சூர்யா ௧ண்ணன்

ஆன்லைனில் PAN Card ரூ. 94/- NRI – ரூ.744/- மட்டுமே

Posted in இணையம் டிப்ஸ், PAN CARD - ONLINE by suryakannan on ஜூலை 8, 2010
பத்து வருடங்களுக்கு முன்பாக நான் PAN Card பெற முயன்ற பொழுது, (உடனடியாக ஒரு டீலர்ஷிப் எடுப்பதற்காக) Income Tax அலுவலகத்தில், வியாபாரிகளின் கணக்குகளை சரிபார்த்து சமர்ப்பித்து வரும் ஒரு தனியார் கணக்கரிடம், ரூ. 350/- கொடுத்து, பிறகு ஒரு மாதத்திற்கு பிறகு பான் கார்டு பெறப்பெற்றேன்.   
ஆனால், அதில் First name, Last name உல்டாவாகி, பெயரே தலைகீழாக மாறிப்போய், உடனடியாக வேறு யாரும் டீலர்ஷிப் எடுக்க முயல்வதற்குள்ளாக, ஏதாவது செய்ய வேண்டுமே என்று, மறுபடியும் பல கடிதங்கள் மற்றும் ரூ. 500/-  மேலாக செலவழித்து மீண்டும் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சரியான பெயரில் பான் கார்டு கிடைக்கப் பெற்றேன். 
ஆனால் தற்பொழுது பான் கார்டு பெறும் வழி மேலும் எளிதாக்கப் பட்டுள்ளது. மேலும் ஆன்லைனிலேயே பெறும் வகையில் UTI நிறுவனம் இந்த வசதியை நமக்கு எளிதாக்கியுள்ளது. 
 
இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூ. 744/- மட்டுமே பெறப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், நாமே நிரப்புவதால் பல பிழைகள் தவிர்க்கப் படுகின்றன. இந்த தளத்தின் மூலமாக மட்டுமின்றி, வேறு எப்படி  Apply செய்த பான் கார்டின் Status ஐ அறியவும் PAN Verification என்ற வசதி தரப்பட்டுள்ளது இந்த தளத்தின் தனிச் சிறப்பு.  

UTI Technology Services Limited

.
Advertisements