என்பது ஏதோ ஒரு குறிப்பேடு போன்ற ஒரு மென்பொருள் என்றே பலரும் கருதி வருகிறோம். ஆனால் அதன் அதி முக்கிய பயன்பாட்டை அறிந்து கொண்டால் இது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிடும். 
வழக்கமாக நம்மில் பலர், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, இணைய முகவரி, விலாசம், பள்ளிப் பாடங்கள் பற்றிய குறிப்புகள், பொருட்களின் விலைக் குறிப்புகள், செலவு கணக்கு  மற்றும்  வேறு ஏதேனும் சிறு குறிப்புகள் ஆகியவற்றை ஏதேனும் ஒரு நோட்டு புத்தகத்தின் பக்கத்திலோ, அல்லது டைரி, நாட்காட்டி இவற்றில் எழுதி வைப்பது வாடிக்கை. இவையனைத்தையும் மைக்ரோசாப்ட் OneNote பயன்பாட்டில் எளிதாக பயன்படுத்தலாமே!
இதனுடைய சக்திவாய்ந்த தேடுதல் வசதி இதன் சிறப்பம்சம்.  இது மற்ற வேர்டு processor  போலல்லாமல், இதன் பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் க்ளிக் செய்து டைப் செய்யும் வசதி உண்டு. மேலும், இதில் டெக்ஸ்ட், படங்கள், டிஜிட்டல் கையெழுத்து, ஆடியோ வீடியோ ரெகார்டிங், OCR கன்வெர்ஷன் (இது குறித்தான எனது விரிவான இடுகையை Microsoft OneNote – உபயோகமான பயன்பாடு  பார்க்கவும்) நண்பர் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் இந்த OneNote பயன்பாடு பதிவர்களுக்கு எந்த அளவிற்கு பயன்படும் என்பதையும்  இதில் ஆடியோ வீடியோ ரெகார்டிங் வசதி குறித்தும் எழுதியிருந்த இடுகையை (1 நோட்) அறிந்தும் அறியாமலும்  பார்க்கவும். 
சரி இதில் இது தவிர வேறு என்ன பயன்பாடு உள்ளது என்று பார்க்கலாம். கணக்குகளை இதில் போட முடியும் என்பது சிறந்த விஷயம். One Note -இல் தேவையான் பகுதியில் க்ளிக் செய்து, உதாரணமாக 365*78= என டைப் செய்து என்டர் கொடுத்தால்,

உடனடியாக கணக்கு அதுவே போட்டுக் கொள்ளும்.

 கொஞ்சம் கடினமாக (7^8) * sqrt(1250) + 1798 = என்று கொடுத்துப் பார்த்தால் உடனடி பதில்

என்று வருகிறது.  அது மட்டுமின்றி, Insert tab இல் உள்ள Symbol பொத்தானை அழுத்தி தேவையான கணித மாறிலிகளை இணைத்தும் கணக்கு போட முடிகிறது. 

உதாரணமாக ,

இப்படி பல கணக்குகளை போடும் வசதியை நாம் Onenote -இல் பெறலாம். இதில் நாம் பயன்படுத்தக் கூடிய கணித குறியீடுகள்:
 
இன்னும் கடினமான கல்லூரி கணக்குகளை எளிதாக, இந்த OneNote மற்றும் பிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 /10 தொகுப்புகளில் பயன்படுத்துவது குறித்தான எனது மற்றுஒரு இடுகையை பார்க்கவும் (மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி  ) 

இது மாணவர்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

இந்த OneNote குறித்தான மேலதிக விவரங்களை மற்றொரு இடுகையில் பார்க்கலாம்.

Mouse Extender பயனுள்ள கருவி!

Posted in இணையம் டிப்ஸ், விண்டோஸ் ட்ரிக்ஸ், Computer Tricks, MS Office Tips by suryakannan on செப்ரெம்பர் 18, 2010
ஒரு சிலரது கணினி டெஸ்க்டாப்பில், வால்பேப்பரே தெரியாத அளவிற்கு கோப்புகளும், ஃபோல்டர்களும்,  ஷார்ட்கட்களும் நிறைந்திருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் எப்படி  டெஸ்க்டாப்பில் தேடி உடனடியாக ஒரு பயன்பாட்டின் ஷார்ட்கட்டையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட வேர்டு கோப்பையோ திறப்பார்கள் என்பது அருகில் இருந்து பார்த்தால்தான் தெரியும். சரி! இவர்களுக்கு பயன்படும் வகையிலும், 
அடிக்கடி உபயோகிக்கும் அப்ளிகேஷன்கள், உலாவிகள், கருவிகளை இன்னும் விரைவாக செயல்படுத்த ஏதாவது ஒழுங்கு படுத்தப்பட்ட வழிமுறை உண்டா? என யோசிப்பவர்களுக்கு பயன்படும் வகையிலும் அமைந்திருக்கும் ஒரு இலவச மென்பொருள் கருவி Mouse Extender! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 
இதனை கணினியில் நிறுவிக்கொண்டு, முதலில் இதனை செயல் படுத்துவதற்கான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். 
பிறகு இந்த கருவியை இயக்கி, நாம் அடிக்கடி உபயோகிக்கும் பயன்பாடுகள், உலாவிகள், அல்லது கோப்புகளை இதில் ட்ராக் அண்டு ட்ராப் செய்து கொள்ள வேண்டும். 
மேலும் இதில் இணைக்கும் பயன்பாடுகளுக்கு ஏற்றபடி Group களை உருவாக்கி அவற்றுள்ளும் இணைத்துக் கொள்ளலாம். 
அத்தோடு, தற்பொழுது, இயக்கத்திலிருக்கும் பயன்பாடுகளையும் இணைக்கும் வசதி இதிலுண்டு. 
 
 இந்த கருவியில் இவை மட்டுமின்றி அடிக்கடி உபயோகிக்கும் url ஐயும் இணைத்துக் கொள்ளலாம். 
மேலும் இதிலுள்ள ஒரு சிறந்த பயன்பாடு என்னவெனில், நீங்கள் ஏதாவது தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறீர்கள், அல்லது DVD பர்ன் செய்து கொண்டிருக்கிறீர்கள், உறக்கம் வேறு வருகிறது, இது முடியும் வரை காத்திருக்க முடியாது, என்று நினைக்கும் பொழுது, இந்த கருவியை பயன் படுத்தி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு (ஒரு நாள் வரையிலும் கூட) பிறகு கணினியை shut down / hibernate/ sleep வசதியை ஏற்படுத்திக் கொண்டு தூங்க செல்லலாம். 
இணைக்கப்பட்ட ஐகான்களை இதில் ட்ராக் அண்ட் ட்ரோப் செய்து வரிசை முறையை மாற்றியமைக்கலாம். 
   
Mouse Extender தரவிறக்க! 
.

விண்டோஸ் கால்குலேட்டரை Excel டூல்பாரில் இணைக்க

நாம் எச்செல் 2007 பயன்படுத்தி வரும்பொழுது, அதில் அவசர கணக்கு போட அடிக்கடி விண்டோஸ் கால்குலேட்டரை உபயோகிப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு முறையும் கால்குலேட்டரை ஸ்டார்ட் மெனுவிலோ, அல்லது டெஸ்க்டாப் ஷார்ட் கட்டிலோ திறந்து பணிபுரிவது நேர விரயமாகும். 
இந்த விண்டோஸ் கால்குலேட்டரை எக்சல் Quick Access Toolbar -இல் இணைக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம். 
எக்ஸ்செல் 2007 ஐ திறந்து கொண்டு மேலே உள்ள Customize Quick Access Toolbar ஐ க்ளிக் செய்யுங்கள். 
  
இப்பொழுது அந்த மெனுவில் உள்ள More Commands ஐ க்ளிக் செய்யுங்கள். திறக்கும் Excel options window வில் choose commands from என்பதற்கு கீழாக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Commands not in the Ribbon என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது வரும் பட்டியலில் Calculator ஐ க்ளிக் செய்து அருகிலுள்ள ADD பொத்தானை க்ளிக் செய்து, கீழே உள்ள OK பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
இனி அடிக்கடி உபயோகிக்க விண்டோஸ் கால்குலேட்டர் உங்கள் எக்ஸ்செல் Quick Access Toolbar -இல் க்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 
.

எம்.எஸ் ஆபீஸ்: படங்களை கையாள பயனுள்ள டிப்ஸ்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பயன்பாட்டை உபயோகித்து வருபவர்கள், தங்களது Word, Excel அல்லது Powerpoint கோப்புகளில் புகைப்படங்களை இணைக்கும் பொழுது, அந்த புகைப்படங்களை தேவையான அளவு crop செய்து கொள்வது, சிறப்பு எபக்ட்கள் ஆகியவற்றை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 
வழக்கம் போல Insert இற்கு சென்று தேவையான படத்தை உங்கள் டாக்குமெண்டில் இணைத்துக் கொள்ளுங்கள். 
இப்படி இணைக்கப்பட்ட ஒரு சாதாரண Bird ஐ Love Bird (!)ஆக்குவது எப்படி?   

ரிப்பன் மெனுவிலிருந்து Crop வசதியை எடுத்துக்கொண்டு படத்தை தேவையான அளவு crop செய்து கொள்ளுங்கள்.

இனி அதே Picture Tools மெனுவிலிருந்து Picture shape வசதியை க்ளிக் செய்து தேவையான வடிவத்தை (Heart) தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த படம் அதே வடிவில் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கலாம். 
மேலும் இந்த மெனுவில் உள்ள Picture Border, Picture effects போன்ற வசதிகளை பயன்படுத்தி படத்தை மேலும் மெருகூற்றலாம்.  
இனி நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்டில் Shadow, Bevel  போன்ற வசதிகளை பயன்படுத்தி  படங்களை அழகாக வடிவாக்க முடியும். 
   
.

பவர் பாயிண்ட் – ட்ரிக்

நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனையும் அதற்கான தீர்வும் உங்களுக்கும் பயன்படலாம் என்ற எண்ணத்தில்.. (இது பலரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும்.. அறியாத சிலருக்காக..)
அவருடைய பிரச்சனை என்னவென்று முதலில் பார்ப்போம். அவர் தனது கணினியில் பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன்   ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார். சுமார் 250 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக இன்செர்ட் செய்து உருவாக்கி கொண்டிருக்கும் பொழுது, முதல் 11 படங்களை இணைத்த பிறகு சேமித்ததோடு சரி, பிறகு சேமிக்க மறந்து போனார், இறுதியில் சேமிக்க முயன்ற போது, சிஸ்டம் ஹேங் ஆகி, கணினியை Reset செய்ய வேண்டி வந்தது. மறுபடியும் அந்த கோப்பை திறந்த போது  அந்த முதல் 11 படங்கள் மட்டுமே இருந்தது. அவர் கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்கும் மேலாக செய்த பணி அனைத்தும் பறிபோன கவலை ஒரு புறமும், இதை உடனடியாக முடித்து தனது மேலதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடியும் சேர்ந்து கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தார். 
முதலில் இந்த பிரச்னைக்கு ஞாபக மறதி தவிர வேறு என்ன காரணம் என்பதை பார்க்கலாம். 
அவர் தனது பவர்பாயிண்ட் கோப்பில் இணைத்த கோப்புகள் அனைத்தும் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டவை. 
அந்த புகைப்பட கோப்புகளின் அளவை சோதித்தபோது, சராசரியாக 3 MB ஆக இருந்தது. ஒரு படத்திற்கு 3 MB எனில் 250 படங்களுக்கு 750 MB. ஆக சராசரியாக அந்த பவர்பாயின்ட் கோப்பின் அளவு 750 Mb க்கும் அதிகமானது. இதன் காரணமாகவே இதை சேமிக்கும் பொழுது, ஹேங் ஆகி சேமிக்க முடியாமல் போனது. 
இதற்கு தீர்வாக முதலில் நாம் செய்ய வேண்டியது, அந்த புகைப்படங்களின் அளவுகளை குறைப்பது, இதற்காக உபயோகிக்கப் போகும் கருவி மைக்ரோசாப்ட்டின் Power Toys Image Resizer.  இந்த கருவியை கணினியில் நிறுவிய பிறகு, தேவையான அனைத்து புகைப்படங்களையும் தேர்வு செய்து, வலது க்ளிக் செய்து Resize Pictures ஐ க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில் Medium என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.

 

இனி புதிதாக உருவாக்கப்படும், அந்த புகைப்படக் கோப்புகளின் அளவை பார்த்தால்,
 
    3 MB இருந்த கோப்பின் அளவு வெறும் 69 KB யில் அடங்கி விட்டது. இப்பொழுது கோப்புகளின் அளவை குறைத்தாகிவிட்டது, இனி உடனடியாக பவர்பாயிண்ட்டில் அனைத்து புகைப்படங்களையும் விரைவாக இணைக்க வேண்டும். ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டிருப்பது வேலைக்கு ஆகாது.

மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட்டை (2007) திறந்து கொண்டு, Insert மெனுவில் உள்ள Photo Album க்ளிக் செய்து New Photo Album செல்லுங்கள்.

 

இங்கு இடது புறமுள்ள Insert picture from என்பதற்கு கீழாக உள்ள File/Disk பொத்தானை க்ளிக் செய்து, அளவு மாற்றப்பட்ட அனைத்து புகைப்பட கோப்புகளையும் தேர்வு (Ctrl+A) செய்து கொள்ளுங்கள்.

பிறகு, Picture Layout க்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில்  தேவையான வசதியை தேர்வு செய்து கொண்டு Create பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 

அவ்வளவுதான் சில நொடிகளில் கிட்டத்தட்ட 250 க்கும் மேலான புகைப்படங்களைக் கொண்ட பவர் பாயிண்ட் பிரெசென்டேஷன் தயார், அதுவும் வெறும் 15 MB அளவிற்குள்.

‘இதென்ன பெரிய விஷயமா?’   என்று சலித்துக் கொள்பவர்களும் ஓட்டு போடலாம்.

. 

மைக்ரோசாப்ட் வோர்ட் – மிகவும் அவசியமான, ஆச்சர்யமான ட்ரிக்

மைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டை நம்மில் பலர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். அவரவர் தேவைக்கு ஏற்றபடி, வேர்டு டாக்குமெண்டில் புகைப்படங்கள் மற்றும் பிறப் படங்களை  டெக்ஸ்ட்களுக்கு இடையில் அங்காங்கே இணைத்திருப்போம். அவற்றில் பெரும்பாலான படங்கள் அதனுடைய உண்மையான அளவிலிருந்து பெரிதாக்கியோ அல்லது சிறிதாக்கியோ இணைக்கப்பட்டிருக்கும். 
இது போன்ற வேர்டு கோப்புகளில் உள்ள படங்களை மட்டும் அதனுடைய உண்மையான அளவில் தனித்து திரும்ப பெற, அவற்றில் உள்ள டெக்ஸ்ட்களை  மட்டும் தனித்துப் பெற, இதில் எம்பெட் செய்யப்பட்ட கோப்புகளை தனித்துப் பெற, மிக முக்கியமாக மேலே சொன்ன அனைத்தையும் அந்த குறிப்பிட்ட வேர்டு கோப்பை திறக்காமல் செய்ய முடியுமா? (வேர்டு 2007)  எனில் முடியும். விளக்கத்தை மேலும் படியுங்கள்.    
மைக்ரோசாப்ட் வோர்டு 2007 கோப்பின் extension – .Docx என்பதை நாமறிவோம். ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம், இது xml கோப்புகளை உள்ளடக்கிய ஒரு Compressed file என்பதுதான். சரி! அப்படி என்னதான் ஒரு வேர்டு கோப்பிற்குள் இருக்கும் என்பதை கொஞ்சம் நுணுக்கமாக பார்க்கலாம். 
முதலில் இந்த வேர்டு கோப்பை பாருங்கள். இதில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை கொண்டுள்ளது. 
இந்த வேர்டு கோப்பை வலது க்ளிக் செய்து 7-Zip எனும் Compress utility -இல் Open Archive என்பதை க்ளிக் செய்கிறேன். 
இப்பொழுது இந்த கோப்பின் உள்ளே வேறு என்னென்ன கோப்புகள் மற்றும் கோப்புறைகள் உள்ளன என்பதை பாருங்கள். (ஆச்சர்யமாக இருக்கிறதா?) 
இப்பொழுது இதிலுள்ள Word ஃபோல்டரை திறவுங்கள். அதற்குள்ளே உள்ள Media ஃபோல்டரை ட்ராக் அன்ட் ட்ராப் செய்தோ அல்லது extract செய்தோ சேமித்துக் கொள்ளுங்கள். 
இதன் மூலமாக அந்த குறிப்பிட்ட கோப்பினுள் இணைக்கப்பட்டிருந்த படங்கள் அனைத்தும் அவற்றின் உண்மையான அளவுகளில் கிடைக்கும். மேலும் இந்த Word ஃபோல்டருக்குள் உள்ள document.xml என்ற கோப்பை Notepad++ போன்ற கருவிகளில் திறக்க, நமக்கு அதிலுள்ள plain text மட்டும் தனித்து கிட்டும். 
இந்த வேர்டு கோப்பில் எம்பெட் செய்யப்பட்டுள்ள (OLE Objects) பிற கோப்பு வகைகள் (PDF, XLS,DWG) அனைத்தும் embeddings ஃபோல்டருக்குள் .bin கோப்புகளாக சேமிக்கப் பட்டிருக்கும் (உதாரணமாக OleObject1.bin, OleObject2.bin என..)  என்பதனால் அந்த கோப்புகளை சரியாக இனங்கண்டு அதற்கேற்ற extension க்கு பெயர் மாற்றம் செய்தால் அந்த கோப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம். 
 
இதே முறையில் வேர்டு மட்டுமின்றி Excel, Powerpoint கோப்புகளிலும் பிரித்தெடுக்க முடியும் என்பது சந்தோஷமான செய்தி. 
 
7-Zip தரவிறக்க 
 
 
.

MS Project எளிதாக, இலவசமாக கற்றுக் கொள்ள

Posted in MS Office Tips, MS Project free training by suryakannan on ஜூலை 3, 2010
இந்த கணினி யுகத்தில் மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் என்ற பயன்பாடு, படித்து முடித்து, வேலை தேடுபவர்கள், தேடிப் பிடித்து  போய் படிக்கும் பயன்பாடுகளில் ஒன்று. 
இதனை இலவசமாக, எளிதாக (ஆங்கிலத்தில்) கற்றுத்தருகிறது ஒரு வலைப்பூ!   (சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). 
Project Management என்பது குறித்தான எளிய விளக்கங்களுடன் துவங்குகிறது பாடம். 
” For example, when you start thinking about moving an office, you probably realize that it can be quite complex. There are many dependencies, such as if you committed to be out of the current space by a certain date, you have to make sure you can go somewhere, ideally to your new space. If the new space is not ready, you have to find another temporary place and/or storage. If you cannot find a mover or schedule phone and other installations, you may need to renegotiate the exit date. If the new space is not entirely ready, you need to carefully plan where and how people will operate. As you can see, there is a lot of complexity in even a simple move. This is a project. Managing it like a project and in the right way will improve your chances for success. Projects require a disciplined yet flexible approach.”
ஒரு ப்ராஜெக்ட்டின் முக்கியத்துவத்தை படிப்படியாக விளக்கியபடி தொடருகிறது பாடம். புதிதாக டைம் லைன் ஐ உருவாக்குவது, Task ஒழுங்குபடுத்துவது,

  • Track progress
  • Critical Path Management
  • CPM/PERT

போன்றவற்றை  தெளிவாக படங்களுடன் விவரித்து வருகிறது. 
இதற்காக தனியாக பயிற்சிக்கு சென்று படிக்கவேண்டிய அவசியமின்றி நாமே சுயமாக இத்தளத்தின் உதவியோடு கற்றுக் கொள்ள முடியும். 

தளத்திற்கு செல்ல 
.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான வேதியல் நீட்சி

Posted in Computer Tricks, MS Office Tips by suryakannan on ஜூலை 1, 2010
எனது கடந்த இடுகையான “மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி” ஐ வாசித்த வேதியல் துறையில் பணியிலிருக்கும் நண்பர் ஒருவர், ‘கணிதத்திற்கு நீட்சி உள்ளது போல வேதியல் சமன்பாடுகள், வரைபடங்களை கையாள வேறு ஏதேனும் வழியுள்ளதா’   என்ற கேள்வி எழுப்பியிருந்தார். 
உள்ளது என்பதே, பதில்! 
வேதியல் சமன்பாடுகள் மற்றும் மூலக்கூறுகளின் வரைபடங்களை சிறந்த முறையில்  மைக்ரோசாப்ட் வேர்டு பயன்பாட்டில் உருவாக்க, வேதியல் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு தீர்வாக, Microsoft’s new Education Labs சமீபத்தில் வெளியிட்டுள்ள Chemistry Add-in for Word 2007 and 2010 (பீட்டா வடிவில்) அமைந்துள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த நீட்சியை தரவிறக்கி நிறுவும்பொழுது, Visual Studio Tools for Office 3.0 ஐ நிறுவ வேண்டும் என்ற செய்தி வரும். இந்த வசனப்பெட்டியில் Yes கொடுத்து நிறுவிக்கொள்ளுங்கள். 
இதை நிறுவிய பிறகு, உங்கள் வேர்டு 2007 ரிப்பன் மெனுவில் புதிதாக Chemistry மெனு தோன்றியிருப்பதை காணலாம். 
      
இந்த நீட்சியை பயன்படுத்தி வேதியல் சமன்பாடுகள், வரைபடங்களை   எளிதாக உருவாக்க இயலும் 
மூலக்கூறு வடிவம். 

இதற்கு மேல் வேதியல் துறையில் எனக்கு அறிவு இல்லாத காரணத்தினால், மேற்கொண்டு விளக்கமாக இந்த இடுகையை தொடர இயலவில்லை.   துறையை சார்ந்தவர்கள் இந்த வசதியை உபயோகித்து பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். 
(வேதியல் துறையை சாராதவர்களும் ஓட்டுப் போடலாம்.)
  Download Chemistry Add-in for Word 2007
.