சூர்யா ௧ண்ணன்

இணைய பாதுகாப்பு: நண்பர்கள் கணினியில் நீங்கள் பணிபுரியும்பொழுது

Posted in Google Chrome tricks, suryakannan, System tools, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 29, 2010
சில தவிர்க்க முடியாத சமயங்களில் உங்கள் நண்பரது கணினியில் நீங்கள் பணிபுரிய வேண்டிய சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. அவசரமாக மின்னஞ்சல்  பார்க்கவோ அல்லது இணையத்தில் வேறு ஏதாவது தகவல்களை பார்க்கவோ வேண்டியிருக்கலாம். நீங்களும் பணி முடித்து அவரது கணினி அல்லது மடிக்கணினியை அவரிடம் ஒப்படைத்து விடுகிறீர்கள்.
மற்றொரு இடுகையில் நான் சொன்னது போல யாரை நம்ப முடியும்? நீங்கள் சென்றபிறகு, நீங்கள் பயன்படுத்திய உலாவியை திறந்து, நீங்கள் சென்ற தளங்களின் விவரங்களை பார்ப்பது, உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறக்க முயல்வது  (தவறுதலாக ஏதேனும் தளத்தில் லாக்அவுட் செய்துவிட மறந்தால் அவ்வளவுதான்.) என ஒரு சில குறுக்கு புத்திகாரர்களிடமிருந்து நீங்கள் எவ்வாறு தப்பலாம்? 
கூகிள் க்ரோம் உலாவியில் இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது. அதுதான்  Incognito mode எனும் private browsing. இந்த முறையில் நாம் இணையத்தில் உலாவும் பொழுது,  Browser History, Search History மற்றும் கூகீஸ் அந்த கணினியில் சேமிக்கப் படுவதில்லை. எனவே உங்கள் நண்பருக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் தவிர்க்கலாம். 
இதற்குமேல் நண்பர்களது அல்லது பொது கணினிகளில் Google Chrome உலாவியில் பணிபுரியும்பொழுது, Tools பட்டனை க்ளிக் செய்து, மெனுவில்  New incognito window. ஐ க்ளிக் செய்து Private Browsing துவங்கலாம். 
   
அல்லது Ctrl+Shift+N ஷார்ட் கட் கீகளை அழுத்தியும் துவங்கலாம்.  இவ்வாறு துவங்கும் பொழுது, முதல் முறை கீழே உள்ளது போன்ற செய்தி வரும்.

இந்த வகையில் க்ரோம் பயன்படுத்தும் பொழுது உலாவியில் ஏற்கனவே நிறுவியுள்ள நீட்சிகள் அனைத்தும் முடக்க பட்டிருக்கும். தேவையான நீட்சிகளை நீங்கள் enable செய்து கொள்ளலாம். இப்படி Browsing துவங்கும் பொழுது, ஒரு புதிய ஐகான் இடது மூலையில் வந்திருப்பதை கவனிக்கலாம். 
ஏதாவது வலைப்பக்கத்தில் உள்ள லிங்குகளை மட்டிலும் இந்த மோடில் திறக்க, அந்த லிங்கில் வலது க்ளிக் செய்து Open link in incognito window. என்பதை க்ளிக் செய்தால் போதுமானது. 
ஹைலைட்:-
இந்த incognito முறையில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு ஜிமெயில் கணக்குகளில் நுழைந்து கொண்டு பணியாற்றலாம்.  
எனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட உலாவிகளை கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை.
.
Advertisements

விஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க

Posted in Computer Tricks, Laptop Recovery, suryakannan, System tools, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 29, 2010
கடந்த சில வருடங்களாக நமது கணினியில் நாம் பயன்படுத்தி வருவது Serial ATA (SATA) வகையை சார்ந்த வன் தட்டுக்களைத்தான். இதற்கு முன்பு சந்தையிலிருந்த IDE வன்தட்டுக்களை விட இந்த SATA வகை வன் தட்டுக்கள் வேகம் மற்றும் டேட்டா பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து காணப்படுகிறது. 

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் இந்த SATA வகை வன் தட்டுக்களுக்கான மேலதிக வசதி தரப்பட்டிருந்தாலும், Default  ஆக  இது enable செய்யப்பட்டிருப்பதில்லை. இந்த advanced write caching features வசதியை நாம்  enable செய்வதன் மூலமாக நமது கணினியின் வேகத்தை அதிகப்படுத்த முடியும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Start menu வில் உள்ள Search பாக்ஸில் device என டைப் செய்து தோன்றும் Device Manager லிங்கை க்ளிக் செய்து, அல்லது Computer -இல் வலது க்ளிக் செய்து Properties சென்று Device Manager லிங்கை க்ளிக் செய்து Device Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இங்கு உள்ள பட்டியலில் Disk Drives என்பதற்கு கீழாக உங்கள் வன்தட்டின்  மாடல் எண் தரப்பட்டிருக்கும் இதை வலது க்ளிக் செய்து Properties ஐ க்ளிக் செய்யுங்கள். 
அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில் Policies டேபை  க்ளிக் செய்து அதிலுள்ள Enable advanced performance எனும் Check box ஐ தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள். 
அவ்வளவுதான்!
.

விண்டோஸ் செக்யூரிட்டி: நண்பர்களோடு உங்கள் கணினியை பகிரும் பொழுது..

Posted in மென்பொருள் உதவி, suryakannan, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 27, 2010
நீங்கள் உங்களது கணினியில் ஏதாவது முக்கியமான அல்லது இரகசியமான டாக்குமெண்டுகளை டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது, திடிரென வரும் உங்கள் நண்பர் ‘ஒரு சில நிமிடங்கள் உங்கள் கணினியை பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என்று கேட்கும் பொழுது உங்களால் மறுக்க முடியாது. உங்கள் டாக்குமெண்டுகளை மினிமைஸ் செய்து விட்டு  நண்பருக்கு உங்கள் கணினியை அல்லது மடிக்கணினியை கொடுக்கிறீர்கள். 
இந்த காலத்தில் எத்தனை நண்பர்கள் உண்மையானவர்களாக இருக்கிறார்கள்? நீங்கள் கொஞ்சம் அசந்தால் போதும் அவர், நீங்கள் மினிமைஸ் செய்து வைத்த டாக்குமெண்டை திறந்து பார்த்து, பின்னர் ஒன்றும் தெரியாதது போல உங்களிடம் கணினியை, அவரது பணி முடிந்து விட்டதாக கூறி ஒப்படைத்து விடுவார். ஆனால் பின்னாளில் அவர் வைக்கப் போகும் ஆப்பு!  இன்று அவர் உங்களை அறியாமல் பார்த்த அந்த குறிப்பிட்ட டாக்குமெண்ட் சம்பந்தமானதாக இருக்கலாம் யார் கண்டது? 
இது போன்ற சமயங்களில், நீங்கள் மினிமைஸ் செய்யாமல் அனைத்தையும் மூடிவிட்டு, உங்கள் நண்பருக்கு கொடுத்தால், அவர் உங்களை தவறாக நினைத்து விடுவாரோ? என்று வெள்ளந்தியாக யோசிப்பது புரிகிறது. சரி, இதற்கு சரியான தீர்வு LockThis! எனும் இலவச மென்பொருள் கருவி! 
இந்த மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு, இதில் உள்ளிருப்பு கடவு சொல்லை மாற்ற வேண்டும். System tray யில் உள்ள இந்த LockThis! ஐகானை வலது க்ளிக் செய்து, Admin panel ஐ சொடுக்குங்கள். 
பிறகு கடவு சொல் கேட்கும் பொழுது LockThis! என்பதை கொடுங்கள். இதுதான் முதன் முதலாக இதை பயன்படுத்தும் பொழுது உள்ளிருக்கும் கடவு சொல். இதைத்தான் நாம் மாற்ற வேண்டும். இனி Admin panel லில் Change Admin Password பொத்தானை சொடுக்கி புதிய கடவு சொல்லை கொடுக்கவும். 
இரண்டு முறை கடவு சொல்லை கொடுத்து OK பட்டனை சொடுக்கிய பின்னர் வரும் சிறு வசனப் பெட்டியில் OK பட்டனை சொடுக்கி புதிய கடவு சொல்லை activate செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்! இனி உங்கள் நண்பருக்கு கணினியை கொடுக்கும்பொழுது, உங்கள் டாக்குமெண்டை கண்ட்ரோல் கீயை அழுத்திய படி Minimize பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது. 

 

மறுபடி கடவு சொல் கொடுத்துதான் திறக்க முடியும்! 
LockThis! தரவிறக்க   
.

360º வியூ மைசூர் அரண்மனை: கலக்கல்.. அவசியம் பாருங்க..

Posted in இணையம் டிப்ஸ், suryakannan, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 25, 2010
இணையத்தில் 360º வியூவில் பல முக்கியமான இடங்களை நாம் பார்த்திருப்போம், கட்டிடக்கலையில் அசத்தும் மைசூர் அரண்மனையின் 360º வியூ.
மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 
21 பணரோமிக் படங்களை உள்ளடக்கியது. சிறந்த ஆடியோ விளக்கமும் உண்டு..
ஆங்காங்கே உள்ள கேமராவை க்ளிக் செய்து மேலதிக விவரத்தை பார்க்கலாம். 
அரண்மனையின் உள்ளே உள்ள ஒவ்வொரு அறையும், அதன் விளக்கமும் மிக அருமை. 
அசத்தலான ஆர்க்கிடேக்ச்சர்! நேரில் பலரும் பார்த்திருந்தாலும், இந்த தளத்தில் பொறுமையாக ரசிக்கலாம். 
அவசியம் பாருங்க.. 
360º மைசூர் அரண்மனை
.

லேப்டாப் டிப்ஸ் – புதியவர்களுக்கு

தொடர்ந்து மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரும். அது, தங்களது மடிகணினியை ஷட்டௌன்  செய்யாமல் மூடி வைக்கும்பொழுது Sleep mode இற்கு செல்ல வேண்டுமா? Hybernate ஆகவேண்டுமா? Shut down ஆக வேண்டுமா? அல்லது எதுவுமே ஆகக் கூடாதா? இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும்? 

விண்டோஸ் Taskbar – System Tray இல் உள்ள Battery ஐகானை வலது க்ளிக் செய்து Power Options லிங்கை க்ளிக் செய்யுங்கள். 
இப்பொழுது திறக்கும் திரையில் இடது பிரிவில் உள்ள Choose what closing the lid does என்ற லிங்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள். 
அடுத்து திறக்கும் திரையில் When I close the lid என்பதற்கு நேராக உள்ள Drop down லிஸ்டில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளலாம். 
இதில் Sleep வசதியே உகந்தது, சில சமயங்களில் திரை அவசியப்படாமல் ஏதாவது பாடல்களை கேட்க வேண்டுமென்றால் Do nothing வசதியை தேர்வு செய்து கொள்ளலாம். 
சிக்ஸ்த் சென்ஸ் – பிரணவ் மிஸ்ட்ரி குறித்தான நண்பர் கக்கு மாணிக்கத்தின் பதிவு – அவசியம் பாருங்கள்! ஆச்சர்ய படுவீர்கள்..

Q-Dir File Manager – பயனுள்ள கருவி!

Posted in மென்பொருள் உதவி, Computer Tricks, Windows Security by suryakannan on ஓகஸ்ட் 9, 2010
நமது கணினியில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிஷன்களில் கோப்புகளை காப்பி செய்வது, மூவ் செய்வது, ஒப்பிட்டு பார்ப்பது போன்ற பல காரியங்களுக்காக நாம் வழக்கமாக உபயோகிக்கும் விண்டோஸ் Explorer ஒரே ஒரு pane மட்டுமே உள்ளதால் நம்மால் விரைவாக, துல்லியமாக கோப்புகளை கையாள இயலுவதில்லை.
இது போன்ற கோப்புகளின் மேலாண்மைக்காகவே Multi pane வசதி கொண்ட Q-Dir என்ற மென்பொருள் கருவி பல வகையிலும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 
ஒரே விண்டோவில் அதிக பட்சமாக நான்கு pane களை வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலமாக ஒரே சமயத்தில் நான்கு கோப்புறைகள் அல்லது நான்கு ட்ரைவ்களை கையாள முடியும்.
Tree View உட்பட நமக்கு தேவையான வகையில் கோப்புகளின் பட்டியலை  மாற்றியமைக்க முடியும்.

இதிலுள்ள options பகுதிக்கு சென்று, Context menu வில் புதிதாக எதாவது சேர்க்க வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் preview வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதிலுள்ள Colors டேபிற்கு சென்று குறிப்பிட்ட கோப்பு வகைகளுக்கு விருப்பமான நிறங்களை தேர்வு செய்து கொள்வதன் மூலமாக பலத்தரப் பட்ட கோப்பு வகைகளையும் எளிதாகவும், விரைவாகவும் கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் பல வசதிகள் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது பயன்படுத்திப் பாருங்கள்.

   

.

இரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்

பலரும் தங்களது வன்தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட  பார்ட்டிஷன்களை வைத்திருப்பது வழக்கம். தங்களுக்கு தேவையான, இரகசியமான கோப்புகளை ஒரு குறிப்பிட்ட ட்ரைவில் வைத்திருப்போம். ஒருவேளை உங்கள் கணினி, குடும்ப உறுப்பினர்கள் அல்லது அலுவலக சகாக்கள் என பலரும் உபயோகிப்பதாக இருந்தால், இது போன்ற கோப்புகளை மற்றவர்கள் பார்வையிடாமலோ அல்லது டெலிட் செய்யாமலோ தடுக்க விண்டோஸில் ஒரு சின்ன ட்ரிக் என்னவென்று பார்க்கலாம்.    
நாம் எப்படி இதை சாத்தியப்படுத்தப் போகிறோம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அதாவது, நமது இரகசிய, முக்கிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் அனைத்தையும் தனியாக ஒரு ட்ரைவில் வைத்துவிட்டு, அந்த குறிப்பிட்ட ட்ரைவை எவரும் கையாள முடியாதவாறு முடக்கப் போகிறோம். 
Start menu வில் Run அல்லது search box (Windows vista/7) சென்று gpedit.msc என தட்டச்சு செய்து என்டர் கொடுங்கள். 
இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில் இடதுபுற பேனில் User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer என்ற பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Windows Explorer ஐ க்ளிக் செய்தபிறகு, வலது புற Settings டேபில் Prevent access to drives from My Computer என்பதை இரட்டை க்ளிக் செய்திடுங்கள். 
இனி திறக்கும் வசனப்பெட்டியில் enabled ரேடியோ பட்டனை கிளி செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள options பெட்டியில் எந்தெந்த ட்ரைவ்களை Restrict செய்ய வேண்டுமோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
அவ்வளவுதான்! நம்ம ட்ரிக் முடிஞ்சது. இனி My Computer திறந்து பார்க்கும் பொழுது, நாம் restrict செய்த ட்ரைவ் தெரியும், ஆனால் அதை திறக்க முயலும் பொழுது, கீழே தரப்பட்டுள்ளது போன்ற பிழைச் செய்தி வரும். 
மறுபடியும் பழையபடி மாற்ற, மேலே சொன்ன அதே வழியை பின்பற்றி Disable க்ளிக் செய்தால் போதுமானது. இந்த ட்ரிக்கை விண்டோஸ் ஹோம் பதிப்புகள் தவிர்த்து மற்ற பதிப்புகளில்  செய்ய இயலும். (Administrative Rights உங்களுக்கு இருக்க வேண்டும்) 
.

விண்டோஸ் செக்யூரிட்டி – 2

முக்கியமான வேலையாக கணினியை ஆன் செய்து விட்டு, விண்டோஸ் XP பூட் ஆவதற்குள்ளாக, மற்றொரு சிறு வேலையை முடித்துவிட்டு வரலாமே என்ற எண்ணத்தில் செல்கிறீர்கள். அந்த வேலையை முடித்துவிட்டு கணினியின் முன் வந்து பார்த்தால் ஒரு சில கணினிகளில் விண்டோஸ் Log on திரையில் கடவு சொல்லை கேட்டு காத்திருப்பதை கவனித்திருக்கலாம். 
இனி கடவு சொல் கொடுத்து, விண்டோஸ் திறக்கும் வரையில் காத்திருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முறையும், ஒரு குறிப்பிட்ட பயனர் கணக்கிற்கு கடவு சொல் கொடுக்காமல், கணினி ஆன் செய்தவுடனேயே, Auto Log in ஆக என்ன செய் வேண்டும் என்பதை பார்க்கலாம். 
Start menu வில் Run சென்று control userpasswords2   என டைப் செய்து என்டர் கொடுங்கள். 
   
இப்பொழுது திறக்கும் User Accounts திரையில் Users டேபில் உள்ள பயனர்கள் பட்டியலில், எந்த பயனர் கணக்கு Auto Login ஆக வேண்டுமோ, அந்த பயனர் கணக்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள். 
இனி மேலே உள்ள Users must enter a user name and password to use this computer  என்ற செக் பாக்சை uncheck செய்து OK கொடுத்து விடுங்கள். மறுபடியும் கடவு சொல்லை கேட்கும் Automatically Log on   வசனப் பெட்டியில் சரியான கடவு சொல்லை கொடுத்து OK கொடுங்கள். 
  
அவ்வளவுதான்! இனிமேல் விண்டோஸ் துவக்கத்தில் கடவு சொல் கேட்க்காது. 
. 

விண்டோஸ் செக்யூரிட்டி – 1

Posted in Computer Tricks, Windows Security, Windows7 by suryakannan on ஜூன் 14, 2010
பல கணினிகளில் Administrator மற்றும் தனித்தனியாக லிமிடெட் User கணக்குகள் இருப்பது வழக்கம். ஒருவேளை நீங்கள் அந்த கணினியின் Administrator ஆக உள்ளீர்கள். அந்த கணினியை பயன்படுத்தும் மற்ற பயனாளர்கள், அதில் நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகள் அனைத்தையும் பயன்படுத்தாமல், நீங்கள் அனுமதி அளிக்கும் பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்தும்படி உங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் என்ன மாறுதல் செய்ய வேண்டும் என்பதை பார்க்க்கலாம். 
Start menu வில் Run (விண்டோஸ் 7 /விஸ்டா வில் search box) gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது Local Group Policy Editor விண்டோ திறக்கும். 
இதன் இடதுபுற பேனில் User Configuration -> Administrative Templates -> System என்பதை க்ளிக் செய்யுங்கள். 
இனி வலதுபுற பேனில் உள்ள Run only allowed Windows applications என்பதை இரட்டை க்ளிக் செய்யுங்கள்.
இந்த திரையில் enabled என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
     
இனி கீழே உள்ள பெட்டியில் உள்ள Show பட்டனை க்ளிக் செய்து, திறக்கும் Show Contents வசனப் பெட்டியில் Add பொத்தானை அழுத்தி தேவையான அப்ப்ளிகேஷங்களின் EXE கோப்பின் பெயர்களை ஒவ்வொன்றாக கொடுத்து பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.   

பிறகு OK கொடுத்து சேமித்து koLLungaL. அவ்வளவுதான். இனி உங்கள் கணினியில் மற்ற பயனாளர்கள், நீங்கள் அனுமதி அளித்துள்ள அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்து இயலும்.   

நண்பர் எசாலத்தான்!
தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்..

நான் இந்த கட்டுரையின் முதல் பாராவில் குறிப்பிட்டுள்ளது போல, நீங்கள் அந்த கணினியின் administrator ஆக இருக்க வேண்டும்.  அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் அந்த லிஸ்டில் gpedit.msc, ஐ சேர்க்காத பொழுது, உங்களுக்கு மறுபடியும் சரிசெய்யும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.

ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை.. உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து F8 கீயை அழுத்தி safemode இல் சென்று Administrator கணக்கில் நுழைந்து கொண்டு, ரன் கட்டளையில் gpedit.msc கொடுத்து மறுபடியும் disable செய்து கொள்ளலாம்.

அன்புடன்
சூர்யா கண்ணன்     

.