சூர்யா ௧ண்ணன்

இணைய பாதுகாப்பு: நண்பர்கள் கணினியில் நீங்கள் பணிபுரியும்பொழுது

Posted in Google Chrome tricks, suryakannan, System tools, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 29, 2010
சில தவிர்க்க முடியாத சமயங்களில் உங்கள் நண்பரது கணினியில் நீங்கள் பணிபுரிய வேண்டிய சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. அவசரமாக மின்னஞ்சல்  பார்க்கவோ அல்லது இணையத்தில் வேறு ஏதாவது தகவல்களை பார்க்கவோ வேண்டியிருக்கலாம். நீங்களும் பணி முடித்து அவரது கணினி அல்லது மடிக்கணினியை அவரிடம் ஒப்படைத்து விடுகிறீர்கள்.
மற்றொரு இடுகையில் நான் சொன்னது போல யாரை நம்ப முடியும்? நீங்கள் சென்றபிறகு, நீங்கள் பயன்படுத்திய உலாவியை திறந்து, நீங்கள் சென்ற தளங்களின் விவரங்களை பார்ப்பது, உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறக்க முயல்வது  (தவறுதலாக ஏதேனும் தளத்தில் லாக்அவுட் செய்துவிட மறந்தால் அவ்வளவுதான்.) என ஒரு சில குறுக்கு புத்திகாரர்களிடமிருந்து நீங்கள் எவ்வாறு தப்பலாம்? 
கூகிள் க்ரோம் உலாவியில் இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது. அதுதான்  Incognito mode எனும் private browsing. இந்த முறையில் நாம் இணையத்தில் உலாவும் பொழுது,  Browser History, Search History மற்றும் கூகீஸ் அந்த கணினியில் சேமிக்கப் படுவதில்லை. எனவே உங்கள் நண்பருக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் தவிர்க்கலாம். 
இதற்குமேல் நண்பர்களது அல்லது பொது கணினிகளில் Google Chrome உலாவியில் பணிபுரியும்பொழுது, Tools பட்டனை க்ளிக் செய்து, மெனுவில்  New incognito window. ஐ க்ளிக் செய்து Private Browsing துவங்கலாம். 
   
அல்லது Ctrl+Shift+N ஷார்ட் கட் கீகளை அழுத்தியும் துவங்கலாம்.  இவ்வாறு துவங்கும் பொழுது, முதல் முறை கீழே உள்ளது போன்ற செய்தி வரும்.

இந்த வகையில் க்ரோம் பயன்படுத்தும் பொழுது உலாவியில் ஏற்கனவே நிறுவியுள்ள நீட்சிகள் அனைத்தும் முடக்க பட்டிருக்கும். தேவையான நீட்சிகளை நீங்கள் enable செய்து கொள்ளலாம். இப்படி Browsing துவங்கும் பொழுது, ஒரு புதிய ஐகான் இடது மூலையில் வந்திருப்பதை கவனிக்கலாம். 
ஏதாவது வலைப்பக்கத்தில் உள்ள லிங்குகளை மட்டிலும் இந்த மோடில் திறக்க, அந்த லிங்கில் வலது க்ளிக் செய்து Open link in incognito window. என்பதை க்ளிக் செய்தால் போதுமானது. 
ஹைலைட்:-
இந்த incognito முறையில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு ஜிமெயில் கணக்குகளில் நுழைந்து கொண்டு பணியாற்றலாம்.  
எனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட உலாவிகளை கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை.
.
Advertisements

விஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க

Posted in Computer Tricks, Laptop Recovery, suryakannan, System tools, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 29, 2010
கடந்த சில வருடங்களாக நமது கணினியில் நாம் பயன்படுத்தி வருவது Serial ATA (SATA) வகையை சார்ந்த வன் தட்டுக்களைத்தான். இதற்கு முன்பு சந்தையிலிருந்த IDE வன்தட்டுக்களை விட இந்த SATA வகை வன் தட்டுக்கள் வேகம் மற்றும் டேட்டா பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து காணப்படுகிறது. 

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் இந்த SATA வகை வன் தட்டுக்களுக்கான மேலதிக வசதி தரப்பட்டிருந்தாலும், Default  ஆக  இது enable செய்யப்பட்டிருப்பதில்லை. இந்த advanced write caching features வசதியை நாம்  enable செய்வதன் மூலமாக நமது கணினியின் வேகத்தை அதிகப்படுத்த முடியும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Start menu வில் உள்ள Search பாக்ஸில் device என டைப் செய்து தோன்றும் Device Manager லிங்கை க்ளிக் செய்து, அல்லது Computer -இல் வலது க்ளிக் செய்து Properties சென்று Device Manager லிங்கை க்ளிக் செய்து Device Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இங்கு உள்ள பட்டியலில் Disk Drives என்பதற்கு கீழாக உங்கள் வன்தட்டின்  மாடல் எண் தரப்பட்டிருக்கும் இதை வலது க்ளிக் செய்து Properties ஐ க்ளிக் செய்யுங்கள். 
அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில் Policies டேபை  க்ளிக் செய்து அதிலுள்ள Enable advanced performance எனும் Check box ஐ தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள். 
அவ்வளவுதான்!
.

உங்கள் கணினியின் தோழன் – கிளாரி யுடிலிடீஸ்

Posted in விண்டோஸ் ஏழு, விஸ்டா ட்ரிக்ஸ், Computer Tricks, System tools by suryakannan on செப்ரெம்பர் 6, 2010
சில சமயங்களில் நமது கணினி வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகம் குறைந்து இயங்குகிறதா? வன்தட்டில் Low Disk Space பிழைச் செய்தி வருகிறதா? இணைய வேகம் குறைந்துள்ளதா? உங்கள் கணினியை optimize செய்து, பாதுகாக்க..   இதோ உங்களுக்கான தோழன் – Glary Utilities. தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவச மென்பொருள் கருவி. (பெயரில் பெண்பால் உள்ளதால் தோழியாகவும் பாவிக்கலாம்)
இது போன்ற பணிக்காக CCleaner எனும் கருவியை பலரும் பயன்படுத்தி வந்தாலும், இது  கிளாரி யுடிலிடீஸ் கருவியில் அதைவிட பல வசதிகள் கூடுதலாக தரப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
இந்த கருவியை பயன்படுத்தி, நம் வன்தட்டில் உள்ள தேவையில்லாத கோப்புகள், கோப்புறைகளை நீக்குவது (தேவையான கோப்பு எது, தேவையில்லாத கோப்பு எதுவென்று அது முடிவு செய்து கொள்ளும்), விண்டோஸ் Registry  யை கிளீன் செய்வது, உடைந்த ஷார்ட் கட்டுகளை  நீக்குவது, Uninstall Manager போன்ற பயனுள்ள வசதிகளும், 
 
 
Startup ஃபோல்டரில் உள்ள தேவையற்ற குப்பைகளை களைவது, நினைவகத்தை சிறந்த பயன்பாட்டிற்கு தயார் செய்தல், Context menu Manager ஆகிய வசதிகளும் .
கோப்புகளின் பாதுகாப்பு, இணைய வேகத்தை அதிகரிக்க என பல வகையான வசதிகளுடன் இருப்பது இதனுடைய சிறப்பம்சம். 
ஒருவேளை இதனை இயக்கிய பிறகு உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மறுபடியும் Restore செய்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதிலுள்ள Context menu வசதி குறிப்பிட்ட கோப்புறைக்குள் உள்ள கோப்புகளை கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Glary Utilities தரவிறக்க 
.