சூர்யா ௧ண்ணன்

விண்டோஸ் 7/விஸ்டாவில் அலுப்புதரும் அறிவிப்பை நீக்க

விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டா பயனாளர்கள் தங்களது இயங்குதளத்தில் அடிக்கடி ஒரு அறிவிப்பை பார்த்திருக்கலாம். Program Compatibility Assistant என்ற வசனப் பெட்டியில் ‘This Program might not have installed correctly’ என்ற பிழைச் செய்தி  அந்து குறிப்பிட்ட மென்பொருள் வேலை செய்தாலும் கூட, அவ்வப்பொழுது வந்து உங்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.
இந்த PCA என்கிற Program Compatibility Assistant கணினியை புதிதாக உபயோகிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு தேவை என்றாலும், தொடர்ந்து கணினியை உபயோகிப்பவர்கள் பெரும்பாலும் இந்த அறிவிப்பை (நமக்குத்தான் தெரியுமே.. பிறகு என்ன திரும்ப திரும்ப.. ) விரும்புவதில்லை. இதனை நீக்க என்ன செய்யலாம்?
விண்டோஸ் 7 / விஸ்டாவில் சர்ச் பாக்ஸில் gpedit.msc என டைப் செய்து Local Group Policy Editor ஐ திறந்து கொள்ளுங்கள். இதன் இடது புற பேனில் கீழ்கண்ட பகுதிக்கு செல்லுங்கள். 
User Configuration 
Administrative Templates
Windows Components
Application Compatibility
இனி இதன் வலது புற பேனில் Turn off Compatibility Assistant என்பதை க்ளிக் செய்யுங்கள். 
 
இப்பொழுது திறக்கும் திரையில் enabled என்பதை தேர்வு செய்து Apply மற்றும்  Close   கொடுங்கள். 

இனி உங்களுக்கு இந்த அறிவிப்பின் தொல்லை இருக்காது.

. 

Advertisements

Windows Defender ஐ நீக்க

Posted in Remove Windows Defender by suryakannan on ஏப்ரல் 29, 2010
விண்டோஸ் விஸ்டா மற்றும் ஏழு இயங்குதளங்களில் Windows Defender உங்கள் டாஸ்க் பாரில் வந்திருப்பதை பார்த்திருக்கலாம். மைக்ரோசாப்ட் இன் இந்த வசதி உங்கள் கணினியை மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களிலிருந்து  காக்கும் பணியை செய்கிறது. 
 
ஒரு வேளை உங்கள் கணினியில் Kaspersky, Malware bytes போன்ற நல்ல anti  மால்வேர் மென் பொருளை நீங்கள் நிறுவியிருந்தால், இந்த Windows Defender கட்டாயமாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
இது விண்டோஸ் உடன் உள்ளிணைந்த ஒரு கருவி என்பதால் இதனை தனியாக Uninstall செய்ய இயலாது. இதனை செயலிழக்க வைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள சர்ச் பாக்ஸில் Services.msc என டைப் செய்து Services விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இங்குள்ள பட்டியலில்  Windows Defender ஐ தேர்வு செய்து இரட்டை க்ளிக் செய்யுங்கள். 

  இனி திறக்கும் Windows Defender Properties வசனப் பெட்டியில்,

Startup Type என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Disabled என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.

.